Published:Updated:

`முதல்வர் ஸ்டாலினின் பணி; பிரதமர் மோடி- போப் சந்திப்பு'-தூத்துக்குடி விழிப்புணர்வு கிறிஸ்மஸ் குடில்!

விழிப்புணர்வு கிறிஸ்மஸ் குடில்
News
விழிப்புணர்வு கிறிஸ்மஸ் குடில்

இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், சம்பவங்களை அடிப்படையாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்மஸ் குடிலை அமைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் இசிதோர் பர்னாந்து.

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று (டிசம்பர் 25) கிறிஸ்மஸ் பண்டிகையை நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகையையொட்டி வீடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் அமைத்தும் வழிபட்டு வருகின்றனர். தூத்துக்குடி, லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் இசிதோர் பர்னாந்து. இவர், ஒவ்வொரு வருடத்தின் கிறிஸ்மஸ் பண்டிகையின்போதும் அந்தந்த வருடத்தின் துவக்கம் முதல் இறுதி வரை உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள், சிறப்புகளை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வீட்டில் கிறிஸ்மஸ் குடில் அமைத்து வருகிறார்.

விழிப்புணர்வு குடில்
விழிப்புணர்வு குடில்

இதுவரை இயற்கைப்பாதுகாப்பு, புவி பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, உலக சமாதானம், செல்போன் கதீர்வீச்சு பாதுகாப்பு, இயற்கைப் பேரிடன்போது மனிதனிடம் தென்பட்ட மனிதம், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடில் அமைத்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ஆண்டும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை நடந்த முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து குடில் அமைத்துள்ளார். இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளான ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி உலகையே அச்சுறுத்திய தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல், பெண் அடிமைத்தனப் போக்கு, உயிர்பிழைக்க விமானத்தின் மேலே இருந்து கீழே குதித்து உயிர் நீத்த அப்பாவி பொதுமக்கள், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஆகியவை குறித்த ஓவியம் இடம் பெற்றுள்ளது.

விழிப்புணர்வு குடில்
விழிப்புணர்வு குடில்

அத்துடன், பல வருடங்களுக்கு பிறகு போட்டிகளை எதிர்கொண்டு பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டது, பிரதமர் மோடி மதநல்லிணக்கமாக போப் ஆண்டவரை இத்தாலியில் சந்தித்த நிகழ்வு, கொரோனோ காலத்திலும் மழை வெள்ளப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை களத்தில் இறங்கி செய்த தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டும் விதமாகவும், இன்றைய சூழலில் சகோதரத்துவம், நம்பிக்கை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை உணர்த்தும் விதமாகவும் கிறிஸ்மஸ் குடில் அமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து ஓவிய ஆசிரியர் இசிதோட் பர்னாந்துவிடம் பேசினோம், “ஒவ்வொரு வருசமும் அந்தந்த மாசத்துல நடந்த முக்கிய நிகழ்வுகள், சம்பவங்களை தனியா ஒரு நோட்டுல குறிச்சு வச்சுக்குவேன். அது சம்மந்தமான புகைப்படங்களை நாளிதழ், வார இதழ்களில் இருந்து கட்டிங்களாக எடுத்து வச்சுக்குவேன். புகைப்படங்கள் சேகரிப்பு மட்டுமில்லாமல், அது தொடர்பான ஓவியங்களை நானே சார்ட் அட்டையில வரைஞ்சுக்குவேன்.

விழிப்புணர்வு குடில்
விழிப்புணர்வு குடில்

இதில் பெரும்பாலானவை ‘ஆனந்தவிகடன், ‘ஜூனியர் விகடன்’ இதழ்களில் இருந்தது எடுக்கப்பட்டவை. நான் விகடனின் தொடர் வாசகர் என்பதால் இவை எளிதாகக் கிடைத்தது. டிசம்பர் மாதம் 20-ம் தேதி நானும் என் மனைவியும் கலந்தாலோசித்து எதை எதை காட்சிப்படுத்தலாம், எவை முக்கியமானது, எப்படிக் காட்சிப்படுத்தலாம் என்பதை முடிவு செய்வோம்.

அப்படித் தேர்வு செய்தவற்றை ஒருமுகப்படுத்தி கிறிஸ்மஸ் குடிலுடன் காட்சிப் படுத்தியிருக்கோம். தொடர்ந்து 27வது வருசமா இது போன்ற விழிப்புணர்வு குடிலை அமைச்சுட்டு வர்றேன். இந்தக் குடியில் இடம்பெறும் ஓவியங்கள் கருத்துச் சித்திரங்கள் மட்டுமில்லாமல் குழந்தை இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பும் ஒவ்வொரு ஆண்டும் வித்யாசப்படும்.

விழிப்புணர்வு குடில்
விழிப்புணர்வு குடில்

இந்த ஆண்டு, மாணவர்கள் பயன்படுத்திய 2,000 ஸ்கெட்ச் பேனாக்களை பயன்படுத்தி குடில் அமைச்சிருக்கேன்” என்றார். விழிப்புணர்வு கிறிஸ்மஸ் குடிலை பள்ளி, கல்லூரி மாணவர்கள், அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.