Published:Updated:

அம்மாவின் ஆசை! - வாசகரின் நெகிழ்ச்சி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

விமானம் பற்றிய கதைகளைச் சொன்னால், கண்களை உருட்டியபடி ஆர்வமாகக் கேட்பாள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விமானத்தின் ஐன்னல் வழியே உலகத்தை ரசிக்க, ஏனோ பிடிக்கவில்லை.

குழந்தையைப் போல தவழ்ந்து வரும் மேகங்கள், அசையாமல் நிற்கின்றன.

வான்கோவின் ஓவியத்தைப்போல மிரட்சியை உண்டாக்கும் வானம், சலிப்பை உண்டாக்குகிறது.

இளஞ்சூரிய ஒளியிலிருந்து புறப்படும் கதிர்கள், அயர்வடையச் செய்கின்றன.

ஜன்னலின் அருகே வந்து நடனமாடும் மழைத்துளிகள், உற்சாகத்தைத் தரவில்லை.

அடுத்த எட்டு மணிநேரப் பயணம்.

இதே இருக்கையில்,

இதே மனவோட்டத்தில் எப்படி சாத்தியமாகும்?

அதிலும், அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் செய்தியோடு!

Representational Image
Representational Image

அம்மாவின் நீண்ட நாள் ஆசை விமானத்தில் பறக்க வேண்டும் என்பது.

60 வயதிலும் விமானம் போகும் சத்தம் கேட்டால், பள்ளிச் சிறுமியைப் போல ஓடி வந்து வெளியே பார்ப்பாள்.

கீழே நின்றவாறு தனது குட்டிக் கையால் விமானத்தை அளப்பாள்.

விமானம் பற்றிய கதைகளைச் சொன்னால், கண்களை உருட்டியபடி ஆர்வமாகக் கேட்பாள்.

பொம்மை விமானத்தின் றெக்கைப் பகுதியைத் தொட்டுத் தடவுவாள்.

விமான விபத்துகளைப் பற்றி பேசினால், காதை இறுக்கமாக மூடிக் கொள்வாள்.

அம்மாவின் நீண்ட நாள் ஆசை, நிறைவேறாத ஆசை என ஆகிவிடுமோ?

மனம் முழுவதிலும் இதே எண்ணம்.

கண்களை மூடிக்கொண்டு, இருக்கையின் மீது தலையைச் சாய்த்தேன்.

அம்மாவின் முகங்கள் பல உணர்வுகளுடனும், பல வண்ணங்களுடனும் மாறி மாறி முன் தோன்றி மறைந்தது.

செவ்வானம் அடியிலிருந்து கிளம்பும் ஒளி, மூடியிருந்த கண்களை கூசச் செய்தது. அளவிட முடியாத வெப்பம், என் உடலை நடுங்க வைத்தது.

Representational Image
Representational Image

நெஞ்சம் படபடக்க,

இமைகள் துடிதுடிக்க,

கண்களில் நீர் பெருகி,

திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்.

அம்மா இறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் தொடரும் அதே கனவு.

ஒவ்வொரு முறை வரும்போதும், அம்மாவின் ஆசையை நிறைவேற்றவில்லையே என்ற குற்றவுணர்வை தந்துவிட்டுச் செல்கிறது.

விமானத்தின் ஐன்னல் வழியே உலகத்தை ரசிக்க,

இப்போதெல்லாம் ஏனோ பிடிக்கவில்லை.

- சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு