Published:Updated:

``எங்க குழந்தையோட படிப்புக்கு என்ன பண்ணனு தெரியல" - புலம்பெயர் தொழிலாளரின் கதை

புலம்பெயர் தொழிலாளர் சாவித்திரி
News
புலம்பெயர் தொழிலாளர் சாவித்திரி

மகள்களின் திருமணத்திற்கு தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை விற்று விடுகிறார். பிழைப்புக்கு குடும்பம் மொத்தமாக எஞ்சிய நிலத்தையே எதிர்பார்திருந்தது. நிலமும் கைவிரிக்கவே குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்திருக்கிறது

ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த ஊரில் தன் மக்களுடன் மகிழ்ந்து வாழவே விரும்புவர். ஆனால், காலத்தின் கணக்குகளில் பலவும் தப்பாகி விடுகின்றன. உடன் இருப்பவர்களும் சரிவர புரிந்துகொள்ளாது போக வறுமையும் மன நிம்மதியின்மையும் ஒருசேர ஆக்கரமித்துத் துன்புறுத்தல் நிகழும். அத்தருணங்களில் பலரும் தம் சொந்த நிலத்தைவிட்டு வெளியேறி பிழைப்புகாக மாநகரத்தில் தஞ்சமடைகின்றனர். கடந்த கொரோனா கால ஊரடங்கின்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் உடைமைகளையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு பாதம் வெடிக்க சொந்த ஊர் நோக்கி நடந்த காட்சிகளை நம்மால் மறந்திருக்க முடியாது. அப்படி வந்த பல்லாயிரம் பேரில் ஒருவரான சாவித்திரியின் கதைதான் இது. காலில் அப்பிக்கிடந்த சேற்றோடு, புதிரான பார்வையில் வரவேற்றார் சாவித்திரி. " வீட்ட விட்டு வந்து நாலு வருசம் ஆச்சு " என தான் வாழ்வாதாரத்துக்காக புலம்பெயர்ந்த கதையை விவரிக்கிறார். ஒடிசா மாநிலத்தில் ஓர் குட் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரி. உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். குடும்பத்தின் வறுமை கல்விக்குத் தடை போட்டது. தந்தை விவசாயத்தையே முழுவதும் நம்பி இருகிறார்.

புலம்பெயர் தொழிலாளர் சாவித்திரி
புலம்பெயர் தொழிலாளர் சாவித்திரி

மகள்களின் திருமணத்திற்கு தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை விற்று விடுகிறார். பிழைப்புக்கு குடும்பம் மொத்தமாக எஞ்சிய நிலத்தையே எதிர்பார்திருந்தது. நிலமும் கைவிரிக்கவே குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்திருக்கிறது. வீட்டின் கடைசி மகளான சாவித்திரியை வறுமை மேலும் வாட்டுகிறது. கணவனும் குடி பழக்கத்துக்கு உள்ளாகி ஒரு கட்டத்தில் சாவித்திரியை விட்டுப் பிரிகிறார். தனது மகனோடு தனி மரமாக நின்றிருந்த சாவித்திரிக்கு புலம்பெயர்ந்து பிற மாநிலத்திற்கு செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சகோதரிகள் குடும்பத்தையும் வறுமை வாட்ட அனைவருமாக புலம்பெயர்ந்து 2017 - ல் சென்னையை அடைகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`` ஆரம்பத்துல, பல நாள் பட்டினி கிடந்தோம் ,சில நாள் சின்னச் சின்ன வேலை பாத்து குழந்தைங்களுக்கு சாப்பாடு வாங்கிக் குடுப்போம் " என மூத்த அக்கா மாலதி தொடர்ந்தார். மாலதிக்கு மூன்று குழந்தைகள், சந்தோஷிக்கு இரண்டு குழந்தைகள். தகரங்களால் அடைக்கப்பட்ட வீட்டிற்கு இனிதே அழைக்கிறார் சாவித்திரி. "நிரந்தரமான வீடுனு எங்களுக்கு ஒன்னும் இல்ல " என்னும் மனதின் குரல் உரக்க ஒலிக்கிறது. புலம்பெயர் தொழிளார்கள் பெரும்பாலும் கட்டட வேலைக்காக பணியமர்த்தப்படுகிறார்கள். கட்டட பணி முடிந்த பிறகு வேறு இடங்களில் வேலை நிமித்தம் தஞ்சமடைகிறார்கள்.

 புலம்பெயர் தொழிலாளரின் வசிப்பிடம்
புலம்பெயர் தொழிலாளரின் வசிப்பிடம்

பொது சுற்றுச் சுவரை மையமாகக் கொண்டு மற்ற மூன்று பக்கங்களும் தகரங்களால் அடைக்கப்பட்டு வீடுகளில் அவர்கள் தங்கியிருந்தனர். சிதறிக் கிடக்கும் பாத்திரங்களும் அளவாக டப்பாக்களில் அடைக்கப்பட்ட அரிசியும் பருப்பும் இவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தன. ஆங்காங்கே உடைகள் , இரண்டு மாஸ்க் , வீட்டை இவையனைத்தும் அலகரிக்கின்றன. " எங்களோட குழந்தைங்க படிப்பு பாதில நின்னுறுச்சு, ஊறுல படிக்க வைச்சோம். இங்க வந்த பிறகு குழந்தைகள படிக்க வைக்க முடியல, நாங்க கட்டிட வேல பாக்குற வர குழந்தைங்க எங்க பார்வையில அங்க இங்க விளையாடும் " என பேசத் தொடங்கினார் மாலதி. அரசின் நலத்திட்டங்கள் கொரோனா காலத்தில் கிடைத்தபோதும், தற்போதைய நிலையில் அரசின் நலத்திட்டங்கள் கிடைத்தால் தங்களது வாழ்வாதாரம் மீளும் என்று கூறுகின்றனர். குழந்தைகளும் தங்களோடு புலம்பெயர்ந்து இருப்பது அவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்குகிறது.

 புலம்பெயர் தொழிலாளரின் கதை
புலம்பெயர் தொழிலாளரின் கதை

" குழந்தைங்களும் எங்கள பாத்து இப்படித்தான் வாழனும்னு நினைச்சுகுது " என்றார் கூட்டத்தில் ஒருவர். கட்டுமான பணி , வீட்டு வேலை , செங்கல் சூளைகள் தவிர புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு பணிகளில் அமரத்தப்படுவதில்லை. "எங்களோட அதிகபட்ச கோரிக்கை எல்லாம் எங்க குழந்தைகளுக்குனு ஒரு பள்ளிக் கூடம், எங்க தொழிலாளர்கள் குழந்தைங்க மட்டும் படிக்கிற மாதிரி ஒரு பள்ளிக்கூடம் வேனும் " என்கிறார் சாவித்திரி. கல்வி கற்க மொழியும் ஒரு தடையாக இருக்கிறது என்பது பலரின் கருத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

" கணவனைப் பிரிந்த என்னை மாதிரி பெண்கள் குழந்தைகள தனியா வளக்க வேண்டி இருக்கு. எங்களை மாதிரி புலம்பெயர்ந்த தொழிளார்களுக்கு அரசு ஒரு நல்ல வேலை தரலாம் " என தனது கருத்தையும் முன்னெடுக்கிறார் சாவித்திரி. எத்தனை திட்டங்கள் அரசு முன்னெடுத்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீட்க பட வேண்டியதாகவே உள்ளது. தொடர்ந்து அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. நிரந்தமற்று கிடக்கும் அவர்களது வாழ்வில் அவர்கள் வைக்கும் கோரிக்கை அவர்களது குழந்தைகளின் கல்வி குறித்து மட்டுமே. அந்த கல்வி அவர்கள் தலைமுறையை மீட்கும் என ஆழமாக நம்புகிறார்கள் மாலதியும், சாவித்திரியும்.