Published:Updated:

`நெட்டிசன்களின் லாக் டௌன் நாள்கள்..!' - ஒரு குறிப்பு #MyVikatan

Representational Image
News
Representational Image

இன்றைய வாழ்வில் இணையம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்டது. ஒலிக்காமலேயே அலைபேசியை எடுத்துப் பார்ப்பது இணையம் வந்த பிறகுதான்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்றைய வாழ்வில் இணையம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்டது. ஒலிக்காமலேயே அலைபேசியை எடுத்துப் பார்ப்பது இணையம் வந்த பிறகுதான்!

கணையம் சரியாக இயங்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் இணையம் சரியாக இயங்கினால் போதும் என நினைக்கின்றனர் நெட்டிசன்கள். உலகையும், இரவையும் சுருக்கிவிட்டதோடு பகலை நீட்டித்துவிட்டது இந்த ஊரடங்கு நாள்கள். இப்போது இணையவாதிகள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்..

Representational Image
Representational Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காலை எழுந்தவுடன் நெட்

காலையில் தினமும் கண் விழித்தால் நாம் கை தொழும் தேவதை மொபைல்தான். இரவு டவுன்லோடிங்கில் தொடங்கப்பட்ட படம் சேவ் ஆகிவிட்டதா என செக் செய்த பிறகே பல் துலக்கப்போவார்கள். காலை காபியுடன் இ-நியூஸ் பேப்பரில் முக்கிய விஷயம் பார்த்த பின்பு காலை வணக்கம் சொல்லிய செய்தியெல்லாம் காலால் மிதித்து க்ளியர்சார்ட் செய்தால்தான் காலைக் கடனுக்கு வட்டி கொடுத்தது மாதிரி இருக்கும். குளிக்கப் போகும்முன் டவல் எடுத்துச் செல்கிறோமோ இல்லையோ டவுன்லோடு மோட் ஸ்டார்ட்டில் வைத்துச் செல்வதுதான் பழக்கம் இப்போது..

புதிதாய்க் களம் காணும் போராளிகள்

பாரதிராஜா படத்தில் அறிமுகமான மாதிரி ஒரு மெதப்பில புதிதாய் இணையத்துக்கு இப்போது வருவார்கள். ஏதோ பார்ட் டைம் பத்திர ஆபீஸுக்கு வேலைக்குப் போவது மாதிரி பயோவில் ரைட்டர் என்று போட்டுக் கொள்வார்கள். ஆனால் டைம்லைனில் Profile picture-ஐ தவிர ஒன்றும் இருக்காது. அப்பிடி இல்லை என்றால் போராளி, கவிஞர் என்று இருக்கும்.

ட்ராஃபிக்கில் நிற்கும்போது டிவிஎஸ்சில் ஹாரன் அடிப்பது போல கவிமழை தூவுவார்கள்.

"மலர்ந்த பூவை விட உன் தலையில் மலரும் பூவுக்கே அழகு அதிகம்"

"ஊரே ஊரடங்கில்

நான் மட்டும் உன் உள்ளத்துக் கிடங்கில்"

எனக் கவிதை உப்புமா கிண்டி ஊருக்கெல்லாம் ஊட்டிவிடுவார்கள். அதற்கு இரண்டு பேர் செம என்று கமென்ட் செய்திருப்பார்கள்.

எதவாயிருந்தாலும் சம்பந்தமே இல்லாமல் கமென்ட் போடுபவர்கள் ஒரு பக்கம். அவர்கள் இட்ட கமென்டுகள் அப்போது புரியாது ஆஃப் லைன் போய் அரைமணி நேரம் கழித்துதான் புரியும்

தட் எம்.ஏ பிளாசபி மொமன்ட்.

குற்றம் பார்க்கின் இணைஞர் இல்லை

எந்தப் பதிவு போட்டாலும் அதில் உள்ள எழுத்துப்பிழையைக் கண்டுபிடித்து கமென்ட் செய்து.. தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி எனச் சமூகத்துக்குப் பறை சாற்றுவது. கவிதை பதிந்தால் அதை ரசிக்காமல் அதற்கு பட்டி டிங்கரி செய்து கரெக்சன் சொல்லிக் கடுப்பு ஏற்றுவது.

யாராவது ஒரு அப்பாவி இணையவாதி கிடைத்தால்.. அவரை வா வா என்று கிட்னி எடுக்கக் கூப்பிடுவது மாதிரி கேள்வி கேட்டு கெடா வெட்டுவது.. என எளிதாய் என்டர்டெயின்மென்ட் செய்வார்கள்.

Representational Image
Representational Image

வாட்ஸ் அப் வாதிகள்

நல்ல செய்திகள், பயனுள்ள தகவல்கள் வந்தாலும் இன்னும் அதிக குப்பைகள் இங்குதான் கொட்டப்படுகின்றன. காலையில் அஞ்சு பூ, வானம், மழை, குழந்தையை வைத்து குட்மார்னிங் சொல்வது என ஆரம்பித்து.. pdf செய்தித்தாள் குரூப்பில் தமிழ் பேப்பரோடு தெலுங்கு, கன்னட பேப்பருடன் 150 பேப்பர் வரும்.

கொரோனா ஸ்டேட்டஸை வாட்ஸ் அப்பில் வைத்தால் ரேஷன் கடையில் கூடுதல் பொருள் கொடுப்பார்களோ என்னவோ எல்லாரும் கொரோனா பற்றி வைத்திருப்பார்கள். கொஞ்சம் குரூப்பில் சிரித்துப் பேசினால் கூட என்ன விளையாட்டு இது இத்தாலியில் எத்தனை பேர் செத்திருக்கான், அமெரிக்காவில் நடக்கிறத பாரு னு கிட்டத்தட்ட சமுத்திரக்கனி மாதிரியே நடந்து கொள்வார்கள்.

25 symbol போட்டு ஊர்ப் பெயர், நாட்டுப் பெயர், உணவுப் பெயர் கண்டறிவது.. ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் கணக்குப்பிள்ளையாட்டம் எதாச்சும் கணக்குப் போட்டு கண்டுபிடிங்க என்று சொல்லிவிட்டு.. இது ஐஏஎஸ் தேர்வில் கேட்டது என்று சொல்லுவாங்க பாருங்க உஸ்ஸ்ஸ். அதையும் பத்துப் பேர் வேலை மெனக்கெட்டுக் கண்டுபிடித்துப் பாராட்டு வாங்குவாங்க. ஆங்கில இந்து பேப்பரையே சென்டர் பேஜ் வரை படிக்க கஷ்டப்படும்போது அரை கிலோமீட்டருக்கு ஆங்கிலத்தில் மெசேஜ் போட்டு தயவு செய்து படிங்கனு தட்டிவிடுவதெல்லாம் தலைகீழாய் சம்மர் சாட் அடித்த கதைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்று தணியும் இந்த செஃல்பி வியாதி

கூலரும் ஜெர்க்கினும் வாங்குவதே ஊட்டிக்குப் போய் போட்டோ எடுத்து அப்லோடு செய்யத்தான். இப்போதைய நிலவரத்துக்கு உழவர் சந்தைக்குப் போய் ஒய்யாரமா ஒரு செல்ஃபி, எதாச்சும் முகாமில் சோறு கொடுப்பது போல் செல்ஃபி, மளிகைக்கடையில் மணியான ஒரு செல்ஃபி, ஒரு நாள் வீடுதுடைத்து விட்டு ஒன் டே சி.எம் ஆன மாதிரி செல்ஃபி, குக்கர் விசிலை எண்ணும் குழப்பமான செல்ஃபி என எடுத்துத்தள்ளி போன் மெமரியை ஃபில் அப் செய்வார்கள்.

சின்ன வயதில் தவழ்ந்தது, மொட்டை அடித்து காதுகுத்தின போட்டோவையெல்லாம் அப்லோடு செய்து மிரள வைப்பார்கள். ஸ்மியூலில் பாட்டுப்பாடி பாடகர் ஆனது ஊரடங்கில் கிடைத்த பலன்.

Representational Image
Representational Image

#முகநூல் முத்துக்கள் அருமையான பதிவு, படிக்கவேண்டிய பதிவு என ஆரம்பிக்கும் இப்பதிவுகள் கிலோமீட்டர் கணக்கில போய்க்கிட்டே இருக்கும். அதனாலேயே more என்று வந்தால் அடப்போங்கய்யா என்று சொல்லிவிட்டு அடுத்த பதிவுக்குப் போய்விடுகிறார்கள்.

*இவுங்க படிக்கிறாங்களோ இல்லையோ எல்லாரும் படிங்கனு ஷேர் செய்வது.

*சென்டிமென்ட் வீடியோ எதுவாக இருந்தாலும் போட்டுவிட்டு கருணை உள்ளத்தில் நான் ஒரு கவரிமான் என்று எண்ண வைப்பது.

*அவர்தம் மாவட்ட கொரோனா பலி எண்ணிக்கையை மணிக்கொரு முறை போட்டு எல்லாருக்கும் மரண பீதி ஏற்படுத்துவது.

*படம் முழுசும் பார்க்காம ரிவ்யூ டிரெய்லர் பார்த்துவிட்டு அந்நிய தேசத்து படத்தப் பாரு சான்சே இல்ல என்று சல்லை போடுவது.

*தெரியுமா உங்களுக்கு? எனத் தொடங்கும் பொது அறிவு தகவல்கள்., அனைத்தும் அவர்களுக்கே அஞ்சு நிமிசத்துக்கு முன்னால்தான் தெரிஞ்சிருக்கும்

*மஞ்சளின் மகிமை, நெல்லியின் அருமை, மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறை பதிவிட்டவர்கள்தான் இன்று ஹார்ட் வொர்க் செய்து கொரோனா பதிவு ஓயாமல் போட்டு உடுக்கை அடிக்கிறார்கள்.

ட்விட்டரில்..

ட்விட்டர் என்பது 24 மணி நேர எமர்ஜென்சி வார்டு மாதிரி எப்போதும் ஆக்டிவா இருக்கும். இலக்கியமும் இணையச் சண்டைகளும் கலகலப்பூட்டும். விஜய்-அஜித் சண்டை இப்போது ஓய்ந்து அரசியல் சண்டை ஓடுகிறது. பிடித்த நடிகர் முதல் பிடித்த வார்டு கவுன்சிலர் வரை பிடித்ததை பத்துப் பேருக்கு டேக் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கிறது.

Representational Image
Representational Image

தற்சமயம் வந்த எல்லா நல்ல படமும் பார்த்து விட்டார்கள். இவர்கள் நெட்பிளிக்ஸில் பார்த்த வெப் சீரியல் பற்றிப் பேசும்போதெல்லாம் மனதில் ஓடும் மைண்ட் வாய்ஸ் "கடைசியா நான் பார்த்தது செம்பருத்தி சீரியலுங்க" என்று கதறும். அய்யப்பனும் கோஷியும், trance படங்கள் பார்க்கவில்லையா அப்ப நீ பன்னி முட்டித்தான் சாவேனு சாபம் மட்டும்தான் இன்னும் கொடுக்கவில்லை. ஆனாலும் உலக நடப்பு நிகழ்வுகளைத் துல்லியமாய்க் கொடுக்கும் முதல்நிலை உற்பத்தியாளர்கள் இவர்கள்தான்.

குடும்பத்தில்...

அத்தை பொன்னு வீட்டுக்கு வந்தா எப்பிடி ஒரு ஆணுக்கு சந்தோசம் வருமோ அப்பிடி ஒரு சந்தோசம் அப்பா வீட்டில் இருப்பது குழந்தைகளுக்கு. ஏன்னா அப்பதான் அப்பா மொபைல்ல கேம் விளையாட முடியும். ஆடினான் ஆடினான் சார்ஜ் தீரும்வரை ஆடினான் என்பது மாதிரி

ஆடிக்கொண்டே இருப்பாங்க. சில புத்திசாலி கணவர்கள் மனைவியின் மொபைலுக்கு எல்லா கேமையும் ஏத்திவிட்டு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் தங்கள் போனுடன் கம்பீரமாய் வலம் வருவாங்க.

செல்போன் வருகைக்குப்பின் மதிப்பிழந்தன மைதானங்கள்.!

Representational Image
Representational Image

இன்னும் என்னென்ன?

*ஐ.சி.யு வார்டில் இருப்பவனுக்கு குளுக்கோஸ் ஏத்துவது மாதிரி அடிக்கடி சார்ஜ் ஏத்துவோம்.

*மொபைல் போன் அயர்ன் பாக்ஸ் மாதிரி சூடானாலும், காதினைப் பத்திக் கவலை இல்லாமல் மொக்கை போட்டுக்கொண்டே இருப்போம்.

*ஒருகாலத்தில கேட்பாரற்றுக் கிடந்த ஹெட்போன் எல்லாம் இப்போது காதில் கம்மல் மாதிரி கூடவே இருக்கும்.

*அப்போதெல்லாம் பஃபரிங்கிலேயே முழுப் படத்தை பார்த்த நாம்தான் இப்போது பார்த்தால் HD பிரின்ட்தான் இல்லை என்று வெயிட் பன்றோம் சார்னு சொல்லி பழகிட்டோம்.

*கஸ்டமர் கேர் லைன் கிடைப்பது பெப்ஸி உமாவுக்கு லைன் கிடைப்பதுமாதிரி. அப்படியே லைன் கிடைத்தாலும், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைப் பிடிக்க, ஏழு மலை, ஏழுகடல் தாண்டி போய், தரமேம்பாட்டிற்குப் பதிவு செய்வதை தர லெவலுக்குக் கீழே போய் ரத்த கண்ணீர் வடித்தோம். இப்போது கொஞ்சம் பரவாயில்லை.

*முன்பெல்லாம் முடிகொட்டுகிற பிரச்னை இருந்தது இப்போது இல்லை என்று சொல்வது மாதிரி..முன்னெல்லாம் பவர் பேங்க் பத்து மணிநேரத்துக்கு ஒரு முறை சார்ஜ் போடணும். இப்ப அந்தத் தொல்லையே இல்ல. தேங்க்யூ லாக் டௌன் என்று சொல்கிறார்கள்.

நேரத்தைச் செலவு செய்வதைவிட நிர்வகிப்போம்

அதீத தகவல்கள் திகட்டுகின்றன. ஒரு செய்தியைப் படித்து உள்வாங்கும் போதே பிரிதொரு செய்திக்குத் தாவுகிறோம். படித்ததை நழுவ விடுகிறோம். அடுத்த சில நிமிடத்தில் அனைத்தையும் மறக்கிறோம். எல்லாச் செய்திகளையும் அப்டேட்டுகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒரு கட்டத்தில் வெறியாக மாறுகிறது.

தூக்கத்தைக் குறைக்கிறது. முகம் தெரியாதவர்களுடன் சகட்டு மேனிக்கு வன்மத்தை வெளிப்படுத்துகிறோம். மனசாட்சி இல்லாமல் அடுத்தவர் கருத்தைத் திருடுகிறோம். உறுதிப்படுத்தாமல் தகவல்களைப் பரிமாறுகிறோம். "என் நாட்குறிப்பில் உறைந்து கிடப்பது உங்கள் காலமும்தான் என்பார் கலாப்ரியா.

டைம் பாஸ்க்கு இணையம் பார்க்கப்போய் டைம் பாசாகிவிடுகிறது, நாம ஃபெயிலாகிவிடுகிறோம். இணையத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவோம். வதந்திகள் பரவுவதை தவிர்ப்போம். ஏனெனில் எதுவாக இருப்பினும் படித்துப் பார்க்காமல் பகிரும் ஓராயிரம் பேர் உள்ளனர். யாகாவாராயினும் விரல் காப்பது நல்லது. "இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில், இளைஞர்களின் எதிர்காலம் செல்போன் கையில்.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/