Published:Updated:

ஆதார் எண் இல்லாமல் ஆதார் அட்டைகள் ? - ஒரு எளிய விளக்கம் #MaskedAadhaar #MyVikatan

ஆதார்
ஆதார்

நம்முடைய ஆதார் எண்ணை பிறர் அறியக்கூடாது என நாம் விரும்புவது இயல்பு. ஆதார் அட்டையில் நம்முடைய ஆதார் எண் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்தானே!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று இந்தியாவில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகக் கருதப்படுகிறது. நமது பல்வேறு தேவைகளுக்கும் நாம் ஆதார் அடையாளத்தைப் பயன்படுத்துகிறோம். ஏதேனும் ஒரு தேவைக்காக நமது ஆதார் அட்டையை நகல் எடுத்து அளிக்கும் போது, நம்முடைய ஆதார் எண் அதில் முழுமையாக இருக்கும்.

நம்முடைய ஆதார் எண்ணை பிறர் அறியக்கூடாது என நாம் விரும்புவது இயல்பு. ஆதார் அட்டையில் நம்முடைய ஆதார் எண் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்தானே!

ஆதார்
ஆதார்

ஒருவரது ஆதார் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஆதார் எண் ரகசியம் காக்கப்படவும் வேண்டி, The Unique Identification Authority of India (UIDAI) Masked Aadhaar என்ற வாய்ப்பை மக்களுக்கு வழங்கி வருகிறது.

Masked Aadhaar வாய்ப்பை மக்கள் பயன்படுத்த வேண்டி Twitter இல் UIDAI அமைப்பு விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது.

( https://twitter.com/UIDAI/status/1407620693169217536?s=19 )

நமது ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யும் போது Masked Aadhaar வாய்ப்பை நாம் பயன்படுத்தலாம். இதன் மூலம் Download செய்யப்படும் நமது இ-ஆதார் அட்டையில், ஆதார் எண் முழுமையாக இடம்பெறாது. கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே இடம்பெறும்.

Masked Aadhaar அட்டை வழக்கமான ஆதார் அட்டை போலவே அனைத்து உபயோகங்களுக்கும் செல்லுபடியாகும்.
ஏற்கனவே ஆதார் அட்டை உள்ள அனைவருமே Masked Aadhaar அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இது OTP அடிப்படையிலான சேவை என்பதால், ஆதார் எண்ணுடன் ஒருவரது மொபைல் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும்.

Masked Aadhaar பெறுவதற்கான வழிமுறைகள்:

* uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

* Download aadhaar என்பதை தேர்வு செய்யவும்.

* உங்களிடம் உள்ள Aadhaar எண், Enrollment எண் அல்லது VID எண் இவற்றில் ஏதேனும் ஒன்றை அளிக்கவும்.

* ஆதார் எண் Visible/Masked என்ற இரு வாய்ப்புகளில் Masked என்பதை தெரிவு செய்யவும்.

* உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

Aadhaar
Aadhaar

* ஆதாரில் உள்ளவாறு உங்களது முழு பெயரையும் உள்ளிடவும்.

* உங்கள் பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண்ணை உள்ளிடவும்.
* பாதுகாப்பு குறியீட்டை (Captcha) உள்ளிட்டு,Request OTP என்பதை அழுத்தவும்.

* உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும்.

* OTP யை உள்ளிட்டு Download Aadhaar என்பதை அழுத்தும்போது,நமது Masked Aadhaar download ஆகிவிடும்.


* இவ்வாறு Download செய்யப்பட்ட Masked Aadhaar இல் முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்டு,இறுதி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும்.


* Download செய்யப்பட்ட Aadhaar அட்டை Password கொண்டு பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

* ஆதார் அட்டையில் உள்ளவாறு ஒருவரது பெயரின் முதல் 4 எழுத்தும், பிறந்த வருடமும் இணைந்ததே e-Aadhaar யைத் திறப்பதற்கான Password ஆகும்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு