Published:Updated:

ஆனந்த விகடன் & சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் UPSC, TNPSC ஆலோசனை முகாம்; ஏப்ரல் 17 சென்னையில்!

போட்டித் தேர்வு

General studies-ஐப் பொறுத்தவரை மிகச் சிறந்த வல்லுனர் குழுவைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறோம். அடிப்படைகள் பற்றிய Foundation course-க்கு மட்டும் 40 முதல் 50 வகுப்புகள் வரை ஒதுக்கியிருக்கிறோம்.

ஆனந்த விகடன் & சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் UPSC, TNPSC ஆலோசனை முகாம்; ஏப்ரல் 17 சென்னையில்!

General studies-ஐப் பொறுத்தவரை மிகச் சிறந்த வல்லுனர் குழுவைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறோம். அடிப்படைகள் பற்றிய Foundation course-க்கு மட்டும் 40 முதல் 50 வகுப்புகள் வரை ஒதுக்கியிருக்கிறோம்.

Published:Updated:
போட்டித் தேர்வு

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் ஒருவருட இலவசப் பயிற்சிக்கான Scholarship தேர்வும் நடைபெறவிருக்கிறது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் சிறப்புரை ஆற்ற, ஜிஎஸ்டி துறையில் துணை ஆணையராகப் பணியாற்றும் எம்.திவ்யா ஐஆர்எஸ் ஊக்க உரை வழங்குகிறார்.

சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி
சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி

இந்த முகாம் குறித்து, சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவன இயக்குநர் எஸ்.சிவராஜவேல் பேசும்போது, “சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். அகாடமி 2011-ல் இருந்து மிகச் சிறந்த பயிற்சிக் குழுவினருடன் UPSC, TNPSC போட்டித் தேர்வுகளுக்கான தீவிரப் பயிற்சியளித்து வருகிறது. எங்களிடம் பயிற்சி பெற்று UPSC தேர்வில் இதுவரை 450-க்கும் மேற்பட்ட மாணவர்களும், TNPSC தேர்வில் இதுவரை 1400-க்கும் மேற்பட்ட மாணவர்களும் வெற்றிபெற்றிருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுகாக UPSC தேர்வுகளில் இந்திய அளவில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்கள் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள்தான். சமூகவியலை விருப்பப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதியவர்களில் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறப்பிடம் பிடிப்பவர்கள் எங்கள் மாணவர்கள்தான்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“General studies-ஐப் பொறுத்தவரை மிகச் சிறந்த வல்லுனர் குழுவைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறோம். அடிப்படைகள் பற்றிய Foundation course-க்கு மட்டும் 40 முதல் 50 வகுப்புகள் வரை ஒதுக்கியிருக்கிறோம். UPSC மாணவர்களுக்கு Catalyst, TNPSC மாணவர்களுக்கு ‘சங்கமம்’ என்ற போட்டித் தேர்வு இதழ்களை இலவசமாக வழங்குகிறோம்.

போட்டித் தேர்வு
போட்டித் தேர்வு

IAS, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளைப் பற்றிய ஆழமான புரிதலையும், விழிப்புணர்வையும் வழங்குவது இதுபோன்ற ஆலோசனை முகாம்களின் முக்கிய நோக்கம். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் சிறப்புரை ஆற்றுகிறார். மத்திய சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி துறையில் துணை ஆணையராகப் பணியாற்றும் எம்.திவ்யா ஐஆர்எஸ் ஊக்க உரை வழங்குகிறார். UPSC தேர்வு நேர்காணலில் 212 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. 360 டிகிரி கோணத்திலும் இந்தப் போட்டித் தேர்வுகளை அணுகுவது எப்படி என்பதை மாணவர்கள் இந்த ஆலோசனை முகாமிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். முகாமில் நடக்கவிருக்கும் Scholarship Test-ல் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு Scholarship வழங்கப்படும். விடாமுயற்சியே போட்டித் தேர்வுகளில் வெல்வதற்கான தாரக மந்திரம்!” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடிமை பணியில் சேவையாற்றி வரும் இன்னும் பல அதிகாரிகள் கலந்துக்கொண்டு உரையாற்றும் அப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்.

https://docs.google.com/forms/u/1/d/e/1FAIpQLSfPZydc4k4fJgjZ1lL-KBso526ixKq8Tk79HzPqYyBTXKXnOw/viewform
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism