Published:Updated:

சிறந்த 100 பல்கலைக்கழகங்கள்... அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் சிறப்பிடம்!

அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்
அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்

94 நாடுகள்/பிராந்தியங்களைச் சேர்ந்த 1,117 பல்கலைக்கழகங்கள் இந்த ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடிப்படையாகக் கொண்டு, ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் இம்பாக்ட் தரவரிசைகள்’ ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் இம்பாக்ட்
டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் இம்பாக்ட்

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பல்கலைக்கழகங்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் மிகக் கவனமாக ஆராய்ந்து, டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் இம்பாக்ட் வெளியிடும் இந்தப் பட்டியல், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் பின்னணியில், 2021-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் இம்பாக்ட் வெளியிட்டுள்ளது; 94 நாடுகள்/ பிராந்தியங்களைச் சேர்ந்த 1,117 பல்கலைக்கழகங்கள் இந்த ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் இந்தப் பட்டியலில் 81-வது இடத்தைப் பிடித்து, உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியப் பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெறுகிறது!

சமூகத்தில் பொருளாதார ரீதியிலும், மற்ற நலிவுறுற்ற நிலையிலும் இருக்கும் மக்களை மேம்படுத்தும் பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீ மாதா அமிர்ந்தானந்தமயி தேவியின் தலைமையிலும், வழிகாட்டலின்படியும் அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

Live-in-Labs®
Live-in-Labs®

Live-in-Labs® என்ற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் சென்று, அங்கு அவர்களோடு வாழ்ந்து அவர்களின் தேவையைக் கண்டறிந்து சாத்தியமுள்ள தீர்வுகளை வழங்குகிறது. 21 மாநிலங்களில் 150-க்கும் அதிகமான திட்டங்கள் மூலம், Live-in-Labs® பங்கேற்பாளர்கள் ஏறத்தாழ 60,000 கிராமப்புறவாசிகளைக் கடந்த பல ஆண்டுகளாகச் சந்தித்திருக்கின்றனர். அவர்கள் கிராமப்புற சமூகங்களின் நீடித்த வளங்குன்றா வளர்ச்சிக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு