Published:Updated:

1000 பேரை தத்தெடுத்து அன்னையாக வாழ்ந்த சிந்துதாய் சப்கல் மரணித்தார்! அவரின் வாழ்க்கைக் கதை தெரியுமா?

சிந்துதாய் சப்கல்
News
சிந்துதாய் சப்கல்

சிந்துவின் கணவர் 80 வயதில் இவருடன் இணைவதற்கு வருகிறார். சிந்து அவரையும் ஆதாரவற்றவர்களுடன் இணைத்து, தன் குழந்தைகளில் இவர்தான் மூத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் பலரும் தங்கள் அளப்பரிய சேவையால் அறியப்படுவதுண்டு. அப்படி மகாராஷ்டிராவில் பிறந்து பலருக்கு தாயாக இருந்தவர் தான் சிந்துதாய் சப்கல். பலருக்கும் ஆதரவாக தன் வாழ்நாளைக் கழித்த சிந்துதாயின் வாழ்க்கை அத்துணை இனிமையான பொழுதுகளால் நிறைந்தவை அல்ல. சிறுவயது முதலே பல துயரங்களைக் கடந்தே வளர்ந்தார் சிந்துதாய். சிந்துவின் தந்தை ஆடு மேய்ப்பவர். சிந்துவை ஓர் ஆண் குழந்தை போல வீரமாக வளர்தெடுக்கிறார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாக நான்காம் வகுப்பில் கல்வி தடைபடுகிறது. பின் தனது பத்து வயதில் ஶ்ரீ ஹரி சப்கால் என்பவருடன் திருமணம் நடக்கிறது. தன்னுடைய இருபது வயதில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறார். மூன்றாவது குழந்தை நிறை மாதமாக இருக்கும்போது சிந்துவின் கணவன் சிந்துவை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். அன்றிரவே ஓர் தொழுவத்தில் தன் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.

சிந்துதாய் சப்கல்
சிந்துதாய் சப்கல்

தந்தையும் இறந்துவிட தாய் வீட்டாரும் துரத்தி விடுகின்றனர். மூன்று குழந்தைகளோடு இரயில் நிலையத்தில் நின்றவளுக்கு பசி மற்றும் குழந்தைகளின் அழுகுரல் வாழ்க்கை மீதான பார்வையும், அடுத்து தான் செய்யவேண்டியது குறித்தும் சிந்துவை யோசிக்க வைத்தது. நம் நாட்டில் இது போன்ற பல அனாதைகள் ஆதரவற்றவர்கள் இருப்பதையும் தான் அவர்களுக்கு ஓர் தாயாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனது வாழ்க்கை முழுவதையும் ஆதாரவற்ற அனாதை மக்களுக்காவே அர்பணிக்கிறார். தன்னிடம் வருபவருக்கு தான் ஓரு தாயாக வாழ்ந்து வந்திருக்கிறார். இதுவரை 1000 மேற்பட்ட ஆதரவற்றவர்களை தத்தெடுத்திருக்கிறார். 207 மகன்கள் , 36 மருமகள்கள் மற்றும் 1000 பேரக் குழந்தைகள் உள்ளனர். தத்தெடுத்தவர்களில் பலரும் டாக்டர்கள் , இன்ஜீனியர்கள் தங்களுக்கென தனி ஆதரவற்றோர் மையங்களை கூட நடத்துகின்றனர். சிந்து குறித்த " மீ சிந்துபாய் சப்கால் " என்னும் மராத்திய திரைப்படமும் வெளி வந்திருக்கிறது.அதில் "சிறு பிரச்சனைகளை கண்டு கலங்க வேண்டாம். பிரச்சனைகளிலிருந்து மேலே எழுந்துவாருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்துதாய் சப்கல்
சிந்துதாய் சப்கல்

சிந்துவின் கணவர் 80 வயதில் இவருடன் இணைவதற்கு வருகிறார். சிந்து அவரையும் ஆதாரவற்றவர்களுடன் இணைத்து, தன் குழந்தைகளில் இவர்தான் மூத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையின் சுவை நிறைந்த கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். தனது ஒப்பற்ற சேவைக்கு எண்ணற்ற விருதுகள் வாங்கி இருக்கிறார். 2021 - ல் பத்ம ஶ்ரீ விருது வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்து சப்கால் ஜனவரி 4-ல் , தனது 72 வயதில் உயிரிழந்தார். பல ஆயிரம் பேருக்கு தாயாக இருந்தவர் இறந்தும் இதயங்களில் வாழ்வார் என பலரும் தெரிவித்துள்ளனர்.