Published:Updated:

பஞ்சு மிட்டாயை பல் டாக்டர் ஒருவர் உருவாக்கிய சுவாரஸ்ய கதை தெரியுமா? தேசிய பஞ்சு மிட்டாய் தினம் இன்று

பஞ்சு மிட்டாய்
News
பஞ்சு மிட்டாய்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பஞ்சு மிட்டாய் விருப்பமான ஒன்றாக இருக்கும்.

அனைத்துக்கும் தினங்கள் உருவாகி கொண்டாடி வரும் சூழலில் டிசம்பர் 7 -ம் தேதியான இன்று தேசிய பஞ்சு மிட்டாய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்கிற தகவல் ஆச்சர்யமாக இருக்கலாம். அதைவிட ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் நிறைந்தது பஞ்சுமிட்டாய் உருவான் கதை. அண்டா போன்ற பாத்திரத்தில் ஒரு குச்சியை எடுத்து சுழற்றி, சிறிய சத்தம் எழ காற்றில் பறக்கும் இறகென, குச்சியை நிறைத்து பூ போல நீட்டுவார் பஞ்சுமிட்டாய் வியாபாரி. ரோஸ் கலர் பூசிய சிறிய மேகத்தை ஏந்தியிருப்பது போல, பஞ்சுமிட்டாயைக் கைகளில் பிடித்தபடி குட்டி ஆச்சர்யமாக அதை பார்த்து நிற்போம். நாவில் பட்டதும் சர்க்கரை சுவை பரவத்தெடங்கி கரைந்துருகும் அந்த ரோஸ் கலர் மேகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பஞ்சு மிட்டாய் விருப்பமான ஒன்றாக இருக்கும். திருவிழா, பொருட்காட்சி ,பூங்கா என பல இடங்களிலும் நம் கண்களில் ஒருமுறையாவது தட்டுப்பட்டுவிடும். நம்மில் பலருக்கும் குழந்தை பருவத்தில் பஞ்சு மிட்டாயோடு ஒரு கதை இருக்கும். குழந்தைகள் பஞ்சு மிட்டாயின் தனி பிரியர்கள் என்றே சொல்லலாம். ``பஞ்சு மிட்டாய் அதிகம் சாப்பிட்டா பல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் ஊசி போடுவேன்" என அம்மாக்கள் மிரட்டுவது வழக்கம், ஆனால் பல் டாக்டரே பஞ்சு மிட்டாய் உருவாக்கிய கதை தெரியுமா?

பஞ்சுமிட்டாய்
பஞ்சுமிட்டாய்

பஞ்சு மிட்டாய் முதன் முதலில் 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் உருவாக்கம் கைசெய்முறையாக இருந்தமையால் பஞ்சு மிட்டாய் விலை அதினமான பொருளாகவே இருந்திருக்கிறது. பஞ்சு மிட்டாய் பணக்கார்களுக்கு உகந்ததாகவே இருந்திருக்கிறது. ஆக பஞ்சு மிட்டாய் அனைவரையும் சென்றடைய ஓர் இயந்திரம் கண்டாக வேண்டும் என மருத்துவர் ஒருவருக்குத் தொடங்கியிருக்கிறது.1897- ல் பல் மருத்துவர் வில்லியம் மோரிசன் மற்றும் மிட்டாய் வியாபாரி ஜான் சிவார்டன் இணைந்து சுழழும் பஞ்சு மிட்டாய் இயந்திரத்தை உருவாக்கினர். பின் 1904 -ல் அவை உலகுக்கு அறிமுகமாகிறது. உலகின் மிக எதிர்பார்த்த கண்டுபிடிப்பாக மாறி , சில வருடங்களிலே உலகெங்கும் பஞ்சு மிட்டாய் மோகம் துளிர் விட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பஞ்சுமிட்டாய் வியாபாரி
பஞ்சுமிட்டாய் வியாபாரி

பஞ்சு மிட்டாய் வெள்ளை நிறத்தில் இருந்து பல வண்ண உடைகள் அணியும். பல வண்ணங்கள் பஞ்சு மிட்டாய்க்கு உயிர் கொடுத்தாலும் கண்ணை பறிக்கும் ரோஸ் நிரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. வாங்களேன்! இந்த தேசிய பஞ்சு மிட்டாய் தினத்தில் ஒரு பஞ்சு மிட்டாய் சாப்பிட்டு குழந்தைப் பருவ ஞாபகத்துக்குச் செல்வோம்!