Published:Updated:

பறவையே எங்கு இருக்கிறாய்..? - அன்புடன் நா.முத்துக்குமார் ரசிகன்..! #MyVikatan

நா.முத்துக்குமார்

சூர்யா நடித்த ஆதவன் படத்தில் தனது ஆயிரமாவது பாடலை எழுதினார் நா.முத்துக்குமார். ஆதவன் என்பது நா. முத்துக்குமாரின் மகன் பெயரும் கூட...

பறவையே எங்கு இருக்கிறாய்..? - அன்புடன் நா.முத்துக்குமார் ரசிகன்..! #MyVikatan

சூர்யா நடித்த ஆதவன் படத்தில் தனது ஆயிரமாவது பாடலை எழுதினார் நா.முத்துக்குமார். ஆதவன் என்பது நா. முத்துக்குமாரின் மகன் பெயரும் கூட...

Published:Updated:
நா.முத்துக்குமார்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக வரலாறாக இருக்க வேண்டும் என்று மேதகு அப்துல்கலாம் கூறியுள்ளார். அவருடைய வார்த்தைகளுக்கேற்ப வரலாறு படைத்த நா. முத்துக்குமார் இறந்தபின்னும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வரும் ஒரு அற்புதமான மனிதர். அவரை பற்றி எனக்கு தெரிந்த சில வரிகளை இங்கு பகிர்கிறேன்.

1. மறைந்த பின்னும் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார் நா. முத்துக்குமார்.. "நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா..." என்ற நா. முத்துக்குமாரின் வரிகள் அவருக்கே பொருந்தும்.

2. தங்கமீன்கள், சைவம் படத்திற்கு தேசிய விருது வாங்கினார் நாமு. காக்காமுட்டை, தரமணி, மதராசபட்டினம், தெய்வமகள் ஆகிய படங்களுக்காக நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே உணர்த்துகிறாய்..." என்ற வரிகள் இடம்பெற்ற `ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் ஆராரோ பாட இங்கு தாயுமில்லை பாடலுக்கு தேசிய விருது கிடைக்குமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

3. சீமான் இயக்கிய வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் நா. முத்துக்குமார். பாலா இயக்கிய நந்தா படத்தில் யுவன் சங்கர் ராஜாவும் நா. முத்துக்குமாரும் முதன்முதலில் இணைந்தனர்.

4. சூர்யா நடித்த ஆதவன் படத்தில் தனது ஆயிரமாவது பாடலை எழுதினார் நா.முத்துக்குமார். ஆதவன் என்பது நா. முத்துக்குமாரின் மகன் பெயரும் கூட.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5. தெய்வமகள் படத்தில் "ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு" பாடலையும், தங்கமீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாயடி..." என்ற பாடலையும் மகள் - அப்பா உறவை நேசிக்கும் வகையில் எழுதினார் நா. முத்துக்குமார். அதே போல கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... தந்தை அன்பின் முன்னே..." என்ற பாடலை மகன் - அப்பா உறவை நேசிக்கும் வகையில் எழுதினார் நா.முத்துக்குமார்.


6. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடலாசிரியர் என்றால் கண்டிப்பாக அது நா. முத்துக்குமார் தான். ரேடியோவில் அவருடைய பாடல்களை கேட்டபடி அவருடைய வரிகளை முனுமுனுத்தபடி வளர்ந்தவர்கள் 90'ஸ் கிட்ஸ். "வேடிக்கை பார்ப்பவன்", "அணிலாடும் முன்றில்" என விகடனில் இரண்டு புத்தகங்கள் எழுதி உள்ளார்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

7. அணிலாடும் முன்றில் புத்தகத்தில் அம்மா, அப்பா, தாத்தா, ஆயா என்று உலகில் உள்ள ஒவ்வொரு உறவு பற்றியும் சிறப்பாக எழுதியிருப்பார். அந்தப் புத்தகத்தின் கடைசியில் மகன் என்ற உறவைப் பற்றி எழுதியிருப்பார். அதில் நா. முத்துக்குமார் தனது மகனுக்கு எழுதிய கடிதம் வைரல் ஆனது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வீட்டிலும் அந்தக் கடிதம் ஃப்ரேம் செய்து மாட்டப்பட வேண்டும்.

8. தரமணி பாடல் ஆல்பத்தில் உள்ள "From the bottom of my heart" என்று தனக்கும் நா. முத்துக்குமருக்கும் உள்ள உறவை பற்றி இயக்குனர் ராம் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவரும் பேசியிருப்பார்கள். "பறவையே எங்கு இருக்கிறாய்" என்ற தலைப்பில் இயக்குனர் ராம் அல்லது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நா. முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக வேண்டும் என்பது என் ஆசை.

9. பள்ளி படிக்கும் காலத்திலயே தாயை இழந்த நா. முத்துக்குமார் அவருடைய மகன் பள்ளி படிக்கும் காலத்தில் இறந்து போனது பெரும் சோகம். இனிவரும் பள்ளி பாட புத்தகத்தில் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தையும் மற்றும் சைவம் படத்தில் இடம்பெற்றிருக்கும் அழகே அழகே பாடலையும் பாடமாக வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. "பட்டாம்பூச்சி விற்பவன்" என்ற நா. முத்துக்குமாரின் கவிதை தொகுப்பை கருவாக வைத்து திரைப்படம் எடுக்க இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். நா. முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குனர். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் வெற்றிமாறன் உதவி இயக்குனராக சேரும்போது அவருக்கு முதன்முதலில் கிடைத்த நண்பர் நம் நா. முத்துக்குமார் தான். அதை தன் "மைல்ஸ் டு கோ" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

நதியிலே விழுந்த இலையென நா.முத்துக்குமாருடைய ஆன்மாவின் பயணம் தொடரட்டும்...

- மா. யுவராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism