Published:Updated:

`இந்தியர்களின் சராசரி உயரம் குறைந்துகொண்டே வருகிறது!' - ஆய்வில் தகவல்

உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இந்தியாவிலோ 2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய மக்களின் உயரம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக ஆரோக்கிய மையம்(Centre of Social Medicine and Community Health) சார்பில் நடத்தப்பட்டது. ஒருவர் உயரமாக வளர்வது என்பதுகூட அவரது சமூக மற்றும் சுற்றுப்புறக் காரணிகளை மையமாகக்கொண்டே அமைகிறது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இந்தியாவிலோ 2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டுக் காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களின் சராசரி உயரம் கணிசமான சரிவைச் சந்தித்திருக்கின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Indian women (Representational Image)
Indian women (Representational Image)
Photo by Oliver Li from Pexels
`முன்பு டம்பெல்ஸை தூக்கவே கஷ்டப்பட்டவர்; இன்று கின்னஸ் சாதனையாளர்!' - சாதித்த 3 அடி பாடி பில்டர்

1998-99 ஆண்டை ஒப்பிடும்போது இந்தச் சரிவு விகிதம் அதிகமாகவே இருக்கிறது. அதே நேரம், செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் சராசரி உயரம் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகள், மற்றும் சமூக, சுற்றுப்புறக் காரணிகள் மனிதர்களின் சராசரி உயரத்துடன் தொடர்புடையதாக உள்ளன என்கின்றனர் நிபுணர்கள்.

இவை ஒருபுறமிருக்க 1998-99 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் மேகாலாயவைத் தவிர மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியப் பெண்களின் சராசரி உயரம், அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் மற்றும் மாநிலம் போன்ற பாகுபாடின்றி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்கின்றன அந்த ஆய்வு முடிவுகள்.

2015-16 ஆண்டு காலகட்டத்தில் இருந்த 15 முதல் 26 வயது வரையிலான பெண்களைக் காட்டிலும், 26 முதல் 50 வயது வரையிலான பெண்களின் சராசரி உயரம் சிறிய முன்னேற்றத்தைச் சந்தித்திருக்கிறது. ஆனால் முன்பே குறிப்பிட்டதைப் போல ஏழ்மையான சூழலில் வாழும் பெண்களும் பழங்குடியினப் பெண்களும் போதிய ஊட்டச்சத்து இன்றி உயரக்குறைவைச் சந்தித்திருக்கிறார்கள்.

Indian Women (Representational Image)
Indian Women (Representational Image)
Photo by Titiksha Rout from Pexels
`பிரசவம் பார்க்கிற எங்களுக்கே மகப்பேறு விடுப்பு இல்லை!' - விரக்தியில் அரசு பெண் மருத்துவர்கள்

இந்நிலையில் 2005-06-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசியக் குடும்ப நல ஆய்வில் (National Family Health Survey (NFHS) 15 முதல் 25 வயதுவரை இருந்த பெண்களின் சரசாரி உயரத்தைவிட 2015-16-ம் ஆண்டில் அதே வயதுகளில் இருந்த பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களது சராசரி உயரம் குறைவாகவே இருந்திருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு ஐந்து வயது பழங்குடியினப் பெண் குழந்தையின் சராசரி உயரம் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தையின் சராசரி உயரத்தைவிட 2 சென்ட்டிமீட்டர் குறைவாக இருந்திருக்கிறது என்கிற வருத்தமளிக்கும் தகவல் 2005-06-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசியக் குடும்ப நல ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு