Published:Updated:

விஐபி நபர்களைப் பாதுகாக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ்...! - எப்படிச் செயல்படும்? #MyVikatan

சி.ஆர்.பி.எஃப் - பாதுகாப்பு
சி.ஆர்.பி.எஃப் - பாதுகாப்பு

சமீபத்தில் ஒரு நடிகைக்கு பாதுகாப்பு அரணாக படைகள் வந்தபோது அது `ஒய்’ படையா, `ஒய் ப்ளஸ்ஸா’ என்ற சந்தேகம் வந்தது. அதை அறிந்துகொள்ள நேர்கையில் சில விஷயங்கள் தெரிந்தன...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்றல் அதுவே படை

என்கிறார் வள்ளுவர். எமனே படை திரட்டி வந்தாலும், திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடையதே படை.

ஒவ்வொரு முறை தலைவர்களின் பாதுகாப்புக்கு வரும் படைகளை ஆச்சர்யமாய் பார்ப்போம்.

சமீபத்தில் ஒரு நடிகைக்கு பாதுகாப்பு அரணாக படைகள் வந்தபோது, அது `ஒய் படையா’, `ஒய் ப்ளஸ்ஸா’ என்ற சந்தேகம் வந்தது. அதை அறிந்துகொள்ள நேர்க்கையில் சில விஷயங்கள் தெரிந்தன.

ஒவ்வொருவருக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதுபோல உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரத்யேகப் பாதுகாப்பு அளிக்க பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன.

இவர்கள் தவிர விஜபிக்கள், நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பு அமைப்பு X, Y, Y+, Z, Z+, SPG ஆகிய சிறப்பு பாதுகாப்புகளை வழங்குகிறது.

சி.ஆர்.பி.எப்
சி.ஆர்.பி.எப்
தி.விஜய்

#பாதுகாப்புப் படைகள்

நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப் - C.R.P.F), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ். எஃப் - C.I.S.F),எல்லைக் காவல்படை, இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படை, சஹாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal) ஆகிய ஐந்து படைகள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்துதான் பாதுகாப்புப் பிரிவுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதில் சி.ஆர்.பி.எஃப் எனும் படைப்பிரிவு 1939-ல் உருவாக்கப்பட்டு, 1949-ல் முறைப்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. சி.ஐ.எச்.எஃப் எனும் தொழில் பாதுகாப்புப் படை 1983-ல் தொடங்கப்பட்டது. இது போன்ற படைகளில், பயிற்சி பெற்றவர்கள்தான் நியமிக்கப்படுவர்.

இவை தவிர பல்வேறு படைகளில் சிறப்பாகப் பணியாற்றும் படைவீரர்களையும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்புப் படையில் ஈடுபடுத்துவர்.

Black Cats
Black Cats
Kumaresan.S

இவர்களில் Black Cats என்பவர்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் ஆவர். கர்நாடகத்திluள்ள பெல்ஹாம் பள்ளியில் கமாண்டோ பயிற்சி பெற்றவர்களே பிளாக் கேட்ஸாக வர முடியும். ஆயுதம் இன்றியே எதிரிகளைச் சமாளிக்கும் வல்லமை பெற்றவர்கள் இவர்கள். கறுப்பு அல்லது பழுப்பு நிற சஃபாரி உடை அணிந்திருப்பர்.

#பாதுகாப்புப் பிரிவு

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவை தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள், வி.வி.ஐ.பி., உள்ளிட்ட தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

பல்வேறு வகையான பாதுகாப்பு பிரிவுகள்

X பிரிவு பாதுகாப்பில் இரண்டு வீரர்கள் இடம்பெறுவர். இது, அமைச்சர் அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாகும். பாதுகாப்புப் படைகளில் கடைநிலைப்பிரிவு இது. இதில் கமாண்டோக்கள் இல்லை.

Y பிரிவு பாதுகாப்பு என்பது நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் மூன்று வேளை சுழற்சிமுறையில் பணியில் இருப்பர். ஒருவர் துப்பாக்கி ஏந்தியும், நிலையான பாதுகாப்புக்கு மற்றவர்களும் இருப்பர்.

Y plus பாதுகாப்பு என்பது உளவு அமைப்புகள் அளிக்கும் அச்சுறுத்தல் காரணமாக அளிக்கப்படும். ஆயுத கமாண்டோக்கள் சுழற்சி முறையில் இருவர் துப்பாக்கி ஏந்தி 24 மணி நேரமும் பாதுகாப்பார்கள். 11 முதல் 22 பேர் வரை இருப்பார்கள்.

Y plus
Y plus

(11 பி.எஸ்.ஒ வீரர் இருப்பர். இவர்களில் ஒன்று அல்லது இரண்டு மத்திய காவல்துறை கமாண்டோக்கள் மற்றும் இதர காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்களில்லாமல் இரண்டு பர்சனல் செக்யூரிட்டி கார்டுகளும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படுவார்கள்)

Z பாதுகாப்பு பிரிவில் 22 வீரர்கள் மூன்று வேளை சுழற்சி அடிப்படையில் இருப்பர். (நான்கு அல்லது ஐந்து கமாண்டோ வீரர்கள் இருப்பர்).

அதி நவீன துப்பாக்கிகள் மற்றும் நவீன சாதனங்கள் வழங்கப்பட்டிருக்கும். ஆறு பேர் துப்பாக்கி ஏந்தியும் மற்றவர் பாதுக்காப்பு பணியிலும் இருப்பர்.

இவர்களில் டெல்லி காவல்துறை, ஐ.டி.பி.பி (ITBP) மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF) உள்ளடங்குவர்.

Z plus பாதுகாப்பு பிரிவில் 36- 55 வீரர்கள் மூன்று வேளை சுழற்சி அடிப்படையில் பணியாற்றுவர். எட்டு பேர் (24 பேர் மூன்று சுழற்சி அடிப்படையில்) அதிநவீன துப்பாக்கி ஏந்தி காவல் காப்பர்.

*SPG (Special Protection Group) என்பது ஓர் உயரடுக்கு பாதுகாப்பு முறையாகும். இது நாட்டின் பிரதமர்கள், முன்னாள் பிரதமர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படுகிறது.

1984-ல் பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டதை அடுத்து, 1985-ல் எஸ்.பி.ஜி தொடங்கப்பட்டது. 1989-ல் வி.பி.சிங் பிரதமரானபோது ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி வாபஸ் பெற்றது. பின் அவரின் படுகொலைக்குப் பின்னர் முன்னாள் பிரதமரின் குடும்பங்களுக்கும் பத்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் விதி திருத்தப்பட்டது.

பாதுகாப்பு படை வீரர்கள்
பாதுகாப்பு படை வீரர்கள்

SPG பாதுகாப்பு பணியிலிலுள்ளோர் சிறப்பு பயிற்சி பெற்ற நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவர். மறைத்துவைக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இருப்பர். குண்டு துளைக்காத உள்ளாடைகள், கையுறை, சன் கிளாஸுடன் இருப்பார்கள். இதில் CRPF, BSF, IPS பிரிவினைச் சார்ந்தவர்கள் இருப்பர். இந்தப் பணியில் உள்ளவர்களுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த நவீன பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. தானியங்கி துப்பாக்கி, க்ளோக் 17 வகை பிஸ்டல் வைத்திருப்பார்கள்.

தற்போதைய பிரதமரின் பாதுகாப்புப் பணியிலிருக்கும் எஸ்.பி.ஜி உடன் இருக்கும் வீரர்களுடன் Counter Assault Team (CAT) இருக்கும். இந்தக் குழு FN-2000, P-90, Glock-17, Glock-19 மற்றும் FN-5 போன்ற நவீன ஆயுத அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. பிரதமர் மீதான எந்தவொரு தாக்குதலின்போதும் அதி விரைவாக நடவடிக்கை எடுப்பதே இவர்களின் சிறப்பு.

#இஸட் ப்ளஸ் பாதுகாப்பு

உச்சகட்ட பாதுகாப்பு என்பது இஸட் ப்ளஸ் பாதுகாப்பு ஆகும். இஸட் ப்ளஸ் பாதுகாப்பில் 55 வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்களில் 10 பேர் வரை NSG கமாண்டோ பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

``ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தேன், என் பிள்ளைகள் தானா வளர்ந்தாங்க!" - நெகிழும் ஆசிரியை #MyVikatan

மீதமுள்ளவர்கள் போலீஸ் அணியைச் சேர்ந்தவர்கள். இந்த பாதுகாப்பு வி.வி.ஐ.பி-களுக்கு (VVIPs) வழங்கப்படுகிறது. முதல் சுற்று பாதுகாப்புக்கு என்.எஸ்.ஜி பொறுப்பாகும். எஸ்.பி.ஜி (SPG) இரண்டாவது அடுக்கில் அதிகாரிகளைக் கொண்டுள்ளது. இவர்களைத் தவிர, ஐ.டி.பி.பி மற்றும் சி.ஆர்.பி.எஃப் பணியாளர்களும் பாதுகாப்பில் நிறுத்தப்படுவர். எஸ்.பி.ஜி கமாண்டோக்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு இஸட் ப்ளஸ் பிரிவின் பாதுகாப்பின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

இதில், ஒரு குண்டு துளைக்காத வாகனம், இரண்டு பாதுகாப்பு வாகனம் மற்றும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் மொத்தம் 24 பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு ராணுவ பாதுகாப்பு மட்டுமன்றி இஸட் ப்ளஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

இஸட்-ப்ளஸ்
இஸட்-ப்ளஸ்

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 'இஸட்-ப்ளஸ்' கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் என்ற அடிப்படையில், 1991-ம் ஆண்டிலிருந்து இஸட்- ப்ளஸ் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. பின் 2016-ல் வாபஸ் பெறப்பட்டது. கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டு முதல் இஸட்-ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. அவர் இறப்புகுப் பின் வாபஸ் பெறப்பட்டது. மத்திய உளவுத்துறை அறிக்கையின் பேரில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இஸட் ப்ளஸ் வழங்கி பின் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் அதிநவீன துப்பாக்கி (Hecler and Koch MP5) ஏந்தியிருப்பர். இந்தப் பாதுகாப்பில் 1-2 எச்சரிக்கை கார்கள், முன் மற்றும் பின்புற பைலட் மற்றும் மூன்று ஷிஃப்டுகளில் மூன்ரு, நான்கு மாநில போலீஸார், இரண்டு முதல் நான்கு வரை பின்தொடர கார்கள் பாதுகாப்பு அதிகாரிகள் PSO இவையனைத்தும் பாதுகாப்பு அரணாக இருக்கின்றன. இந்தியாவில் தற்போது 17 வி.ஐ.பி.க்கள் இஸட் + வகை பாதுகாப்பைப் பெறுகின்றனர். இதற்கென மாதம் 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.
எப்போதும் தன்னலம் கருதாது, தன்னுயிரை துச்சமென நினைத்துப் பாதுகாக்கும் தன்னலமற்ற வீரர்கள் பாதுகாப்பு படையினராவர்.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு