Published:Updated:

கேர் எமோஜி பார்த்தா வசூல்ராஜா படம் நியாபகம் வருது... ஏன் தெரியுமா?- சினிமா காதலர் பகிர்வு#MyVikatan

Care
Care ( Pixabay )

மார்க் நம்மை நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறார். வியாபாரத்தின் அடிப்படையே மனித உணர்வுகளும் மனிதனின் அறியாமையும் தான்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முதலில் ஃபேஸ்புக்கில் 'Care' எமோஜி கொண்டுவந்த மார்க்குக்கு நன்றி சொல்வோம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் 'கேர்' எமோஜி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த எமோஜி அனைவருக்குமே முற்றிலும் புதுமையாக இருந்தது. சிலர் அதை "வாயில் பீடா அதக்கி கொதக்கிக்கொண்டிருப்பது போல் உள்ளது" எனவும் வாந்தி எடுப்பதுபோல் உள்ளது எனவும் கேலி செய்தனர். ஆனால், அப்போதே சிலர் "அட இது நம்ம வசூல்ராஜா கமல் சொல்லிக் கொடுத்த கட்டிப்பிடி வைத்தியம்ப்பா..." என்று ரொம்ப எளிமையாக அந்தக் கேர் எமோஜியின் பயன்பாட்டைக் கூறிப் புரிய வைத்தனர்.

வசூல் ராஜா mbbs
வசூல் ராஜா mbbs

'வசூல்ராஜா' படத்தில் மருத்துவமனை தூய்மைப்பணியாளர் எப்போதும் எல்லோரிடமும் கடுமையாக நடந்துகொண்டிருக்க கமலிடமும் அதேபோல் நடந்துகொள்வார். மற்றவர்களைப்போல கமல் அவரை "போயா யோவ்" என்று கடந்துசெல்லாமல் அவர் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவரது கோபத்தைக் குறைத்து, கட்டிப்பிடி வைத்தியம் செய்வார். தூய்மைப் பணியாளரான என்னைக் கட்டிப்பிடிக்குறிங்களே என்று அவர் வியப்பார். அப்போது அவர் கொடுக்கும் ரியாக்சன் செம. (தசாவதாரம் படத்திலும் சாக்கடை குழிக்குள் இறங்கத் தயாராக இருக்கும் தொழிலாளிகளின் உப்புத் தடவிய உடலை கட்டியணைத்து தன் அன்பை வெளிப்படுத்துவார்).

அதே வசூல்ராஜா படத்தில் கேன்சர் நோயாளி ஒருவர் நான் சாகப்போகிறேன் என்று வருந்த "அதெல்லாம் ஒன்னியும் கிடையாது..." என்று கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லுவார் கமல். இதுபோல் அந்தப் படத்தில் பல கட்டிப்பிடி வைத்தியங்கள் காட்டியிருப்பார்கள். இன்று அதே எமோசனை ஒரு எமோஜியில் கொண்டு வந்திருக்கும் மார்க் உண்மையிலேயே 'ஜீனியஸ்'தான். (கமல் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்ல வரவில்லை) மார்க் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறேன்.

Care
Care
Matheus Ferrero on Unsplash

வியாபாரத்தின் அடிப்படையே மனித உணர்வுகளும் மனிதனின் அறியாமையும்தான். அதில் மனித உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் அந்த வியாபாரிக்குத் தோல்வி என்பதே கிடையாது. அந்த வகையில் இன்று ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய செயலிகளில் முழுக்க, வெறுப்புணர்வு பிரசாரம்தான் அதிகளவில் நடந்துவருகிறது.

இன்னும் சொல்லப்போனால் அந்தச் செயலிகள் நவீன சாதிச்சண்டை மைதானங்களாக மதக்கலவர மைதானங்களாக மாறிவருகிறது. (நீ வாடா டேய்... ஃபேஸ்புக் வாடா... என் ஃபேக் ஐடிய வச்சு உன்ன என்ன பண்றேன் பாருடா டேய்...) இது உச்சக்கட்ட தனிமனித தாக்குதல்களாக மாறி அவர்களைத் தற்கொலை வரை கொண்டு செல்கிறது. மிகப்பெரிய பிரபலங்கள்கூட இந்தச் சமூக வலைதளங்களிலிருந்து முற்றிலும் விலகிவிடலாமா என்று தோன்றுகிறது எனப் பேட்டி அளிக்கின்றனர்.

Care
Care
Lidya Nada on Unsplash

இன்னும் சிலர் சோக ஸ்டேட்டஸ்கள், விரக்தி வார்த்தைகள் போன்றவற்றை நிறைய பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். உலகம் முழுக்க இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலக மக்களின் அந்த 'Depression' உணர்வை புரிந்துகொண்ட ஃபேஸ்புக் 'Care' எமோஜியை கொண்டுவந்து அதன் மூலமாக தற்கொலைகளைக் குறைக்க முடியுமா, மன உளைச்சல்களைக் குறைக்க முடியுமா என்று பரிசோதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் உலவும் ஆதரவற்ற ஜீவன்களின் வீடியோக்களுக்கு நாம் 'care' எமோஜியை அழுத்தத்தொடங்கி இருக்கிறோம். நமக்கு முகநூலில் நண்பராக இருப்பவர், அவ்வளவாகப் பழக்கம் இல்லாதவர் என்றபோதிலும் அவர் 'feeling sad', 'feeling depressed', 'feeling low' என்று ஸ்டேட்டஸ் வைத்தாலோ 'வானம்' படத்தில் வரும் "என்ன வாழ்க்கைடா இது" போன்ற வசனங்களைப் பயன்படுத்தினாலோ நம் கைகள் அனிச்சையாக 'care' எமோஜியை அழுத்தத்தொடங்கி உள்ளன.

Mark Zuckerberg with his child
Mark Zuckerberg with his child

அப்படி ஸ்டேட்டஸ் வைப்பவர்களிடம் "என்னாச்சு" என்று கேள்விகேட்டால் கேள்வி கேட்கும் நம்முடைய சந்தோசம் போய்விடும் என்பதற்காக கண்டிப்பாக "ஒண்ணுமில்ல மச்சான் சும்மா" என்று சமாளிப்பார்கள். ஆனால், அவர்களின் எமோசன் நமக்குப் புரியாமல் இல்லை. அந்த இடத்தில் 'ஹாஹா' எமோஜியைப் பயன்படுத்தினால் அவர்களின் எமோசனை பழிப்பது போல் இருக்கும். ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை அல்ல.

எம்.எஸ்.தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் செய்துகொண்ட தற்கொலை ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதை உலுக்கியது, "நாங்கலாம் இருக்கறப்ப நீ எப்படிடா இப்படி பண்ணிக்கிட்ட" என்ற வார்த்தைகளைத்தான் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பலரும் கூறியிருந்தார்கள். வார்த்தைகளும் பாஷையும் வெவ்வேறாக இருந்தாலும் எமோசன் ஒன்றுதான். அந்த எமோஷனை தான் கேர் எமோஜியாக அறிமுகப்படுத்தினார் மார்க்.

நீ உண்மையிலேயே மனித உணர்வுகளைப் புரிந்துகொண்ட மார்க் ஜீனியஸ்தான்!

- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு