Published:Updated:

கொசுவுக்கு எதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது? #WorldMosquitoDay

கொசுவுக்கு எதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது? #WorldMosquitoDay
கொசுவுக்கு எதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது? #WorldMosquitoDay

பற்களே இல்லாத ஓர் உயிரினம் மனிதனை கடித்து படுக்கையில் தள்ள முடியுமா? கொசுவினால் முடியும். 'கொசு' நுளம்பு க்யூலிசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். உருவில் சிறியவையாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை. ஆண் கொசுக்கள் தாவரசாற்றை மட்டுமே பருகும். பெண்கொசுக்கள்  தான் மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும்.

உலக கொசு தினம்:

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5-வது இடத்தில் உள்ளது. மலேரியாவால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பதாகவும், இந்நோய் தாக்கப்பட்ட ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு குழந்தை பலியாவதாகவும் ஐ.நா.தெரிவித்துள்ளது.

" அனாஃபிலஸ்" என்ற பெண் கொசுக்கள் மூலம்தான் மலேரியா பரவுகிறது என்று 1897ம் ஆண்டில் மருத்துவர் ரெனால்டு ரோஸ் கண்டறிந்தார். இந்த நாளின் நினைவாகவும், கொசுக்களின் ஆபத்துக்கள் குறித்தும் அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ம் தேதி உலக கொசு தினம்  கொண்டாடப்படுகிறது. 

 கொசுக்களில் 3,000க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இவை அனைத்திற்கும்  'ரூட்டு தலை' ஆக செயல்படுவது மலேரியாவை உருவாக்கும் அனாஃபிலஸ், டெங்குவை உருவாக்கும் ஏடிஸ் ,யானைக்கால்நோய் மூளைக்காய்ச்சலை உருவாக்கும் க்யூலக்ஸ் இவையே...

கொசுக்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை :
1. ஆண் கொசுக்கள் 10 நாள்களுக்கும் குறைவாகவே உயிர்வாழும், பெண் கொசுக்கள் 6-8 வாரம் வரை உயிர்வாழும்.

2.கொசுக்கள் வெகுதூரம் பயனிப்பதில்லை; 3 மைல்களுக்குள்ளாக பரப்பதை நிறுத்திக்கொள்கின்றன.

3.பெண்கொசுக்கள் தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும் ; ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் இடும். இந்த வேகத்தில் இனப்பெருக்கம் செய்தால் ஆறே தலைமுறையில் அதன்  சந்ததிகளின் எண்ணிக்கை 3,100கோடியை எட்டிவிடும்.

4.ஆண்கொசுக்கள் தாவரச்சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கும்.பெண் கொசுக்கள் முட்டைகளை உருவாக்க தேவைப்படும் புரதத்தை  பெறுவதற்காகவே இரத்தம் குடிக்கின்றன.

5.கொசுக்களால் அதன் எடையை விட 3மடங்கு இரத்தம் உறிய முடியும்.

6.மனித உடலில் இருந்து வெளியிடப்படும் Co2 கார்பன் டை ஆக்சைடு, வியர்வை போன்றவற்றை கொசுக்களால் அறிய இயலும்.

7.கொசுக்கள் மனிதனின் வெப்பத்தை உணர்ந்து எவரை கடிக்கலாம் என தீர்மானிக்கிறது.

8.கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களாக , டைனோசர் காலத்தில் இருந்து உயிர் வாழ்கின்றன.  

9.கொசுக்களால் எய்ட்ஸ் நோயை பரப்ப இயலாது.

10.(Dark) இருண்ட துணிகள் கொசுவை ஈர்க்கும். ஏனெனில் இவ்வகை துணிகள் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

கொசு ஒழிப்பு:
கொசுப்புழுக்களால் நீரில் மூச்சு  விட முடியாது. எனவே அவை மூச்சு விட நீரின் மேல்மட்டத்திற்கு வரும்.  கொசுக்களை அழிக்க இதுவே சரியான நேரம், நீரின் மீது மண்ணெண்ணெயை தெளித்தால் அவை அழிந்துவிடும். டயர்கள்,தகரங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கலாம்.  வீட்டைசுற்றி துளசி, திருநீற்று செடியை வளர்க்க, கொசு  வருவது குறையும். கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் சல்பர். கற்பூரம் சல்பரினால் ஆனது. மண்ணெண்ணெய் மற்றும் கற்பூரம் இந்த இரண்டுமே மிகசிறந்த கொசுக்கொல்லிகள். பூண்டு வாசனையும்  கொசுவுக்கு ஆகாது.
       
கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet), தனது உயிர் அறிவியல் துறையான வெரிலி (Verily Life Science) உதவியுடன் 20 மில்லியன் கொசுக்களை கலிஃபோர்னியாவிலிருந்து பறக்கவிடப்போகிறது. சிட்டி ரோபோ போல் ரங்கூஸ்கி கொசுவைக் கண்டுபிடிக்கும் முயற்சியோ என்று ஆச்சர்யப்பட வேண்டாம். இது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒட்டுமொத்த கொசு இனத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.