Published:Updated:

தமிழ் சினிமாவின் டைட்டானிக்! #11YearsOfMadrasapattinam #MyVikatan

Madrasapattinam, Arya, Amy Jackson
Madrasapattinam, Arya, Amy Jackson

இத்தனை வருடங்கள் ஆன பின்பும் சலிப்பை ஏற்படுத்தாத இந்தப் படத்தின் சிறப்பம்சங்களை பகிர்கிறேன்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு சில படங்களை முதல் தடவை பார்க்கும்போதே அவ்வளவு சலிப்பாக இருக்கும். குறிப்பாக சமீபத்திய படங்கள். அதே சமயம் ஒரு சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்கவே சலிக்காது. அந்த வகையில் ஆர்யாவின் "மதராசபட்டினம்" எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத படம். அந்தப் படம் வெளியாகி இன்றுடன் 11 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்கள் ஆன பின்பும் சலிப்பை ஏற்படுத்தாத இந்தப் படத்தின் சிறப்பம்சங்களை பகிர்கிறேன்...

1. முதல் சிறப்பம்சம் எதுவென்றால் அது இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் மற்றும் நா. முத்துக்குமார் கூட்டணி. பூக்கள் பூக்கும் தருணம் பாடல் அவ்வளவு இனிமையானது. இன்றைக்கும் பலருடைய வாட்சப் ஸ்டேட்டஸ்களில் ரயிலாக ஓடுகிறது.

-மதராசபட்டினம்
-மதராசபட்டினம்

2. இந்தப் படத்திற்கு நிறைய தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு விருது கூட கிடைக்காதது பெரிய ஏமாற்றம். உடை அலங்காரம் என்ற பிரிவில் தேசிய விருது பெற்றிருக்க வேண்டிய படம்.

3. ஆர்யா நடித்த சிறந்த படங்கள் எது என்று கேள்வி எழுப்பினால் நான் கடவுள், மகாமுனி, மதராசபட்டினம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு மனம் கவரும் வகையில் நடித்திருப்பார். துரையம்மா பள்ளி, துரையம்மா மருத்துவமனை என துரையம்மாவுக்காக உழைத்த இளம்பரிதியை ஆண்பெண் பேதமின்றி காதலிக்க வைக்கிறது ஏஎல்விஜய்யின் எழுத்து.

4. காற்றிலே காற்றிலே பாடலில் இந்திய சுதந்திர போராட்டத்தையும் இருகாதலர்களின் போராட்டத்தையும் இணைத்து காண்பித்து இருப்பார்கள். அதை சுட்டும் வகையில் "போர்க்களம் நடுவிலும் ரகசியமாய் பூவொன்று மலர்ந்திடுமே" என்ற வரியை எழுதி இருப்பார் நா. முத்துக்குமார்.


5. அன்றைய பொது சமூகத்தில் தாழ்த்தப்பட்டவனாக கருதப்படும் வண்ணான் தொழில் செய்பவரை திரையில் ஹீரோவாக காட்டியது பாராட்டுக்குரியது. அதிலும் வெள்ளைக்கார துரைகளை எதிர்த்து சண்டை போட வைத்தது ஒரு வகையில் புரட்சிகரமான காட்சிகள் என்றே சொல்லலாம்.

'மதராசபட்டினம்'
'மதராசபட்டினம்'

6. நாசர் மல்யுத்த சண்டை பயிற்சியாளராக நடித்திருப்பார். ஆர்யா வெள்ளைக்காரனுடன் மோதும் சண்டைக்காட்சி அவ்வளவு மிரட்டலாக இருக்கும்.


7. "வாம்மா துரையம்மா... இது வங்க கரையம்மா..." என்ற பாடலில் மதராசபட்டினம் சிறப்பம்சங்களை எடுத்துரைப்பார் ஆர்யா. மேகமே ஓ மேகமே என்ற பாடலில் பலவிதமான குரல்களில் பாடி இருப்பார் நடிகர் விக்ரம்.


8. வெள்ளைக்கார பெண் / இளவரசி எளிய தமிழனை விரும்புவதோடு அவனுக்காக தமிழ் மொழியை கற்பது போன்ற காட்சிகள் வைத்தது பாராட்டுக்குரியது.


9. இந்தியன் படத்துக்குப் பிறகு சுதந்திர போராட்டத்தை உணர்ச்சிகரமாக காட்டிய ஒரே தமிழ்ப்படம் மதராசபட்டினம்.


10. தமிழ் சினிமாவின் டைட்டானிக் அது கண்டிப்பாக மதராசபட்டினம் மட்டுமே!


இத்தகு சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்தப் படம் பத்து வருடம் அல்ல, இன்னும் நூறு வருடம் ஆனாலும் கொண்டாடப்படும்.

- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு