Published:Updated:

``லாக் டவுனுக்கு பிந்தைய நோய்கள்..!" - வாசகியின் ஃபன் ஷேரிங் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

லாக் டெளனுக்கு பிறகு சில கற்பனையான நோய்கள் என்னென்ன வரக்கூடும் என்பது பற்றிய ஒரு ஜாலி + கடி பதிவு இது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

இப்போது கொரோனாவின் உச்சபட்ச அச்சத்தில்தான் இருக்கிறோம். இதுவும் கடந்து போகும்னு தெரியும்தான். அதேசமயம் பாதிப்பு கம்மியாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா. ஆனால், கொரோனாவுக்கு பிந்தைய நாள்களில் சில பல நோய்களை நிஜமாக நாம் எதிர்கொள்ளப் போகிறோம் (உதா : மொபைல் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு கண் பார்வை கோளாறுகள் அதிகரிப்பு). அப்படிப்பட்ட சில கற்பனையான நோய்கள் என்னென்ன வரக்கூடும் என்பது பற்றிய ஒரு ஜாலி + கடி பதிவு இது.

Representational Image
Representational Image
Pixabay

Chronic list syndrome - ஆண்களை இந்த நோய் தாக்கக்கூடும். கொரோனாவினால் பெரும்பாலும் ஆண்களே கடைகளுக்கு சென்று வீட்டுக்கு தேவையானதை வாங்குகிறார்கள். ஷாப்பிங் பழக்கம் இல்லாததாலும், நியாபக சக்தி கொஞ்சம் கம்மி என்கிறதாலும், "அதெல்லாம் சொல்லாத. லிஸ்ட்ல எழுது... லிஸ்ட்ல எழுது" என்று எது வாங்கணும்னாலும் ஒரு லிஸ்ட்-பேப்பர் இல்லாம கடைக்குப் போக மாட்டேன் என்கிறார்கள். அதனால கொரோனா முடிஞ்சும் கூட ஏதோ ஒரு லிஸ்ட்க்காக ஏங்குவார்கள்.

Free time phobia - பெண்கள் இந்த நோயினால் அதிகம் பாதிக்க படுவார்கள். எல்லோரும் வீட்டிலேயே இருந்து படிப்பு, ஆபிஸ் வேலைன்னு பார்த்ததால், வித விதமாக சமைத்தல், பாத்திரம் தேய்த்தல், குழந்தைகளுடன் படிப்பு, விளையாட்டுன்னு படு பிசியாக இருந்துவிட்டதால், கொரோனா முடிந்து அனைவரும் வெளியே சென்ற பிறகு கிடைக்கும் ஃப்ரீ டைம் பார்த்து ஒரு வித பயம் அவர்களைத் தாக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

Non-digital allergy - குழந்தைகளை இது தாக்கக்கூடும். ஆன்லைன் க்ளாஸ், நண்பர்களுடன் சேட், கேம்ஸ், படம், பாட்டு இப்படி கிட்டத்தட்ட முழு நேரமும் மொபைல், லேப்டாப்லேயே கழிந்ததால், டிஜிட்டல் அல்லாதவற்றைப் பார்த்து ஒரு ஒவ்வாமை ஏற்படும். வெளிய போகணும், பள்ளிக்குப் போகணும், ஆசிரியர்களை நேரில் பார்க்கணும் இப்படி அனைத்தையும் பார்த்து ஒரு பயம் வரும்.

Can’t Sir - வீட்டிலிருந்து வேலை (WFH) எல்லாம் ரத்தாகி, மறுபடி ஆபிஸ் போக வேண்டும் என்று வரும்போது, வேலைக்கு செல்பவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தையையே (can’t sir) அந்த நோய்க்கு சூட்டிவிட்டார்கள்.

Covil 21 - கொரோனாவினால் கோவிலுக்கே போகாமல் இருந்த பக்திவான்கள், இந்த நோயினால் தாக்கப்படுவார்கள். ஒரு வருடம் கழித்து கோவிலுக்குப் போக தொடங்கியதால், மிக அதிக நேரம் கோவில்களில் செலவிடுவார்கள். இது ஒரு நோய் இல்லை என்றாலும், கோவில்-21 பல மக்களுக்கு இருப்பது கண்டறியப் படும்.

Representational Image
Representational Image
Pixabay

No-Rona - ஆங்கிலம் - இந்தி வார்த்தைகளைக் கொண்டு இந்த நோய்க்கு பெயரிட்டுள்ளனர். நோ என்றால் வேண்டாம், ரோனா என்றால் அழுகை. இது பெற்றோர்களுக்கும் ஆசியர்களுக்கும் வரலாம். முதல் முறை பள்ளிக்கு போவதைப் போல் அழுவார்கள் குழந்தைகள். வீட்டில் பெற்றோர்களும், பள்ளியில் ஆசியர்களும் நோ-ரோனான்னு சொல்லிக்கிட்டே இருக்க போறாங்க.

எனக்குதோணினதுஇவ்வளவுதான். உங்களுக்குஏதாவதுதோணினா, கமென்ட் பண்ணுங்க.

- வி. சுதா சத்யநாராயணா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு