Published:Updated:

கணிதமேதை ராமனுஜன் வாழ்ந்த வீட்டுக்கு ஒரு விசிட்! | #HBDRamanujan

கணித மேதை ராமானுஜன்
News
கணித மேதை ராமானுஜன்

கணிதத்தில் அசாத்தியமான சாதனைகள் புரிந்த ராமானுஜன் பிறந்தது ஈரோட்டில் என்றாலும், அவரது இளமைக் காலத்தின் பெரும்பகுதி அவருடைய பூர்வீகமாக கும்பகோணத்தில்தான் கழிந்தது.

நிகரில்லா கணிதச் சூத்திரங்களை மனிதகுலத்துக்கு அளித்து, ஒப்பில்லாச் சாதனைகள் நிகழ்த்திய கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜத்தின் 134-வது பிறந்த நாள் இன்று.
கணித மேதை ராமானுஜன்
கணித மேதை ராமானுஜன்

கும்பகோணம் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்துவந்த சீனிவாசன் - கோமளம் தம்பதிக்கு 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜன். கணிதத்தில் அசாத்தியமான சாதனைகள் புரிந்த ராமானுஜன் பிறந்தது ஈரோட்டில் என்றாலும், அவரது இளமைக் காலத்தின் பெரும்பகுதி அவருடைய பூர்வீகமாக கும்பகோணத்தில்தான் கழிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

33 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இன்றி வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 முதல் 1918-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கணிதத் தேற்றங்களை ராமானுஜன் கண்டுபிடித்தார். அடிப்படை இயற்பியல் முதல் மின்தொடர்புப் பொறியியல் வரை எனப் பல்துறைகளின் உயர்மட்ட ஆய்வில் ராமானுஜனின் சூத்திரங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. ராமானுஜனின் பெயரால் 1997-ல் தொடங்கப்பட்ட The Ramanujan Journal என்ற கணித ஆய்விதழ் இன்றும் வெளியாகிறது.

The Ramanujan Journal
The Ramanujan Journal

கும்பகோணத்தின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சாரங்கபாணி கோவில். அருகே சன்னதித் தெருவில் அமைந்திருக்கிறது ராமானுஜன் வாழ்ந்த வீடு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளின் எச்சமாக இன்று நின்று கொண்டிருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய வீட்டில் வாழ்ந்த ராமானுஜன்தான் பிற்காலத்தில் கேம்பிரிட்ஜுக்குப் போனார். காண்போரின் கவனத்திலிருந்து எளிதில் தப்பித்துவிடும் இந்த வீடுதான், கணிதத்தின் மிகப் பெரிய உண்மைகளைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த கணிதமேதை வாழ்ந்த வீடாகும்.

கேம்பிரிட்ஜில் ராமானுஜன் (நடுவில்)
கேம்பிரிட்ஜில் ராமானுஜன் (நடுவில்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமானுஜனின் தந்தையும், தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றிவந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு நீதிமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ராமானுஜனின் தாய்வழித் தாத்தா வேலைபார்த்த கடை 1891-ல் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரத்துக்கு வந்தது. 1892-ல் காஞ்சிபுரத்திலிருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுஜன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார்.

1894-ல் அவர் தெலுங்குவழிக் கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் ராமானுஜன் கல்வியைத் தொடர்ந்தார். மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று, 1897-ல் தொடக்கக் கல்வியை நிறைவுசெய்தார் ராமானுஜன். 1897-ம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடங்கிய ராமானுஜனின் கணிதப் பயணம், கேம்பிரிட்ஜ் வரை பயணித்தது.

உலகப் புகழ்பெற்ற கணித மேதையின் ஆரம்ப காலங்கள் கழிந்த இந்த வீட்டின் முக்கியத்துவம் மிகச் சமீபத்திய ஆண்டுகள் வரை உணரப்படவில்லை. 2003-ம் ஆண்டுவரை வெவ்வேறு நபர்கள் இந்த வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் முன்னெடுப்பால் ராமானுஜன் வாழ்ந்த வீடு பாதுகாக்கப்பட்டது; தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் இப்போது இந்த வீட்டை நிர்வகித்துவருகிறது.

ராமானுஜன் இல்லம், கும்பகோணம்.
ராமானுஜன் இல்லம், கும்பகோணம்.

கணிதமேதை ராமனுஜன் வாழ்ந்த வீட்டுக்கு ஒரு விசிட்