Published:Updated:

``நம்ம சேப்டிய நாம பார்த்துக்கணும்!’’ - ஆடு மேய்ப்பவர் கொடுத்த பொன்னான அட்வைஸ் #MyVikatan

துளசிதாசன்
துளசிதாசன்

இந்த உரையாடலுக்கு இடையே துளசிதாசனின் ஆடுகளும் மேய்ச்சலை கைவிட்டு நம்மை சுற்றி நின்று குசலம் விசாரிக்க துவங்கி விட்டன. வழக்கமாக செம்மறியாடுகள் ஆட்களிடம் அவ்வளவாக ஒட்டாது....

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். சிலு சிலுவென வீசிய தென்றல் காற்று, இடையே இடையே பெய்த சாரல் மழை எனது பயணத்தை இன்னும் இனிமையாக்கியது.

சில இடங்களில் பள்ளம் - மேடு தென்பட்டாலும் கொஞ்ச தூரம் சென்றதும் புதிதாக போடப்பட்ட புத்தம் புது சாலையில் எனது பைக்கிற்கும் புத்துணர்வு வந்துவிட்டது போல.. உருமிக் கொண்டு உற்சாகமாக சென்றது. வாகன நடமாட்டம் குறைவு என்பதால், இயற்கையை ரசித்தபடி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தேன்.

ஓரிடத்தில் ஆடு மேய்க்கும் முதியவர் முக கவசம் அணிந்து, சாலையோரம் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

"என்னடா சிட்டிக்குள்ள பாதிப்பேர் தான் மாஸ்க் போட்டுக்கிட்டு சுத்துறாங்க... இவர் என்னடான்னா, ஆளே இல்லாத காட்டில் ஆடு மேய்க்கும்போதும் மாஸ்க் அணிந்திருக்கிறாரே.." என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.

செம்மறி ஆடுகள்
செம்மறி ஆடுகள்

பைக்கை நிறுத்தி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். "என் பேரு துளசிதாசன். இங்கே பக்கத்துல இருக்கிற காட்ரம்பாக்கம் தான் நம்ம ஊருங்க. ஒரு 50 உறுப்படி (50 எண்ணம் ஆடுகள்) நம்மகிட்ட இருக்கு. காலையில அப்படியே தொழுவத்தில் இருந்து ஓட்டி வந்து இப்படி சுற்றுவட்டாரத்தில் மேய்ச்சலுக்கு விடுவோம். சாயந்திரம் தான் வீட்டிற்கு போவோம். மதியத்திற்கு எனக்கு சாப்பாடு எடுத்து வந்திருக்கேன்" என்றார்.

"ஊருக்குள்ளயே பெரும்பானவர்கள் மாஸ்க் போடலையே நீங்கள் காட்டில் ஆடு மேய்க்கும்போது மாஸ்க் போட்டிருக்கீங்களே.?"

"அதாவது சார்.. நம்ம சேப்டிய நாமலே பார்த்துக்கனும்... டிவியில சொல்றாங்க. ஊருக்குள்ளயும் வண்டியிலே மைக்கு கட்டி அலவன்ஸ் பண்றாங்க. முகத்துல மாஸ்க் போடுங்க. கிட்டக்க நின்னு பேசாதீங்க. கையை அப்பப்ப சோப்பு போட்டு கழுவுங்கன்னு சும்மாவா சொல்றாங்க. நமக்காகத்தான சொல்றாங்க? அதனால் தான் சார். நம்ம சேப்டிய நாமதான் பார்த்துக்கனும் சார் என்றவர், இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த நோய் இருக்கும் சார்..?" என்று கேள்வியை நம்ம பக்கம் திருப்பினார்.

"தெரியலையே பெரியவரே என்று நான் விழிக்கவே...

துளசிதாசன்
துளசிதாசன்

``எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. இப்ப 5 மாசமா எல்லோருடைய பொழப்பும் போச்சு.. நான் கூட இடையே கூலி வேலைக்கு போவேன். அந்த நேரத்தில எங்க வீட்டம்மா ஆடு மேய்க்கும். இப்ப பஸ் ஓடலைங்கிறதால வெளியூருக்கு வேலைக்கு போக முடியலை. வீட்டம்மா உள்ளூரில் வயல் வேலைக்கு போறங்க. இப்போது நான் ஆடு மேய்க்க வந்திருக்கேன்” என்றார்.

இந்த உரையாடலுக்கு இடையே துளசிதாசனின் ஆடுகளும் மேய்ச்சலை கைவிட்டு நம்மை சுற்றி நின்று குசலம் விசாரிக்க துவங்கி விட்டன. வழக்கமாக செம்மறியாடுகள் ஆட்களிடம் அவ்வளவாக ஒட்டாது. நாம் அருகே சென்றாலும் ஓடி விடுவது தான் அதன் இயல்பே என்ற கேள்வியை பெரியவரிடம் முன்வைத்தேன்.

செம்மறி ஆடுகள்
செம்மறி ஆடுகள்

நீண்ட நேரம் சிரித்தவர். என் பசங்க (செம்மறி ஆடுகள்) கொஞ்சம் வித்தியாசமானவங்க. நான் மதியம் சாப்பிடும்போது நம்மகிட்ட ஒருவாய் சோறு வாங்கி சாப்பிடும்ங்க. அவ்வளவு பாசமானவங்க இந்த பசங்க..." என்றார். அவரின் பேச்சை ஆமோதிக்கும் வகையில் தலையாட்டிநின்றன செம்மறி ஆடுகள்..!

-அய்யப்பன்.சி.ஏ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு