Published:Updated:

லாட்டரியில் விழுந்த ரூ.10 கோடி பம்பர் பரிசு 6 நாட்களாக வாங்க ஆளில்லை! அடுத்து என்ன நடக்கும்?

கேரள அரசின் விஷு லாட்டரி சீட்டு

கேரள லாட்டரியில் பரிசு விழுந்தால் தொகையின் தன்மைக்கேற்ப அதை வாங்கும் வழிமுறைகள் உள்ளன. பரிசை எத்தனை நாள்களுக்குள் வாங்க வேண்டும் எனவும் விதிகள் உள்ளன.

லாட்டரியில் விழுந்த ரூ.10 கோடி பம்பர் பரிசு 6 நாட்களாக வாங்க ஆளில்லை! அடுத்து என்ன நடக்கும்?

கேரள லாட்டரியில் பரிசு விழுந்தால் தொகையின் தன்மைக்கேற்ப அதை வாங்கும் வழிமுறைகள் உள்ளன. பரிசை எத்தனை நாள்களுக்குள் வாங்க வேண்டும் எனவும் விதிகள் உள்ளன.

Published:Updated:
கேரள அரசின் விஷு லாட்டரி சீட்டு

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகை, மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை, கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மூலம் அதிஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மலையாள புத்தாண்டு தினமான விஷு தினத்தைக் கடந்த மாதம் லாட்டரி முன்னிட்டு முதல் பம்பர் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட லாட்டரி டிக்கெட் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. ஒரு லாட்டரி சீட்டு 250 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 43.86 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் 43,69,202 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. லட்டரி டிக்கெட் மூலம் கேரளா அரசுக்கு சுமார் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் லாட்டரி குலுக்கல் கடந்த 22-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்தில் வைத்து நடந்தது. அதில் ஹெச்பி 727990 (HB 727990) என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. அந்த சீட்டு வாங்கியது யார் எனத் தெரியவில்லை. வழக்கமாக லாட்டரி குலுக்கல் நடந்த சில மணி நேரத்துக்குள்ளாகவோ, அல்லது ஒருசில நாட்களிலோ பரிசு பெற்றவர் யார் எனத் தெரிந்துவிடும். ஆனால் குலுக்கல் நடைபெற்று நேற்றுடன் 6 நாள்கள் நிறைவடைந்த நிலையில் 10 கோடி ரூபாய் பரிசு பெறும் அதிஷ்டசாலி யார் எனத் தெரியவில்லை.

கேரள லாட்டரி
கேரள லாட்டரி
மாதிரி படம்

10 கோடி ரூபாய் பரிசு பெற்றுள்ள லாட்டரி சீட்டு பழவங்காடி பகுதியில் உள்ள சைதன்யா என்ற லக்கி சென்டர் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து ரங்கன் என்ற சில்லறை விற்பனையாளர் வாங்கி திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே குலுக்கலுக்கும் 12 நாள்களுக்கு முன்பு லாட்டரியை விற்பனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்தின் அருகில் விற்பனை நடந்ததால் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்லும் வழியில் யாராவது வாங்கச் சென்றிருக்கலாம் எனவும், அந்த நபருக்கு லாட்டரியில் பரிசு விழுந்த விபரம் தெரியாமல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு வேளை பரிசு விழுந்த லாட்டரி சீட்டுடன் அந்த நபர் வராமல் இருந்தால் என்ன நடக்கும் என லாட்டரி துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "குலுக்கல் நடந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சாதாரணமாக லாட்டரி டிக்கெட்டை ஆஜர்படுத்த வேண்டும். 30 நாள்களில் ஆஜர்படுத்த முடியவில்லை என்றால், அதன் பிறகு தகுந்த காரணங்களுடன் லாட்டரி அலுவலகத்தில் மனு அளித்து லாட்டரி சீட்டை ஒப்படைக்கவேண்டும். மாவட்ட அதிகாரிகள் 60 நாள்கள் வரை காரண மனுவுடன் லாட்டரி டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம்.

பணம்
பணம்
மாதிரி படம்

குலுக்கல் நடைபெற்று 60 நாட்களுக்குப் பிறகு லாட்டரி டிக்கெட் ஒப்படைக்கப்பட்டால், பரிசு வழங்குவது பற்றி லாட்டரி இயக்குனரகம் தீர்மானிக்கலாம். இயக்குனரகம் முடிவு செய்யும் அதிகாரம் 90 நாள்கள் வரை மட்டுமே உள்ளது. 90 நாள்களுக்குப் பிறகு பரிசு விழுந்த லாட்டரி சீட்டு ஒப்படைக்கப்பட்டாலும் பணம் கொடுக்கப்படமாட்டாது. லாட்டரி பரிசுத் தொகை அரசு கஜானாவுக்குச் சென்றுவிடும்" என்கிறார்கள் லாட்டரி அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு முதல் பரிசு தேர்வான டிக்கெட் ஒப்படைக்கப்படாமல் இருந்ததால் பணம் அரசுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாட்டரி டிக்கெட்டில் பரிசு விழுந்தாலும் அதை பெற்றுக்கொள்வதிலும் பல வழிமுறைகள் உள்ளன. லாட்டரி டிக்கெட்டில் விழுந்த பரிசுத்தொகை 5000-க்கு கீழ் என்றால் சம்பந்தப்பட்ட லாட்டரி கடையில் சென்று டிக்கெட்டை ஒப்படைத்து பரிசுத் தொகையை வாங்கிக்கொள்ளலாம். பரிசுத்தொகை ஐந்தாயிரம் ரூபாய்க்கு கூடுதலாக இருந்தால் அடையாள அட்டையுடன் வங்கியிலோ அல்லது லாட்டரி அலுவலகத்திலோ டிக்கெட்டை ஒப்படைத்து பரிசு பெறலாம். பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் டிக்கெட்டை அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டின் பின்பக்கம் குறிப்பிட்டுள்ள இடத்தில் முகவரி அஞ்சல் குறியீடு எண் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். லாட்டரி டிக்கெட்டின் இரு பக்கங்களையும் நகல் எடுத்து அதில் சுய சான்றொப்பம் செய்து, அசலையும் நகலையும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

லாட்டரி
லாட்டரி
மாதிரி படம்

லாட்டரி துறையில் பரிசு பெறுவதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து, பரிசு பெற்றவர் தனது இரண்டு புகைப்படங்களை ஒட்ட வேண்டும். அந்த போட்டோக்களில் கெசட்டட் ஆப்பீசரிடம் இருந்து கையெழுத்து வாங்க வேண்டும். கையெழுத்திடும் ஆப்பீசர் தனது பெயர், பதவி, சீல் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். படிவம் பூர்த்திசெய்யப்பட்ட பிறகு பரிசு பெறுபவர் ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டி அதன்மீது கையெழுத்திட்டு, முழு முகவரியை எழுத வேண்டும். பான் கார்டு, ஆதார் கார்டுகளின் இருபுறமும் நகலெடுத்து சுய கையொப்பமிட்டு வழங்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள் கிடைத்த பிறகு சமர்ப்பிக்கலாம். வங்கிக் கணக்கு புத்தகத்தில் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பக்கத்தை நகலெடுத்து, சுய சான்றொப்பம் இட்டு சமர்ப்பிக்க வேண்டும். இதுபோக வங்கிகளுக்கென தனி நடைமுறைகள் உள்ளன. இவையாவும் முழுமையாக கேரள லாட்டரித்துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பரிசுத்தொகை பெறுவதற்கு இதே நடைமுறையுடன் நோட்டரி முத்திரை, கையொப்பம் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும். கேரளா அரசு கொடுத்த அடையாள அட்டைஅட்டையோ, அல்லது கேரளத்துக்கு நாம் வந்துசென்ற காரணம் குறித்த கடிதமோ சமர்ப்பிக்க வேண்டும். இங்கு குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் மேலோட்டமானவைதான். முழுமையான நடைமுறைகள் கேரளா லாட்டரி துறையின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது குலுக்கலில் விழுந்துள்ள பரிசுத்தொகையை யாராவது வாங்க வருவார்களா, அல்லது அரசு கஜானாவுக்கு செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism