Published:Updated:

எல்லா அப்பாக்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்..! #MyVikatan

Representational Image
Representational Image ( ritesh arya from Pexels )

என்னுடைய அப்பா எப்படிப்பட்ட அப்பாவாக எனக்கு இருக்கிறார் என்பதைச் சொல்கிறேன்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம் பெயருக்கு முன்னாலும் (இனிஷியல்) பின்னாலும் அப்பாவின் பெயரை சேர்த்துக் கொள்கிறோம், அந்த அளவுக்கு அப்பா நமக்கு முக்கியமானவராகவும் அடையாளம் தருபவராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட அப்பாக்கள் நம்மை சரியாக வளர்த்து ஆளாக்கி கல்யாணம் செய்து வைத்து பேரனை தூக்கி கொஞ்சுவதன் மூலம் இந்த வாழ்க்கையை முழுவதுமாக திருப்திகரமாக வாழ்ந்ததாக சந்தோச படுகிறார்கள்.

Representational Image
Representational Image

மகன்களிடம் அப்பாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை "சந்தோஷ் சுப்ரமணியம்", சமுத்திரக்கனியின் "அப்பா", "பசங்க", "பசங்க 2", "யாரடி நீ மோகினி", "கிரீடம்", "எம்மகன்", "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "பரியேறும் பெருமாள்", "அசுரன்", "தவமாய் தவமிருந்து" போன்ற படங்களில் சிறப்பாக காட்டி இருப்பார்கள்.

அந்த வகையில் என்னுடைய அப்பா எப்படிப்பட்ட அப்பாவாக எனக்கு இருக்கிறார் என்பதை சொல்கிறேன்.


1. சிறுவயது முதல் இப்போது வரை நான் போன் செய்தால் எடுத்ததும் அவர் "சொல்லு கண்ணு", "சொல்லு சாமி", "சொல்லுப்பா", "ஏங் கண்ணு", "ஏஞ் சாமி", "ஏப்பா" போன்ற வார்த்தைகளால் தான் உரையாடலை தொடங்குவார்.

2. அப்பாவுக்கு டீ, காபி, பால் குடிக்கும் பழக்கம் இல்லை... ஆனாலும் அவர் காலை ஐந்து மணிக்கே எழுந்து பால் வாங்கி வருவார்.

3. சிறுவயதில் கறி சாப்பிடும் பழக்கம் இருக்கும்போது தன் தட்டில் இருக்கும் ஈரலை தனியாக எடுத்து சாப்பிட கொடுப்பார். இப்போது நான் சைவத்திற்கு மாறிவிட "பையன விட்டுட்டு நாம மட்டும் எப்படி கறி சாப்ட்றது..." என்று அப்பாவும் சைவத்திற்கு மாறிவிட்டார். அவரை பார்த்து அம்மாவும் மாறிவிட்டார்.


4. தன்னுடைய பிறந்தநாளில் புதுத்துணி அணிந்து கோவிலுக்கு கூட போகாத அப்பா என்னுடைய பிறந்த நாளன்று விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கிவிட்டு ஒரு பர்த் டே (ஒரு கிலோ) கேக்கை வாங்கி வந்து என்னிடம் கொடுத்துவிட்டு எதையும் எதிர்பார்க்காமல் வேலைக்கு ஓடிவிடுவார்.

Representational Image
Representational Image

5. எதாவது பலகாரம் செய்தால் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து தின்றுவிட்டு மீதியை எனக்கு கொடுத்துவிடுவார். வீட்டிற்கு தாமதமாக வரும் இரவுகளில் "நீ சாப்டியாப்பா..." என்ற கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டு தான் சாப்பிட தொடங்குவார்.

6. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாத அப்பா, எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எத்தனை வேலை இருந்தாலும் அதை ஓரம் தள்ளி வைத்துவிட்டு முதல் வேலையாக என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களின் நம்பிக்கை வார்த்தைகளை கேட்ட பிறகுதான் மற்ற வேலைகளுக்குச் செல்வார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7. அம்மா விஷேசங்களுக்குச் சென்றுவிட்டு அங்கேயே தங்கிவிடும் இரவுகளில் என்னுடைய சமையல் தான். சில சமயங்களில் காரமோ உப்போ கூடுதலாக இருக்கும் அல்லது சப்புனு இருக்கும்... இருந்த போதிலும் "எப்படி இருக்குங்ப்பா..." என்று கேட்டால் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் "நல்லாருக்குப்பா... என்ன காரம் தான் கொஞ்சம் எச்சா போச்சு..." என்பார் எந்த முக கோணலும் இல்லாமல்.

8. ஆசையாக இருக்கும் நாட்களில் பரோட்டா வாங்கி வரச் சொல்லி போன் செய்தால் "செரிப்பா... வாங்கிட்டு வரேன்..." என்று காசு இல்லை என்றாலும் ஒப்புதல் கொடுத்துவிட்டு கடன் வாங்கியாவது ஒன்பது மணிக்குள் வாங்கி வந்துவிடுவார். ஒன்பது மணி வரை என்னை பசியோடு இருக்க வைக்க மாட்டார்.

Representational Image
Representational Image
Ketut Subiyanto from Pexels

9. படிப்புக்காக என்று சொல்லிவிட்டால் போதும் அந்த புத்தகம் ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் வாங்கி தந்துவிடுவார் அல்லது சொன்ன நேரத்திற்குள் காசு ஏற்பாடு செய்து வந்து என் கையில் கொடுத்து விடுவார்.

10. கடைசியாக ஐந்தாவது படிக்கும்போது நான் செய்த தவறுக்காக அப்பா என்னை அடித்தார். டியூசன் டீச்சர் "தம்பிய அடிக்காதீங்க" என்று சொன்ன நாளில் இருந்து இன்று வரை என்னை அடிப்பதில்லை. எந்த தவறாக இருந்தாலும் வார்த்தைகளால் எச்சரிப்பதோடு சரி.

மகன்களை பெற்ற எல்லா அப்பாக்களுக்கும் அப்பாவை தன் உயிரினும் மேலாக நேசிக்கும் எல்லா மகன்களுக்கும் "கிரீடம்" படத்தில் வரும் "கனவெல்லாம் பலிக்குதே... என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே..." என்ற பாடலையும் இந்த கட்டுரையும் சமர்ப்பிக்கிறேன்.

- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு