Published:Updated:

`இந்த ஊர் எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே..!' - சென்னையின் ரசிகை #MyVikatan

Representational Image
Representational Image ( Rajkumar K / Pixabay )

நீண்ட கடற்கரை மணலைப் போன்றே சென்னையின் வரையறையும் ஒரு கட்டுக்குள் அடங்காதது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்னை

உலகின் 35 பெரிய நகரங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் அதிநவீன மெட்ரோபாலிடன் பட்டியலில் சென்னைக்கு நான்காம் இடம்.

இன்றைய கொரோனாவின் நெருக்கடியில் அது தேசிய அடையாளமாய் மாறிக்கொண்டிருக்கிறது .

ஒன்றும், இரண்டுமாய் தொடங்கிய நோய்த்தொற்று, இரு மாத இடைவெளியில் தினசரி செய்திகளில் பதற்றமான களமாய்க் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டது .

சென்னை தனக்கான தனித்துவங்கள் ஏதுமில்லா நகரம். பூர்வகுடிகளை தூரத்தில் இருத்திவிட்ட, புலம்பெயர் மக்களின் ஆதர்ச கனவுலகம் அது.

Representational Image
Representational Image

கிராமத்திய வெள்ளை வேட்டி மனதுகளின், கெட்டும் பட்டணம் சேர நினைக்க வைத்தது அன்றைய மதராஸபட்டினம்.

ஊர் எல்லையம்மனின் நினைவுகளோடும் சிறகு விரியா கனவுகளோடும் கிராமங்களின் கடைசிப் பேருந்தின் படிக்கட்டுகள் இன்று வரை காத்துக்கிடக்கிறது, வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னைக்காய்.

நிறம் உணர்வதில்லை, மொழிப் பிரச்னை இல்லை. சாதி அறியா சமத்துவ மனநிலை இல்லையெனினும் அடுத்தவன் எல்லை மீறிப் பயணிக்காத நாகரிகம் அறிந்தவர்கள் சென்னைவாசிகள்.

12 கி.மீ நீண்ட கடற்கரை மணலைப் போன்றே சென்னையின் வரையறையும் ஒரு கட்டுக்குள் அடங்காதது.

அத்தகைய சென்னையின் சமீபகால நிகழ்வுகள், ஒரு நிலையற்ற மனித மனங்களில், பிழைப்புக்காய் நுழைந்தவர்களின் வாழ்வுக்குள் அநேகக் குழப்பங்களை விதைத்தபடியே நகர்கிறது .

2004-ன் ஆழிப்பேரலையும்

2015-ன் வெள்ளப்பெருக்கும்

2016-ன் வர்தாவும்

கடந்து வந்ததே இந்தக் குடியேறிகளின் ஜார்ஜ் கோட்டை நகரம்.

2020-ன் கொரோனாவும் அத்தகைய பேரிடர் கால நிகழ்வுக்குள் சென்னை மக்களை இழுத்துச் செல்ல எத்தனித்து நிற்கிறது .

தினமும் 1000 பேருக்குத் தொற்று என்ற எல்லையைக் கொரோனா தொட, சென்னை நமக்கு பதற்றமான ஒன்றாய் நினைவில் வருகிறது ஒவ்வொரு கணமும் .

மழையற்ற மேகங்கள்

நீர்வரா தண்ணீர்க் குழாய்கள்

நெருக்கியடித்த ரயில் பயணங்கள்

பரபர நடைகள்

தனித்தே சஞ்சரிக்கும் தனிமனித வாழ்வியல்கள்

தன்னம்பிக்கை மனிதர்கள்

என

பல அடையாளம் சுமந்த சென்னையின் தார்ச்சாலைகள் இன்று ஆளற்ற சிக்னல்களில் அவஸ்தையோடு தனித்துத் தவிக்கிறது.

Representational Image
Representational Image

இரைச்சல் நகரின், பாதியும் நிரம்பா இரைப்பைகளின் வாழ்வாதாரம் என்ன ஆயிற்று என விளங்க இயலவில்லை

அந்நிய தேசத்தால் இறக்குமதி செய்யப்பட்ட நுண்கிருமியின் தொற்றுதலில் நம்மை மீட்க வேண்டிய காலச்சூழல், அழைத்தபடியே இருக்கிறது நம் ஒவ்வொரு மனதிலும்.

உணர்வற்று சுற்றிய சென்னை இளைஞனை ஓர் இரவு தண்ணீர் மழை தெருவுக்கு இழுத்துவந்தது.

தனக்கு மறுக்கப்பட்ட கல்விக்காக மரித்துப்போன அனிதாவுக்காக அடுக்களையிலும் நாம் அழுததுண்டு.

நதிகளை நாம் இன்னும்

இணைக்கவில்லை

மதங்களை இன்னும்

மறக்கவில்லை

சாதிய இன ஒழிப்பு

இன்னும் சாத்தியமில்லை.

ஆணவக்கொலைகளை

அடக்கவில்லை

ஆதாரின் அவசியங்கள் இன்றளவும்

புரிபடவில்லை

டெல்டாவின் கண்ணீர்

டெல்லியை என்றும் எட்டுவதில்லை

எனவே

இயற்கைப் பேரிடர்களில்

மட்டுமே தமிழனாய் மாறிப் போவது

அல்ல 7 கோடி மக்களின் மனிதப் பேராற்றல்

அவை

பதினான்கு கோடி கரங்களால் செயல்படுவதற்காகவே காத்துக் கிடக்கிறது.

ஆகவே இணைப்போம்

சென்னையையும் நம்மையும்..!

-சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு