Published:Updated:

தோப்புக்குள் அண்ணண் சுட்ட போண்டாவும் பதறி ஓடிவந்த ஊர் மக்களும்! - கூட்டாஞ்சோறு மெமரீஸ் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நாங்கள் 3, 4 பேரு சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்வோம். விளையாட்டு பேருதான் கூட்டாஞ்சோறு, ஆனால் அரிசி, பருப்பு எதுவும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சில பேருக்கு சமையல் ஒரு ஆர்ட்.

சில பேருக்கு சமையல் ஒரு தொழில்.

இன்னும் சிலருக்கு பொழுதுபோக்குனு சொல்லலாம்.

லாக் டௌனில் பெரும்பாலானோர் சமையலை ரசித்து ருசித்து செய்து கொண்டிருக்கிறார்கள். சமையலறை பற்றி தெரியாத நிறைய ஆண்களும் புதுப்புது டிஷ் செய்து பார்க்கிறார்கள். சோஷியல் மீடியாவை திறந்தாலே, கொரோனா செய்திகளுக்கு நிகராக சமையல் ஸ்டேட்டஸ் வலம் வருகிறது. சமைக்க ஆசை இல்லையென்றாலும், நண்பர்கள் அப்டேட் செய்யும் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டோரியைப் பார்த்த, நாமும் ட்ரை செய்யலாம் என்று ஒரு எண்ணம் வரும். அதன் பின்னர் என்ன.. களத்தில் இறங்க வேண்டியதுதானே.

Representational Image
Representational Image

குறைந்தபட்சம் அம்மாவுக்கு உதவி செய்து, அதை போட்டோ, வீடியோ எடுத்து, ``இட்ஸ் ஆல் ஏபோட் டுடே’’ என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துவிடுவோம். பிளே ஸ்டோரில் குக்கிங் கேம்ஸ் விளையாடாதவர்களைக் கூட, இந்த லாக் டௌன் சமைக்க வைத்திருக்கிறது.

இந்த குக்கிங் கல்ச்சர் சேலிபிரிடீஸையும் விட்டு வைக்கவில்லை. எனக்கு இதையெல்லாம் பார்க்கும்போது, சின்ன வயதில் தேங்காய் தொட்டில கூட்டாஞ்சோறு செய்தது நினைவுக்கு வருகிறது. ஆட்டோகிராப் படத்தின் நியாபகம் வருதே சாங் சிந்தையில் எட்டிப் பார்க்கிறது.....

அப்போது எனக்கு 8, 9 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் நொண்டி, பச்ச குதிரை, பம்பரம் இதெல்லாம் எனக்கு அவ்வளவாக விளையாட வராது. கண்டோழி, ஓடி பிடித்து விளையாட்டு, அப்புறம் கூட்டாஞ்சோறு செய்வது.... இவைதான் எனக்கும், என் கூட்டாளிகளுக்கும் மெயின் விளையாட்டு. அதுவும் கூட்டாஞ்சோறு விளையாட அடுப்பு, தொட்டி பாத்திரங்கள் எல்லாமே அம்மாக்களே ரெடி பண்ணி கொடுத்துவிடுவார்கள். ஏன் என்றால் எங்கும் தொலைந்துவிடாமல், ஒரே இடத்தில், அம்மாவின் பார்வையிலேயே இருப்போம் என்று அம்மாவுக்கு எண்ணம். நாங்கள் 3, 4 பேரு சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்வோம். விளையாட்டு பேருதான் கூட்டாஞ்சோறு, ஆனால் அரிசி, பருப்பு எதுவும் இருக்காது.

Representational Image
Representational Image

காட்டில் கிடைக்கிற காய், இலையெல்லாம் பறித்து, அரிசிக்கு பதிலாக மணல் போட்டு செய்வோம். இதை பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கொண்டுபோய் கொடுப்போம். அவர்கள் சின்ன ரியாக்க்ஷன் கொடுத்தால்போதும், வானுக்கும் பூமிக்கும் குதிப்போம். சில நேரத்தில வீட்டுக்கு வருகிறவர்களுக்கு அம்மா டீ கொடுத்தால், நாங்கள் பின்னாடியே போய் கூட்டாஞ்சோறு சாப்பிடுங்கனு சீரியஸாக நாங்கள் செய்த மண் சோற்றை கொடுத்த நியாபகம் இருக்கிறது. கொஞ்சம் வளர்ந்த பின்னர் இந்த ரீல் சமையல் விளையாட்டை ஒரு நாள் ரியலாக செய்தோம்.

அன்று நான், என் பெரியப்பா மகன், மகள் என நாங்கள் 3 பேரும் பெரியப்பா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தோம். வீட்டில் யாரும் இல்லை, எல்லோரும் காட்டில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் ஒரு பிளான் செய்து வீட்டில் இருந்த சில்வர் பாத்திரம், எண்ணெய், மைதா மாவு, தீப்பெட்டி இதையெல்லாம் எடுத்துக்கொண்டு தோப்புக்குள் சமைக்கப் போய்விட்டோம். என்ன செய்யப்போகிறோம் என்று எந்த ஐடியாவும் இல்லை, ஆனால், முந்தையநாள் ஸ்கூல் பஸ் ஸ்டாப் பக்கத்தில், போண்டா சுடுவதைப் பார்த்தோம்.

Representational Image
Representational Image

அதனுடைய எஃபெக்ட் என்று நினைக்கிறேன். அக்கா மாவு பிசைய ஆரம்பித்துவிட்டார். நானும், அண்ணனும் அடுப்பு தயார் செய்து, பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அடுப்பு பற்றவைத்தோம். எங்களுக்கு ஒரே ஹேப்பி, வெறும் இலை, மணல் என சமைத்துக்கொண்டிருந்த நாங்கள், இப்போது நிஜமாகவே சமைக்கிறோம் என்று பெருமிதமாக இருந்தது. ஆனால், ரிசல்ட் வேறமாதிரி இருந்தது. கொதித்துக்கொண்டிருந்த எண்ணெயில், அண்ணா மைதா மாவை அள்ளி ஊற்றிவிட்டான்.

நானும், அக்காவும் எடுபிடிகள்தான். அண்ணண்தான் மெயின் செஃப். எனவே மைதா எண்ணெயில் விழ, எண்ணெய் அண்ணா முழங்காலில் தெறித்துவிட்டது. மூன்று பேரும் ஓ... ஓ... என அழ ஆரம்பித்துவிட்டோம். அண்ணாவுக்கு பெரிய தீக்காயம் ஆகிவிட்டது. நான் பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அடுப்பில் ஊற்றிவிட்டேன். அந்த இடமே புகையாக மாறிவிட்டது.

Representational Image
Representational Image

காட்டில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எங்கள் அழுகை சத்தம் கேட்டு பயந்து ஓடி வந்துவிட்டார்கள். மூன்று பேரையும் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் செம அடி, அண்ணாவுக்கு மட்டும் அடி கொஞ்சம் கம்மி. காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு, இனிமேல் இந்த விளையாட்டு விளையாடக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அன்றுதான் கூட்டாஞ்சோறு கடைசியாக செய்தது என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு ரீல் சமையலே இல்லை, ஒன்லி ரியல் சமையல்.

-சரண்யா ஜெ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு