Published:Updated:

``ஸ்காலர்ஷிப் தேர்வுடன் நடக்கும் இலவசப் பயிற்சி முகாம் இது!" - KingMakers IAS Academy பூமிநாதன்

இத்தேர்வுகளுக்கு உதவும் வகையிலான தகவல்கள், குறிப்புகள், வழிகாட்டுதல்கள், பாட நெறிகள் ஆகியவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

``ஸ்காலர்ஷிப் தேர்வுடன் நடக்கும் இலவசப் பயிற்சி முகாம் இது!" - KingMakers IAS Academy பூமிநாதன்

இத்தேர்வுகளுக்கு உதவும் வகையிலான தகவல்கள், குறிப்புகள், வழிகாட்டுதல்கள், பாட நெறிகள் ஆகியவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Published:Updated:

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடத்தும் UPSC மற்றும் TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 போட்டி தேர்வில் வெற்றி பெறுவது எப்படி..? இலவச பயிற்சி முகாம் வரும் அக்டோபர் 30-ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோரோடு சேர்ந்து கிங்மேக்கர்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் பூமிநாதனும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றி போட்டித் தேர்வு தொடர்பான பலவற்றை பற்றி பேசவுள்ளார்.

UPSC workshop
UPSC workshop

இந்நிகழ்வு குறித்து பூமிநாதன் கூறியதாவது “ நடந்து முடிந்த UPSC சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்தின் தேர்ச்சி 2%. இதை மாற்றி தமிழக மாணவர்களை UPSC சிவில் சர்வீஸ் தேர்விற்கு வழிநடத்தி, தமிழகத்தின் தேர்ச்சி சதவிகிதத்தை 10 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். மாணவர்களுக்கு இது ஓர்  அற்புதமான வாய்ப்பு. இதைப் பயன்படுத்தி இத்தேர்வுகளுக்கு உதவும் வகையிலான தகவல்கள், குறிப்புகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். நமது கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் யுபிஎஸ்சி-ன் முன்னாள் சேர்மன் டிபி அகர்வால் மற்றும் பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி மாணவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம். மேலும் இந்நிகழ்வில் ஸ்காலர்ஷிப் தேர்வு ஒன்றையும் நடத்தவிருக்கிறோம். இந்தத் தேர்வில் மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்படும். UPSC-க்கு தனியாக 50 கேள்விகள், TNPSC-க்கு தனியாக 50 கேள்விகளும் கேட்கப்படும்.

50 கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்தால், UPSC பிரிவில் ஒரு லட்சம் ரூபாயும், TNPSC-க்கு 50,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும். இதில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். +1, +2 மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், படிப்பு முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முன் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்த முன்பதிவு கிங்மேக்கர்ஸ்-ன் வலைதளத்திலும், விகடனின் வலைதளத்திலும் செய்து கொள்ளலாம். இந்தத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுக்கு அகாடமி பயிற்சி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சி முழுவதும் விகடனின் பேஸ்புக்கிலும், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் யூ ட்யூப் தளத்திலும் லைவ்- ஆக ஒளிபரப்பப்படும். 9 மணியிலிருந்து 10 மணி வரை தேர்வு நடைபெறும். 

இந்நிகழ்வில் கலந்துகொள்ள கீழுள்ள லிங்க்கின் மூலம் பதிவுசெய்துகொள்ளலாம்