Published:Updated:

கீழ்வெண்மணி - எரியும் நினைவுகள்! வரலாற்றுத் துயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கீழ்வெண்மணி
News
கீழ்வெண்மணி

கீழ்வெண்மணி : தமிழக வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயரம் சம்பவம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

கீழ்வெண்மணி... தமிழக வரலாற்றின் தழும்பு, சாதியம், நிலப்பிரபுத்துவம் என்னும் இரு அதிகாரக் கருத்தியல்களின் வன்முறைக்கான அழுத்தமான சாட்சி. ‘சேரன்மாதேவி குருகுலப் பிரச்னை’யைப் பிராமணிய ஆதிக்கத்துக்கான வரலாற்று உதாரணம் என்று சொன்னால், கீழ்வெண்மணிக் கொடூரத்தை இடைநிலைச் சாதியாதிக்க மனநிலையின் சான்று எனச் சொல்லலாம். ஒருவகையில் தமிழகத்தின் முக்கியமான மூன்று அரசியல் இயக்கங்களான பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவை வெண்மணிச் சம்பவத்தோடு தொடர்புடையவை. கீழத்தஞ்சைப் பகுதிகளில் பண்ணையாதிக்கத்துக்கும் சாதியத்துக்கும் எதிரான வீரஞ்செறிந்த போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தினார்கள். அதன் எதிர்வினைதான் கீழ்வெண்மணிச் சம்பவம். கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற நிலப்பிரபுக்கள், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.

கீழ்வெண்மணி
கீழ்வெண்மணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் சகாப்தம் முடிவடைந்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்த காலத்தில்தான் இந்த வெண்மணிப் படுகொலை நடைபெற்றது. பிராமணிய எதிர்ப்பையும் தமிழின அரசியலையும் முன்வைத்த தி.மு.க, சாதிய-வர்க்கப் பிரச்னையில் சமரசம் செய்துகொண்டதைத்தான் வெண்மணிப் பிரச்னையில் அவர்களின் நிலைப்பாடு காட்டுகிறது. விகடன் தடம் இதழில் கீழ்வெண்மணிச் சம்பவம் நடந்து 50-ம் ஆண்டு தொடஙகிய நிலையில் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டோம். வெண்மணி காலகட்டத்திலும் சமகாலத்திலும் நிலவும் அரசியல் - சமூக நிலைகள் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன.

மார்க்ஸியம், பெரியாரியம், தலித்தியம் என வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட எழுத்தாளர்களின் இந்தக் கட்டுரைகள் பல்வேறு கருத்தியல் அணுகுமுறைகளை முன்வைக்கின்றன. இது ஒரு துயரமான வரலாற்றை நினைவுகூர்வது மட்டுமல்ல, அதிகாரத்தைப் புரிந்துகொள்வதும் வரலாற்றை விசாரணை செய்வதும்கூட. முழு கட்டுரையைப் படிக்க க்ளிக் செய்யவும்.