Published:Updated:

ஸ்டைலோரி சில்வர்: NAC குழுமத்திடமிருந்து சென்னைக்கு ஒரு ‘சில்வர் டச்’!

ஸ்டைலோரி சில்வர்

மயிலாப்பூரின் வடக்குமாட வீதியில் இரண்டு அடுக்கு மாடிக்கட்டடத்தில் உள்ள இது 10,000க்கும் மேற்பட்ட சில்வர் பொருட்களையும் பிரத்தியேக வெள்ளி ஆபரணங்கள், பரிசுப் பொருட்களையும் கொண்டுள்ளது.

ஸ்டைலோரி சில்வர்: NAC குழுமத்திடமிருந்து சென்னைக்கு ஒரு ‘சில்வர் டச்’!

மயிலாப்பூரின் வடக்குமாட வீதியில் இரண்டு அடுக்கு மாடிக்கட்டடத்தில் உள்ள இது 10,000க்கும் மேற்பட்ட சில்வர் பொருட்களையும் பிரத்தியேக வெள்ளி ஆபரணங்கள், பரிசுப் பொருட்களையும் கொண்டுள்ளது.

Published:Updated:
ஸ்டைலோரி சில்வர்

NAC ஜூவல்லர்ஸ் அதன் வெள்ளிப் பொருட்களின் பிரத்தியேக பிராண்டான ஸ்டைலோரி சில்வரின் முன்னணி ஸ்டோர் துவக்க விழாவை பெருமையுடன் அறிவித்துள்ளது. கைவேலைப்பாடுகளால் தயாரிக்கப்படும் மிகச்சிறந்த நகைகளின் பாரம்பரிய பிராண்டாக NAC ஜூவல்லர்ஸ் 1973ல் சென்னையில் துவக்கப்பட்டது. இப்போது சென்னையில் இது மிகவும் பிரபலமாக விளங்குகிறது.

இப்போது மயிலாப்பூரில் வெள்ளி சாமான்களின் ஷாப்பிங் அனுபவத்தை அதன் முன்னணி சில்வர் ஜூவல்லரி பூடிக் மூலம் முற்றிலும் மாற்றி அமைக்க உள்ளது ஸ்டைலோரி சில்வர்.

ஸ்டைலோரி சில்வர்
ஸ்டைலோரி சில்வர்

ஸ்டைலோரி சில்வர் பொருட்கள் மகளிர் தினசரி மகிழ்வான தருணங்கள் மற்றும் மிகப்பெரிய விழாகாகாலத்தினையும் கொண்டாடும் விதத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வர்த்தகத்தை துவக்கிய ஓராண்டு காலம் முதலே ஸ்டைலோரி சில்வர் அதன் தரம், இணக்கத்தன்மை, டிசைன் ஆகியவற்றினால் எல்லா நுகர்வோரிடத்தும் பிரபலமாக விளங்குகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மார்ச் 7 2022 அன்று ஸ்டைலோரி சில்வர் மயிலாப்பூரில் உள்ள அதன் அற்புதமான ஷோரூமில் தொடங்கப்பட்டது. மயிலாப்பூரின் வடக்குமாட வீதியில் இரண்டு அடுக்கு மாடிக்கட்டடத்தில் உள்ள இது 10,000க்கும் மேற்பட்ட சில்வர் பொருட்களையும் பிரத்தியேக வெள்ளி ஆபரணங்கள், பரிசுப் பொருட்களையும் கொண்டுள்ளது. இது அனைவரின் ரசனைக்கேற்ப திருமண செட்கள், ஆக்ஸிடைஸ்டு சில்வர் ஆபரணங்கள், என பல ரகங்களில் அமைந்துள்ளது.

இது மார்ச் 7, அன்று காலை 10.30 மணிக்கு பத்மபூஷண், சங்கீத கலாநிதி, Dr.சுதா ரகுநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த துவக்க விழாவிற்கு பின் மகளிர் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஷைனிங் சில்வர் ஸ்டார் விருதுகள் 2022 வழங்கப்பட உள்ளன. 7 முதல் 15 மார்ச் 2022 வரை நடைபெற உள்ள இந்த விழாவில் 20க்கும் மேற்பட்ட மகளிர் கௌரவிக்கப்பட உள்ளனர்.