முந்தைய சந்திப்பில், 'உங்களின் தற்போதைய கமிட்மென்ட் என்ன?’ என்று கேட்டு முடித்திருந்தேன்.

''நீங்க கேட்டவுடன்தான் யோசிச்சுப் பார்த்தேன். கமிட்மென்ட்னு ஏதும் இல்லாம, அன்னன்னிக்கு பொழுதைக் கடத்தினா போதும்னு ஓடிக்கிட்டிருக்கிறதை அப்போதான் உணர்ந்தேன். ஆனா, இப்போ ஏதாவது கமிட் பண்ணிக்கணும்னு தோணுது!'' என்றார் வாசகத் தோழி ஒருவர். கமிட்மென்ட் பற்றி இந்த இதழிலும் கொஞ்சம் தொடர்ந்து பேசுவோமா!  

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கமிட்மென்ட் கட்டாயமாக இருக்க வேண்டும். கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கை உயிரற்ற உடல் போன்றது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இலக்கில்லாத பயணமாக நம் வாழ்க்கையை அது மாற்றிவிடும். லோயர் கிளாஸ், மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் என்று எந்தப் பொருளாதாரப் பிரிவில் இருந்தாலும், பணம், கல்வி, பதவி, உடல்நலம் என்று அவர்களின் சூழலுக்கு ஏற்ற ஒரு ஆரோக்கிய கமிட்மென்ட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. வளர்ச்சி இல்லாமல் இருப்பது குற்றமில்லை. ஆனால், முயற்சி இல்லாமல் இருப்பதுதான் பெரும்குற்றம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கருக்கு அரை லட்சத்துக்கு மேல் சம்பளம். அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம். சமையலறை ஸ்பூனில் இருந்து கார் வரை மனைவியோடு வரதட்சணையாக வந்த பொருட்கள் வீட்டை நிறைத்திருந்தன. கையில் இரண்டு மாத குட்டிப் பாப்பா. 'வீடு இருக்கு, கார் இருக்கு, வீட்டில் எல்லா விலையுயர்ந்த பொருட்களும் இருக்கு, மனைவிகிட்ட நிறைய நகைகள் இருக்கு, கைநிறைய சம்பளம் வருது... இதுக்கு மேல என்ன வேணும்? வாழ்க்கையை அனுபவிச்சா போதும்!’ என்பதுதான் சங்கரின் மன ஓட்டம்.

ஆல் இஸ் வெல்! - 3

சம்பளம் மொத்தமும் ஷாப்பிங், அவுட்டிங், மால், ரெஸ்டாரன்ட், டூர் என்று 'ஹைஃபை’ செலவுகளில் கரைந்தது. தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்கும், இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான தன் பாஸைவிட சொகுசான வாழ்க்கையைத் தான் வாழ்வது குறித்து ஒரு அசட்டையான பெருமிதம் சங்கருக்கு.

சங்கரின் சம்பளத்தில் பாதியளவே வாங்கும் வெங்கட், தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க, 'இப்போதான் வீடு வாங்கறீங்களா?’ என்றான் சங்கர் எள்ளலாக. 'இல்ல சார். ஏற்கெனவே ஒரு வீடு இருக்கு. அந்த லோன் முடிஞ்சதால, இப்போ இன்னொரு பெரிய வீடா 60 லட்சத்துக்கு வாங்குறோம்!’ என்றபோது, வாடிப்போனான் சங்கர். காரணம், அவன் குறிப்பிட்ட தொகை இவன் வீட்டின் மதிப்பைவிட அதிகம்.

சங்கரின் சக ஊழியர் ஸாம், 'ஜாப் புரமோஷன் எக்ஸாமுக்கு தீவிரமா படிச்சிட்டு இருக்கேண்டா...’ என்றபோது, 'ஏண்டா இப்படி டார்ச்சர் ஆகுற..? இப்போவே நல்ல சம்பளத்தில்தானே இருக்க!’ என்றான். 'அதுக்காக..? வெந்த சோற்றை சாப்பிட்டு விதி வழி போறது வாழ்க்கையாடா..? லைஃப்ல எப்பவுமே 'அடுத்து என்ன... அடுத்து என்ன?’னு ஒரு கோல் இருக்கணும்!’ என்றபோது சுரீர் என்றது சங்கருக்கு. இப்போது சங்கரும் ஸாமுடன் சேர்ந்து ஜாப் புரமோஷன் எக்ஸாமுக்கு படித்துக்கொண்டிருக்கிறான்.

ஆல் இஸ் வெல்! - 3

'ஆமா... இப்படிப்பட்ட ஆளையெல்லாம் கணவரா வெச்சிக்கிட்டு கமிட்மென்ட் பற்றி நினைச்சுப் பார்க்க முடியுமா?’ என்று குறைபாடும் தோழிகளே... உங்கள் கணவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாதிருக்கலாம். ஆனால், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்துக்காக ரெக்கரிங் டெபாசிட் மூலமாக வங்கியில் சேமிப்பது தொடங்கி, திருமணத்தால் விட்டுப்போன படிப்பை தபால் மூலமாக முடிப்பது வரை உங்களை நீங்களே கமிட் செய்துகொள்ளுங்கள். வேறு பிரச்னைகள் எதுவும் மனதை அழுத்த நேரம் கொடுக்காமல், உங்கள் கமிட்மென்ட்டில் நீங்கள் அமிழ்ந்து போங்கள்.

அப்படி நம் வாழ்க்கையை அர்த்தமாக்கும் கமிட்மென்ட் ஒருவருக்கு உளப்பூர்வமான கமிட்மென்ட்டாக இருக்க வேண்டும். மற்றவர் சொல்லியோ, சமூகத்தின் கட்டாயத்தாலோ, அல்லது கடமைக்கென்றோ ஒரு விஷயத்தில் நம்மை கமிட் செய்துகொண்டால், அதை நிறைவேற்றும் பாதையில் நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்றிக்கொண்டேதான் போகும். கமிட்மென்ட்டை நிர்ணயிப்பதற்கு முன் ஆயிரம் முறைகூட யோசிக்கலாம். ஆனால், நிர்ணயித்த பிறகு ஒருமுறை கூட பின்வாங்குவதோ, வருந்துவதோ கூடாது. அது மனதின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

'ச்சே... இதைக்கூட நம்மால செய்ய முடியலையே’ என்று எழும் எண்ணங்கள், எதையும் உருப்படியாக செயல்படுத்த விடாமல், தேவையற்ற கோபம், வீண்சண்டை, அர்த்தமற்ற வாக்குவாதம், அநாவசியமாக மற்றவர்களை காயப்படுத்துவது என்று பலவித பிரச்னைகளாக நம்மில் இருந்து வெளிப்படும். அதோடு, 'என்னால மேல வர முடியல. அதனால என்னைச் சுத்தியிருக்கிற யாரும் மேல வரக்கூடாது’ என்ற விஷத்தை மனதுக்குள் விதைக்கும். இதனால், மற்றவரிடம் பேசுவது தொடங்கி, உதவி செய்வதுவரை நாம் நாமாக இல்லாமல் போக நேரிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். ஒரு கட்டத்தில் அது நம்மை தனிமைப்படுத்திவிடும். இதனால், உச்சகட்ட மன உளைச்சல் ஏற்பட்டு நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் கோரப்பல்லைக் காட்டிச் சிரிக்கும். ஒரு கட்டத்தில் இது நம்மை தற்கொலைவரைகூட அழைத்துச் செல்லக்கூடும்.

இதற்கெல்லாம் தீர்வு... ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, நம் கமிட்மென்ட்டை மற்றவர்களின் கட்டாயத்தாலோ, சமூகக் கடமையாலோ அன்றி, நமக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அப்போதுதான் அதற்காக நம்மால் சந்தோஷமாக உழைக்க முடியும்!

ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

குடும்ப விரிசலும், கமிட்மென்ட்டும்!

மாமியார்  மருமகள் பிரச்னையின் பின்னணியிலும் 'கமிட்மென்ட்’ என்று சொல்லிக்கொண்டு சிரிக்கும் 'மிஸ்கமிட்மென்ட்’தான் இருக்கிறது என்பது என்னைப் போன்ற மனநல மருத்துவர்கள் மட்டுமே அறிந்த உண்மை. உறவுகளின் மத்தியில் நிரம்பி வழியும் பொய்யான கமிட்மென்ட்டுகள், 'செட் ஆஃப் ரூல்ஸ்’ என்று சொல்லக்கூடிய பலவித வரைமுறைகளை அவர்கள் மத்தியில் உருவாக்கி, பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இந்த மிஸ்கமிட்மென்ட்தான் பல குடும்பங்களில் விரிசல் விழுந்ததற்கும், விழுவதற்கும் மறைமுகக் காரணம் என்பது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம்.

திறமைக்கு விருது!

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'வாய்ஸ் ஆஃப் ஃபெய்த்' (Voice of Faith) என்ற அமைப்பும், சென்னையைச் சேர்ந்த 'Don Bosco Institute of Communication arts’ என்ற அமைப்பும் இணைந்து சமூகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதற்காக மனநல மருத்துவர் அபிலாஷாவை 'பெண் சாதனையாளர் விருது -  2014’  க்கு தேர்வு செய்திருக்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism