Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு

Published:Updated:

பார்த்திபன் மனசு!

றவுகளுக்கும், கதைக்கும் சிம்மாசனம் கொடுக்கும் படங்களின் இயக்குநர், நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதயமெனும் தீபத்தில் மனிதம் எனும் ஒளி பரவட்டும். புத்தாடை எடுத்து, வீட்டை அலங்கரித்து, பாத்திரங்கள் நிறைய பலகாரங்கள் சுட்டு, இஷ்டதெய்வ கோயிலுக்குச் சென்று வந்து, மறுநாள் காலை வீட்டு வாசலில் காகிதக் கிழிசல்கள் கூட்டிக் குவிக்கும் அளவுக்கு பட்டாசுகள் வெடித்து... இப்படிக் கொண்டாடும் தீபாவளியுடன், இந்த வருடம் இதையும் செய்து பாருங்களேன். அதாவது, உங்களிடம் நிரம்ப இருக்கும் பொருட்களை, உணவு வகைகளை எதுவும் இல்லாதவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள்... அவ்வளவு நிறைவும் மகிழ்வும் தரும் இந்த தீபாவளி. 'அவள் விகடன்’ தோழிகளுக்கு அட்வான்ஸ் ஒளித்திருநாள் வாழ்த்துகள்!'' என்று இதழ்களில் தவழும் புன்னகையுடன் சொல்லும் பார்த்திபன், பல விஷயங்களை நேரடியாக உங்களிடமே சொல்லக் காத்திருக்கிறார்.

 'ஒட்டுண்ணி மனசு’ என்பார்களே... அப்படியென்றால் என்ன?

 'மகிழ்ச்சி’ என்பது பெறுவதா, தருவதா?

 பாரம்பர்யப் பழக்க வழக்கங்களை படிப்படியாகத் தொலைத்து வருகிறோம் என்கிறார்கள். இதை மட்டுமா தொலைத்து வருகிறோம்?

 சினிமா உறவுகளுக்கும் நிஜ உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 பல விஷயங்களைக் கற்றுப் படமெடுக்கிறோம். அந்தப் படம் மூலமாக எதையெல்லாம் கற்கலாம்?

- இன்னும் பல விஷயங்களுடன் காத்திருக்கும் பார்த்திபனை மிஸ் செய்திடாமலிருக்க, தினமும் மூன்று நிமிடங்கள் ஒதுக்குங்கள். இது, நிச்சயம் உங்கள் மனதில் மகிழ்ச்சி மத்தாப்பு பூக்க வைக்கும்!

அக்டோபர் 7 முதல் 13 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

ஆரோக்கிய வாழ்வுக்கு... அசத்தல் உணவுகள்

'பீட்ஸா டு பழங்கஞ்சி’ என்ற தலைப்பில், 26.8.2014 தேதியிட்ட இதழில், மாறிவரும் உணவு முறை பற்றியும், முன்னோர்கள் புராண காலம் தொட்டு வழிவழியாக பயன்படுத்தி வந்த உணவுகள் பற்றியும் பகிர்ந்திருந்தார் உலக அளவில் பிரபலமான, தமிழகத்தைச் சேர்ந்த 'செஃப்’ சுல்தான்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

மொகைதீன். அதைப் படித்த நம் வாசகி ஒருவர், 'கலங்காதிரு மனமே’ பகுதியில் சுல்தான் பேசினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று தன் யோசனையைச் சொல்ல, சந்தோஷமாக தலையசைத்தார் சுல்தான்.

''தீபாவளிக்கு... எண்ணெய்ப் பலகாரங்கள், பொங்கல் பண்டிகைக்கு... பொங்கல் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் உணவு வகைகளையும் வகுத்து வைத்துள்ளனர் நம் முன்னோர். ஆனால், ஸ்வீட் ஸ்டால்களிலும், பேக்கரிகளிலும் ரெடிமேடு ஸ்நாக்ஸ் வாங்கித்தான் இன்று பண்டிகை கொண்டாடுகிறோம். இதற்கு 'பண்டிகை’ என்ற ஒரு சிறப்பு தினமே தேவையில்லையே? எனவே, எல்லா பண்டிகை தினங்களிலும் நம் பாரம்பர்ய உணவுகளை வீட்டில் செய்யும் பழக்கத்துக்கு மாறுங்கள் தோழிகளே!'' என்று வேண்டுகோள் வைக்கும் சுல்தான், அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகளைச் சொன்னார் நம் தோழிகளுக்கு!  

 சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பார்களே... உணவு விஷயத்தில் அது சரியாகப் பொருந்தும். எப்படி?

 பாரம்பர்ய உணவால் பெற்றவை, மாடர்ன் உணவால் தொலைத்தவை என்னென்ன?

 விதம்விதமான ஸ்பூன், கலர் கலரான பிளாஸ்டிக் கப்... இவையெல்லாம் தேவைதானா?

 வருங்கால சமூகமான இன்றைய குழந்தைகளிடம் உணவு குறித்து வளர்க்க வேண்டிய முக்கியப் பண்புகள் என்னென்ன?

- இப்படி இன்னும் பல விஷயங்களை உங்களிடம் பகிரக் காத்திருக்கிறார் 'செஃப்’ சுல்தான் மொகைதீன். தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்கி, அவருக்கு ஒரு போன் போடுங்கள். இது, உங்களை ஆரோக்கிய உணவை நோக்கி நிச்சயம் அழைத்துச் செல்லும்!

அக்டோபர் 14 முதல் 20 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

 இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

* சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism