Published:Updated:

`கேரளாவில் மட்டும் எப்படி சாத்தியமானது?' -வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

பள்ளி மாணவர்களுக்குக் கணினி மற்றும் தொலைக்காட்சி வகுப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளனர்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``ராமா ராமா பெல்லடி

ராமச்சந்திரா பெல்லடி

சீதா சீதா பெல்லடி

சீக்கிரமா பெல்லடி"

இதைப் பாடாத அரசுப் பள்ளி மாணவர்களே இருக்க முடியாது. ஆனால், தற்போது இப்பாடல் கேரளாவில் ஒலிக்கிறது

`ஃபர்ஸ்ட் பெல்' திட்டத்தின் மூலம்.

Representational Image
Representational Image
Kimberly Farmer / Unsplash

பேரிடர் காலத்தில் கேரள அரசு கொரோனாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போல, கல்வித்துறையிலும் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மே 26 முதல் 30-ம் தேதிவரை பொதுத்தேர்வு நடைபெற்றது. அங்கு தற்போதுவரை எந்த மாணவ மாணவியருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி. அதோடு அல்லாமல் மே 29-ம் தேதி `ஃபர்ஸ்ட் பெல்' எனும் அதிகாரபூர்வ ஆன்லைன் வகுப்புகள் ஜூன் 1 முதல் தொடங்குவதாக அறிவித்தது.

ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. வகுப்புகள் லைவ் ஆன் கைட் விக்டர்ஸ் சேனல், victers.kite.kerala.gov.in ஃபர்ஸ்ட் பெல் என்ற பெயரில் ஒளிபரப்பப்படுகின்றன. வகுப்புகளின் நேரடி ஸ்ட்ரீமிங்கை காண வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

#அட்டவணை

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான கால அட்டவணையில் 11 ஆம் வகுப்பு தவிர 1 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அமர்வுகள் நடைபெறும். வகுப்பிற்கான நேரங்கள் வேறுபட்டவை.

வகுப்புகளுக்கான பாடவேளைகள் வேறுபட்டவை. அவை அரை மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை வேறுபடுகின்றன.

தினசரி அரை மணிநேரம் என்பதால் அதிக நேரம் இணையமோ, தொலைக்காட்சியோ பார்க்க வேண்டியதில்லை. இப்படி அனைத்தையும் `Well planned' ஆக நடத்துகின்றனர்.

Representational Image
Representational Image
Patrick Amoy / Unsplash

#எப்படி சாத்தியமானது?

இணைய வசதி எங்கள் ஊரில் இல்லை எனச் சொல்ல முடியாது. பல்வேறு டிவி சேனல்கள் முதல் பெல் ஒளிபரப்பிற்கான அலைவரிசைகளை விளம்பரப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியில் பார்க்கலாம். பள்ளி மாணவருக்கு கணினி மற்றும் தொலைக்காட்சி வகுப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அங்கன்வாடி மையம், நூலகங்கள், அக்சயா மையங்களிலிருந்து தொலைக்காட்சி மற்றும் இணைய வசதியைப் பெற கல்வித்துறை பரிந்துரை செய்தது.

வயநாட்டின் கல்பேட்டா சிபிஎம் எம்.எல்.ஏ சி.கே.சசீந்திரன், 1,331 பொதுவான ஆய்வு மையங்களை ஏற்பாடு செய்தார், முக்கியமாக பழங்குடி காலனிகளில் மின் இணைப்புகள் மற்றும் தொலைக்காட்சிகளைத் தர ஏற்பாடு செய்துள்ளார்.

கொச்சியில் `டேப்லெட் சவாலை' அறிமுகப்படுத்திய எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஹைபி ஈடன், ஒவ்வொரு வீட்டிலும் மாணவர்கள் கற்றலை உறுதிசெய்யும் முயற்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.

முன்னாள் மாணவர் சங்கத்தினர், தொழிலதிபர்கள், உள்ளாட்சி அமைப்பினர் `டிவி சவாலின்' ஒரு பகுதியாக தொலைக்காட்சிப் பெட்டிகளை ஏழை மாணவ மாணவியருக்கு வழங்கினர். அயல்நாட்டில் வசிப்போரும் செய்தியறிந்து உதவியுள்ளனர்.

ஆலப்புழா மாவட்டத்தில், காஞ்சிக்குசி கிராமப் பஞ்சாயத்து 75 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளது. திருச்சூரில், மக்கள் முன்முயற்சியில் 600 மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

Representational Image
Representational Image
Andy Falconer / Unsplash

#சவாலான விஷயம்

2.42 லட்சம் மாணவர்களுக்கு கணினி வசதி இல்லை. எனவே, தொலைக்காட்சி பெட்டி மூலம் வகுப்பறையை வீட்டிற்கே கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் கணினி வசதி இல்லா மாணவர்களின் எண்ணிக்கை 1.20 லட்சமாக குறைந்தது. மற்றவருக்கு பொதுவான வகுப்பறை மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இரு வாரங்களுக்குள் அனைத்து மாணவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மற்றும் மடிக்கணினிகளை வாங்க அனுமதித்தனர். உள்ளாட்சி அமைப்புகள் டிவி வாங்க 75% தொகையை KSFE வழங்கும்.

கேரளத்தின் சொந்த தயாரிப்பான `கொகோனிக்ஸ்' ரூ.29,000 முதல் 39,000 வரை மூன்று மடிக்கணினிகளை சந்தைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. அரசு தனியார் பங்கேற்புடன் தயாரிக்கப்படும் முதலாவது மடிக்கணினி ஆகும். பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளைவிட விலை குறைவு.

ஆண்டுக்கு 2 லட்சம் மடிக்கணினிகளை உற்பத்தி செய்ய கொகோனிக்ஸ் திட்டமிட்டுள்ளது.

பள்ளி தொடங்க காலதாமதமாவதால் மாணவர்களை கற்றலில் ஈடுபட ஆயத்தம் செய்ய இதைக் கையில் எடுத்திருப்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு என்றால் இணையம் இருந்தால்தான் சாத்தியம் என்பதை மாற்றி தொலைக்காட்சியை பயன்படுத்திய சேட்டன்களுக்கு என் சல்யூட்.!

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு