Published:Updated:

மூன்றாம் பிறை... பாலு மகேந்திரா எதற்காக இந்த தலைப்பை வைத்திருப்பார்? - வாசகர் பகிர்வு #MyVikatan

மூன்றாம் பிறை

ஒருவேளை ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தே ஆக வேண்டும் எனும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி முடிவு இருந்திருந்தால் இந்த தலைப்பு திரைப்படத்துக்குப் பொருந்தி இருக்காது.

மூன்றாம் பிறை... பாலு மகேந்திரா எதற்காக இந்த தலைப்பை வைத்திருப்பார்? - வாசகர் பகிர்வு #MyVikatan

ஒருவேளை ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தே ஆக வேண்டும் எனும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி முடிவு இருந்திருந்தால் இந்த தலைப்பு திரைப்படத்துக்குப் பொருந்தி இருக்காது.

Published:Updated:
மூன்றாம் பிறை

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மூன்றாம் பிறை படத்துக்கு ஏன் இந்தத் தலைப்பு என யோசித்தபோது தோன்றியவை...

இயக்குநர் பாலு மகேந்திரா.. இலக்கியங்களில் அதிகம் ஆர்வமுடையவர். பேட்டியில் பல முறை சொல்லியிருப்பார், தமிழ் இலக்கியங்களில் இல்லாத கதைகளே இல்லை என்று.. புத்தக வாசிப்பே நல்ல இயக்குநர்களையும் நல்ல திரைப்படங்களையும் உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

இயக்குநர் பாலு மகேந்திரா
இயக்குநர் பாலு மகேந்திரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னிடம் வரும் உதவி இயக்குநர்களிடம் இலக்கியங்களை படிக்கச் சொல்லி வற்புறுத்தியதையும் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தியதையும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து பின்னாள்களில் இயக்குநர்களானவர்களின் யூடியூப் வீடியோக்களில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பின்னர் அவர் நினைவாக நூலகம் ஆரம்பிக்கப்படிருப்பதை பலர் அறிந்திருக்கலாம்.

இலக்கிய ஆர்வம் கொண்ட பாலுமகேந்திரா அவர்கள்.. குறுந்தொகையிலிருந்து இந்தத் தலைப்பை எடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

``அயிரை பரந்த அன் தண் பழனத்து” என்று தொடங்கும் குறுந்தொகை (178) பாடலில் பின்வரும் வரிகளைக் காணலாம்..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தொழுது காண் பிறையின் தோன்றி யா(ம்) நுமக்கு அரியம் ஆகிய காலை பெரிய நோன்றனிர் நோகோ யானே..”

தொழுது காண் பிறை-மூன்றாம் நாள் சந்திரன் (மூன்றாம் நாள் சந்திரனை பெண்கள் சங்க காலத்தில் தொழுவார்கள் என்பது இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்),

அது மாதத்துக்கு ஒரு முறையே தோன்றுவது, ஆகவே தலைவி, தலைவனுக்கு களவுக் காலத்தில் காண்பதற்கு அரியவளாய் இருப்பதற்கு, மூன்றாம் பிறை கண்டு தொழுவதற்கு அரிதாய் இருத்தலை உவமை கூறியுள்ளார் புலவர். களவுக்காலத்தில் தலைவன் தலைவியைக் காண்பது என்பது மிகவும் அரிதாக இருந்தது. மகளிர் தொழுவது காணும் பிறை, வானில் காண்பதற்கு அரிதாகத் தோன்றி சற்று நேரத்தில் மறைவது போல, தலைவியும் எப்போதோ ஒருமுறை எதிர்ப்பட்டு விரைந்து நீங்குபவளாக இருந்தாள்.

இயக்குநர் பாலு மகேந்திரா
இயக்குநர் பாலு மகேந்திரா

இந்த உவமையில் ஈர்த்த இயக்குநர், தனக்கென யாருமில்லா தலைவன் (கமல்ஹாசன்) காண்பதற்கு அரிதாய் தோன்றும் மூன்றாம் பிறையைப்போல் தலைவி (ஸ்ரீதேவி)யானவள் தோன்றி சற்று நேரத்தில் மறைந்ததை குறுந்தொகை உவமையோடு இணைத்து `மூன்றாம் பிறை' எனும் தலைப்பை தெரிவு செய்திருக்கலாம்.

ஒருவேளை ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தே ஆக வேண்டும் எனும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி முடிவு இருந்திருந்தால் இந்தத் தலைப்பு திரைப்படத்துக்குப் பொருந்தி இருக்காது. கதாநாயகி சிறிது காலம் மட்டுமே நாயகனுடன் இணைந்திருந்து பின் நீங்குவதை குறிப்பால் உணர்த்தவும் தலைப்பிலேயே சொல்லியிருக்கலாம் இயக்குநர்.

-கிஷோர் ஆர் சுதர்சன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism