Published:Updated:

"அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள்"- பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் 'மெர்சல்' பேச்சு

"அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள்"- பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் 'மெர்சல்' பேச்சு
"அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள்"- பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் 'மெர்சல்' பேச்சு

"அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள்"- பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் 'மெர்சல்' பேச்சு

'மெர்சல்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் விஜய்," எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும்தான்" என்று பேசினார் 

'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் விஜய் இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'மெர்சல்'. இருவரும் கூட்டணி அமைந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பயங்கரமான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்தப் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'நீதானே நீதானே' பாடல்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர். ரகுமான், அட்லி, இயக்குநர் பார்த்திபன், எஸ்.ஜே சூர்யா, சுந்தர் சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இந்த வருடம் நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் ரகுமான் ஆகியோருக்கு திரை உலகில் 25-ம் ஆண்டு ஆகும். விழாவில் பேசிய ரகுமான், "இந்த படத்தில் ஆளப் போறான் தமிழன் என்ற பாடல் இருக்கு. அத உண்மை ஆக்கி காட்டுங்கள்" என்றார்.

 நிகழ்ச்சியில் நிறைவாக மேடை ஏறிய நடிகர் விஜய் தனது ஸ்டைலில் ரசிகர்களிடம் பேசினார். 100-வது படம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் 25-வது வருடத்தில் அடியடுத்து வைக்கும் ரகுமானுக்கு வாழ்த்துகள் சொல்லி பேசத் தொடங்கினார். அப்போது அவர், "வாழ்க்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அதவிட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும் அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும்தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா" என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு