Published:Updated:

ஒவ்வொரு ஜன்னலிலும் புதிய காட்சிகள்..! - விண்டோஸின் பயணம்

பில்கேட்ஸ்

1995ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சாதாரண மக்களை நினைவில் வைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டம், டாஸ்க் பார், சிஸ்டம் ட்ரே, நோட்டிபிகேசன், மேக்சிமைஸ்-மினிமைஸ் ஆகிய எல்லா வசதிகளுடன் விண்டோஸ்-95 வெளியானது...

ஒவ்வொரு ஜன்னலிலும் புதிய காட்சிகள்..! - விண்டோஸின் பயணம்

1995ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சாதாரண மக்களை நினைவில் வைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டம், டாஸ்க் பார், சிஸ்டம் ட்ரே, நோட்டிபிகேசன், மேக்சிமைஸ்-மினிமைஸ் ஆகிய எல்லா வசதிகளுடன் விண்டோஸ்-95 வெளியானது...

Published:Updated:
பில்கேட்ஸ்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!/

வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டர் இருக்கும். அதில் என்னுடைய சாப்ட்வேர் தான் இயங்கிக் கொண்டிருக்கும்
பில்கேட்ஸ்

"ஜன்னலைத் திறந்தான். காட்சிகள் அவனைப் பார்த்தன"

என்பது கவிஞர் ராஜா சந்திரசேகரின் வரி. இணையத்திலும் இன்று சாளரத்தை திறந்தால் உலகம் உங்களை காண வழிவகை செய்துவிட்டது. உலகின் பல பகுதிகளில் கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) முதல் பதிப்பிலிருந்து, இன்று வெளியாகியுள்ள வெர்சன் 11 வரை வளர்ச்சி பெற்றுள்ளது.

பில்கேட்ஸ் மற்றும் பால் ஆவென் இணைந்து மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தை 1975ல் துவங்கினார்கள். மைக்ரோ-சாப்ட் என்பது மைக்ரோ கணினிகளுக்கான மென்பொருள் எழுதுகிறவர்கள் என்பது பொருள். நாளடைவில் பெயர் ஒன்றாகி மைக்ரோசாப்ட் என்றானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Microsoft
Microsoft

முதன்முதலில் அல்டெய்ர் பேசிக் என விளையாட்டு மென்பொருள் இவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்த வேலைகளுக்குப் பின் I.B.M நிறுவனம் தயாரிக்கும் பர்சனல் கம்யூட்டர்களுக்கான சாப்ட்வேரை தயாரிக்கும் பொறுப்பு மைக்ரோசாப்டுக்கு வந்தது. கூடவே O.S (operating system) தயாரிக்கும் பொறுப்பும். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் 1981ல் IBM-PC கம்ப்யூட்டர் மைக்ரோசாப்டின் சாப்ட்வேர் மற்றும் pc-dos ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவந்து வெற்றியடைந்தவுடன்.. ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் புதுமையை படைக்க விரும்பி கால மாற்றத்திற்கு தேவையான புதிய ஓ.எஸ்க்கு Interface Manager என பெயர் சூட்டினர்.

பின்னர் பெயரின் நீளம் கருதி Windows எனபெயர் சுருக்கினர். ஒவ்வொரு ஜன்னலை திறக்கும் போதும் புதிய காட்சிகள் உங்களுக்கு காணக்கிடைக்கும் எனும் உள் அர்த்தத்தோடு பெயர்சூட்டினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1985 நவம்பர் 20ம் தேதி மைக்ரோசாப்ட் விண்டோஸ்-1 எனும் பெயரில் இயங்குதளதை வெளியிட்டார் பில்கேட்ஸ்.அப்போது அதன் விலை 99 அமெரிக்க டாலர்.மல்டி டாஸ்கிங்,மவுஸ் பயன்பாட்டை அப்போதுதான் அதிகரித்தது.சில குறைபாடுகளுடன் தோல்வியடைந்தாலும் 1987 டிசம்பர் மாதம் 9ம் தேதி விண்டோஸ்-2 வெளிவந்தது.மைக்ரோசாப்ட் word, பவர்பாய்ண்ட், எக்ஸெல் உடன் இதில் கன்ட்ரோல் பேனல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்யூட்டரிலும் இரண்டு பிளாப்பி ட்ரைவுகள் மூலம் இயங்கு முறை சேர்க்கப்பட்டது. கோப்புகளை சீர்படுத்தும் முறை, விரிவாக்கப்பட்ட வன்பொருள் என நிறுவனத்திற்கு ஓரளவு வெற்றி தேடித் தந்தது.

Microsoft
Microsoft

அதற்குப் பிறகு விண்டோஸ் - 3.0 1990 மே22ம் தேதி வெளிவந்தது.

முதல் இரு வடிவங்களில் உள்ள குறைகளை சரி செய்து மேம்படுத்தப்பட்ட கன்ட்ரோல் பேனலுடன் கேம் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 3.1ல் மல்ட்டி மீடியா, வேகம், நம்பகத் தன்மையுடன் விண்டோஸில் அடுத்தடுத்து திறக்கிற பக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தது வரவேற்பைப் பெற்றது.

இரண்டு வருடங்களில் ஒரு கோடி சி.டிக்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.
முதல் இரண்டு மாதங்களில் மூன்று மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. இந்த overlapping windows தன்னிடமிருந்து காப்பியடித்தாக ஆப்பிள் நிறுவனம் நீதிமன்றம் சென்றது தனிக்கதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

*1995ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சாதாரண மக்களை நினைவில் வைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டம், டாஸ்க் பார், சிஸ்டம் ட்ரே, நோட்டிபிகேசன், மேக்சிமைஸ்-மினிமைஸ் ஆகிய எல்லா வசதிகளுடன் விண்டோஸ்-95 வெளியானது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது. ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.


*1998ம் ஆண்டு ஜூன் 25ல் விண்டோஸ் 98 அறிமுகமானது. MS-DOS அடிப்படையாகக் கொண்ட விண்டோஸின் கடைசி பதிப்பாகும்.

ஸ்கேனர், மவுஸ்,கீ போர்ட், ஜாய் ஸ்டிக் ஆகியவற்றை யு.எஸ்.பி போர்ட் மூலம் பயன்படுத்த முடிந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 4” இல் உள்ளமைக்கப்பட்டது.

Windows
Windows

*விண்டோஸ் 2000 செப்டம்பர் மாதம் மைக்ரோசாப்ட் என்.டி NT- NETWORK (WORKSTATION) தொழில்நுட்பத்தில் உருவாகி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2001ல் விண்டோஸ் எக்ஸ்பி செயல் திறன் மிகுந்த இதன் பயன்பாடு அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. File Management, பாதுகாப்பு, உறுதி, வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு வெளியானது.

அப்போது பலரும் இந்த வெர்சனைத் தான் அதிகம் பயன்படுத்தினர். அதனைத் தொடர்ந்து விண்டோஸ் சர்வர் 2003லும்,விரிந்த காட்சி எனப் பொருள்படும் விண்டோஸ் விஸ்டா 2006லும்,விண்டோஸ் சர்வர் 2008லும், விண்டோஸ் 7-2009லும், விண்டோஸ் சர்வர் 2012லும் பல ஓ.எஸ்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. முதல் 9 மாதங்களில் 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன.

2012 அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 வெளியிடப்பட்டது. இதில் ஸ்டார்ட் மெனு உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்ததால் அதிகம் பேர் விண்டோஸ் 7ஐயே பயன்படுத்தி வந்தனர்.அதனால் ஸ்டார்ட் ஆப்சன் சேர்க்கப்பட்டு விண்டோஸ் 8.1 வந்தது.2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டுமாக Windows 10 இயங்குதளம் சில கூடுதல் மேம்பாட்டுடன் windows 11 ஆக ஜூன் 24 அன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்டின் அடுத்த தலைமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள Windows 11 இயங்குதளம், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

விண்டோஸ் 11ன் திரை 720p அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கிறது. task bar, start menu திரையின் நடுவில் இருக்கும்.இதன் அருகிலேயே search option இருப்பதால் எளிதில் தேட உதவுகிறது. cloud storage file மற்றும் data களை எளிதில் தேட முடியும்.

Windows
Windows

Auto HDR இருப்பதால் வீடியோக்கள் மற்றும் image துல்லியமாக இருக்கும்.

DirectX 12 சப்போர்ட் செய்வதால் திருப்தியான அனுபவத்தைப் பெறலாம்.Touch screen இருப்பதால் கீ போர்ட் இல்லாமலேயே பயன்படுத்தலாம். voice typing, writing என அத்தனை அம்சங்களுடன் பாகுபலி ட்ரைலர் போல் விண்டோஸ் 11 வந்துள்ளது.டாஸ்க் பாரில் சாட் பாக்ஸ் உள்ளதால் அதன் மூலம் எளிதாக மெசேஜ்,வீடியோ கால் ஆடியோ கால் செய்யும் வசதி உள்ளது.

Widget update செய்திருப்பதால் செய்தி, வானிலை ஆகியவை துல்லியமாய் இருக்கும். Snap group& snap layout ல் நிறைய பக்கங்களை ஒரே நேரத்தில் திரையில் பார்க்கலாம். ஸ்னாப் தளவமைப்புகள் மூன்று விண்டோக்களை அருகருகே வைப்பது, ஒரு பெரிய விண்டோ இரண்டு சிறிய விண்டோக்களை பக்கத்தில் அடுக்கி வைக்கும் வசதி இருக்கிறது.

ஸ்கிரீனின் பல்வேறு பொஷிஷன்களில் ஆட்டோமேட்டிக்காக ஒரு tab-ஐ வைக்க யூஸர்களுக்கு உதவுகிறது. வாய்ஸ் டைப்பிங் வசதியுடன்.. ஆன்ராய்ட் app களை சப்போர்ட் செய்யும் விதத்தில் Microsoft storeல் பதிவிறக்கம் செய்து கணினியில் கையாள வகை செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் windows 10 வைத்திருப்பவர்கள் மட்டும் விண்டோஸ் 11ஐ அப்டேட் செய்யலாம் என சொல்லியுள்ளனர். க்ராக்ட் வெர்சன், டூப்ளிகெட்&பீட்டா வெர்சன் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள்.

*new wall paper new theme பத்து வகைகள் உள்ளன. Transparent மற்றும் அனிமேஷன்கள் அசைவுடன் கூடிய விண்டோக்கள் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


*start மெனு நடுவில் இருக்கும். விரும்பினால் இடது புறம் வைத்துக் கொள்ளலாம்.


*மைக்ரோசாப்டின் Teams..வீடியோ கான்ஃபெரன்சிங் மற்றும் மெசேஜிங் வசதி உள்ளிணைக்கப்பட்டுள்ளது


*அடிக்கடி உபயோகிக்கும் செயலிகள், முதலில் பார்க்க வேண்டியவைகளை pinned முறையில் மேலே customize செய்து வைத்துக்கொள்ளலாம்.

*HDR அல்லாத கேம்களை விளையாடும் போது,HDR ஆனது தானாகவே லைட்டிங்கை புதுப்பித்துக் கொள்ளும்.

*search ல் தேடலின் நேரத்தை குறைக்கும் வகையில் பரிந்துரைகளையும் காட்டும்


*ஒவ்வொரு ஐகான்களின் கீழே நிழல் போல குறிப்புகள் உள்ளன.

ஒவ்வொரு ஜன்னலிலும் புதிய காட்சிகள்..! - விண்டோஸின் பயணம்

*split-screen mode இதில் உள்ளது கூடுதல் வசதி.

*widgets இதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலே பக்கங்களை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது கீழே முக்கியச் செய்திகள் மற்றும் கட்டுரைகளையும் க்ளிக் செய்து படிக்கலாம்..பார்க்கலாம்.

*பயன்பாட்டில் இருக்கும் போது வரும் இ-மெயில்களை appல் சென்று பார்க்காமல் உடனடியாய் அவ்வப்போது படிக்கலாம்.
முதன்முதலில் வந்த கணினிகள் பெரிய அளவில் இருந்தன. தற்போது கணினிகள் பாக்கெட்டுகள் வைத்து செல்லும் அளவிற்கு கூட வந்துவிட்டன. உலகின் சுருக்கமும் டெக்னாலஜியின் வேகமும் புதிய பாய்ச்சலில் இருக்கிறது. அதற்குஉதவுவது போல் ஆப்ரெட்டிங் சிஸ்ட்ம் முன்னேறிக் கொண்டே வருகின்றன.

விண்டோஸ் 11 முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் போதுதான் இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறியமுடியும்.


-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism