Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு AICL ரூ.1 கோடி நிதியுதவி!

ஆதவ் அர்ஜுனா

AICL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

முதல்வர் நிவாரண நிதி: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு AICL ரூ.1 கோடி நிதியுதவி!

AICL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

Published:Updated:
ஆதவ் அர்ஜுனா

கொரோனாவால் பெற்றோரை இழந்திருக்கும் குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களுக்கு Arise Investment and Capital Limited (AICL) ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

AICL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தேர்தலில் வெற்றிபெற்றதற்கும், பொறுப்பேற்றுக் கொண்ட ஒரே மாதத்தில், துரிதமாகச் செயல்பட்டு கோவிட்-19 பரவல் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்கும் ஆதவ் அர்ஜுனா தன்னுடைய வாழ்த்துக்களை முதலமைச்சருக்குத் தெரிவித்தார்.

‘எல்லோருக்கும் தடுப்பூசி’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசாங்கம் மிகச் சிறந்த பணியை மேற்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்காக தனியார் வணிக நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆதவ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாநிலத்தின் பல்வேறு விளையாட்டுச் சங்கங்கள் மூலம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் தேசிய அளவிலான தமிழ்நாட்டு வீரர்கள் 500 பேருக்கு ‘Arise' குழுமம் தடுப்பூசி செலுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அவர் முதலமைச்சரிடன் உறுதியளித்தார்.

அனைத்திந்திய கூடைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் உள்ள ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக #VaccineForAllSportsPlayers என்ற முன்னெடுப்பைத் தொடங்கினார்.

மாநிலத்தின் ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. ‘எல்லோருக்கும் தடுப்பூசி’ திட்டத்தை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பதற்கு தனியார் வணிக நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அவர் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். தனியார் வணிக நிறுவனங்கள் இலவச தடுப்பூசி முகாம்களை நடத்துவதற்காகச் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டலையும், உதவியையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism