Published:Updated:

''எக்ஸ்க்யூஸ் மீ என் ஃபிளைட்டை மிஸ் பண்ணிட்டேன்!"- 100 பேரை ஏமாற்றிப் பணம் பறித்த இளைஞர்!

அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் தினேஷ் குமார் இதுவரை 100 நபர்களை ஏமாற்றியதாகவும் தெரிகிறது

Published:Updated:

''எக்ஸ்க்யூஸ் மீ என் ஃபிளைட்டை மிஸ் பண்ணிட்டேன்!"- 100 பேரை ஏமாற்றிப் பணம் பறித்த இளைஞர்!

அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் தினேஷ் குமார் இதுவரை 100 நபர்களை ஏமாற்றியதாகவும் தெரிகிறது

பணமோசடி செய்வதில் புது புது உத்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டன. நாம் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது ஊருக்குச் செல்ல போதிய பணம் இல்லை எனவும், தற்போது கொடுத்தால் ஊருக்கு சென்று திருப்பி அனுப்பிவிடுவோம் எனக் கூறி நம்மிடம் பணம் பறிக்க முயற்சி செய்திருப்பர். பலர் அப்படி ஏமாற்றுபவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்திருப்பர். அதையே மெகா சைசாக ஏர்போர்டில் செய்திருக்கிறார் ஒரு இளைஞர்.

ஆந்திராவைச் சேர்ந்த மோடுலா வெங்கட தினேஷ் குமார் என்பவர் 100 பேரை ஏமாற்றியதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் இந்திரா காந்தி தேசிய விமான நிலையத்தில் நான்கைந்து நாட்களாக மக்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.வெங்கட தினேஷ் குமார், ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்.

டெல்லி விமான நிலையம்
டெல்லி விமான நிலையம்

டிசம்பர் 19 தேதி டெல்லி போலீஸாருக்குக் கிடைத்த புகாரின் பேரில் தினேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரில் தினேஷ் குமார் தான் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும் , தனது ஐடி கார்டையும் காண்பித்துள்ளார். தனது படிப்பு தொடர்பாக விசாகபட்டினத்திற்கு செல்வதற்கான பயணத் தொகை 16,000 ரூபாய் ஆவதாகவும் தன்னிடம் 6500 மட்டும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பயணத்திற்கு மீதம் செலவாகும் தொகையை வழங்குமாறும், அதை தான் விசாகபட்டினத்தை அடைந்தவுடன் திருப்பி கொடுப்பதாகவும் சமாதானப்படுத்தியுள்ளார். அந்த நபரும் தினேஷ் குமாரை நம்பி பணம் கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு பின் பணத்தை திருப்பி கேட்கவே, தினேஷ் தர மறுக்க அந்த நபர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

விமானம்நிலையத்தில் 100 பேரை ஏமாற்றிய இளைஞர்
விமானம்நிலையத்தில் 100 பேரை ஏமாற்றிய இளைஞர்

போலீஸார் சிசிடிவி படங்களை ஆராய்ந்ததில் தினேஷ் குமார் இப்படியாக பல விமான நிலையங்களில் மக்களை ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார். இதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் தினேஷ் குமார் இதுவரை 100 நபர்களை ஏமாற்றியதாகவும் தெரிகிறது. ட்விட்டரிலும் பலர் இவருக்கு எதிராக புகார் தெரிவித்து வருவதாகவும் டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.