Published:Updated:

நெல்லை: அரசு அருங்காட்சியகத்தில் சிறப்புக் காட்சிப்பொருளான சிக்கிமுக்கிக் கல்!

சிக்கிமுக்கிக் கல்
News
சிக்கிமுக்கிக் கல்

இக்கண்காட்சியில் காணி பழங்குடி மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிக்கிமுக்கி கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை அரசு அருங்காட்சியகம் பாளையங்கோட்டையின் கிழக்கு வாசல் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்த இடம் சிறையாகப் பயன்படுத்தப்பட்டது. கட்டதுரை தூக்கிலிடப்பின் அவரது தம்பி ஊமைத்துரை இங்குதான் சிறையிலடைக்கப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் பழந்தமிழர் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, சிற்பங்கள், பழங்கால ஆயுதங்கள் எனப் பலவகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் சிறப்பு காட்சிப்பொருளும் வைக்கப்படும். அந்த வகையில் டிசம்பர் மாத சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது இக்கண்காட்சியில் காணி பழங்குடி மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிக்கிமுக்கி கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிக்கிமுக்கிக் கல்
சிக்கிமுக்கிக் கல்

சிக்கிமுக்கிக் கல் - நெருப்பு உண்டாக்கும் கல்

சிக்கிமுக்கிக் கல், சிலிக்காவினால் ஆன ஒருவகை படிவுப் பாறை ஆகும். இக்கல்லானது கடினமான, படிகவடிவு வெளித்தெரியாத (cryptocrystalline) கனிம படிகக்கல்லின் (mineral quartz) படிவு வடிவமாகும். பழைய கற்காலத்தில் மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினார்கள். பின் நெருப்பு மூட்டி உணவு சமைத்தார்கள். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிக்கிமுக்கி கல் காணி பழங்குடியினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டது. இன்று தொடங்கப்பட்ட இக்கண்காட்சி இந்த மாதம் முழுவதும் நடைபெறும். இக்கண்காட்சியைப் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz