Published:Updated:

செனாப் ரயில் பாலம்: ஈபிள் டவரைவிட அதிக உயரம்; உலகின் முக்கிய பாலமாகியிருக்கும் ஆச்சர்யப் பின்னணி!

செனாப் ரயில் பாலம்
News
செனாப் ரயில் பாலம்

செனாப் நதியின் குறுக்கே இந்த ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான ரயில் பாலமாக செனாப் அமைந்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் துவங்கப்பட்ட ரயில்வே துறை இன்று இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் ரயில்வே துறை உலகின் மிகப்பெரிய இரயில்வே துறையாகவும் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ரயில்வே துறையும் பல வளர்சிகளை கண்டிருக்கிறது. அப்படி தற்போது காஷீமீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் செனாப் ரயில் பாலம். செனாப் நதியின் குறுக்கே இந்த ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான ரயில் பாலமாக செனாப் அமைந்துள்ளது. இதன் உயரம் 359 மீ. நீளம் 467 மீ. செனாப் ரயில் பாலம் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் உயத்தையே மிஞ்சிவிட்டது.

செனாப் ரயில் பாலம்
செனாப் ரயில் பாலம்

ஈபிள் டவரின் உயரம் 324 மீ. செனாப் ரயில் பாலம் ஈபிள் டவரை விட 35 மீ உயரம் கொண்டது. இது நில அதிர்வுகளில் ரிக்டர் அளவுகோலில் 8 வரை தாங்க வல்லது. வடக்கு ரயில்வே துறையின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுவதாக தலைவர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். உத்தம்பூர் , ஶ்ரீ நகர் , பரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ் 1486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலம் மணிக்கு 266 கிமீ வேகத்தை தாங்க வல்லதாகவும் உள்ளது. ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், முன்னாள் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் என பல தலைவர்கள் செனாப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிரந்த வண்ணம் உள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz