Published:Updated:

`ஈரஞ்சு மூவாறு ஒரு தாயம்..!' - லாக்டெளன் கவிதை #MyVikatan

Representational Image
Representational Image

லாக்டெளன் நாள்களில் தோழியர்கள் கூடி விளையாடும் தாயம் விளையாட்டு குறித்து நாராயணபுரம் கணேசவீரன் எழுதிய கவிதை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஊரடங்கு பணிவிடுப்பில்

ஊர் திரும்பிய

கல்லூரிகாலத் தோழியர் நால்வர்

நெடுநாள்களுக்குப் பின்

தோழியொருவளின் வீட்டில்

ஒன்றுகூடி மகிழ்ச்சியில்

அளவலாவியபின்

வேப்பம்பூக்கள் உதிர்ந்த

நிழலாடும் முற்றத்தில்

தாயம் ஆடுகிறார்கள்...

Representational Image
Representational Image

சாக்பீஸால் தரையில்

தாயச்சதுரங்களை

நேர்த்தியாக வரைந்திருந்த

கட்டட வரைகலை நிபுணியவள்

தாயக்கட்டைகளை உருட்டுகையில்

கேட்கும் போதெல்லாம்

தப்பாமல் விழுகின்றன

தாயங்கள்...

கணினிச் சுட்டியை

லாகவமாய் உருட்டும் பாவனையில்

தாயக்கட்டைகளை தரையுரசி உருட்டுகையில்

மென்பொருள் வித்தகிக்கு

உச்சத்தொகை

பன்னிரண்டுகள்

வாய்மூடி விழுகின்றன..

Representational Image
Representational Image

'ஈரஞ்சு மூவாறு

முத்தாயம் நாலு' என

ராகமாய் நினைவில் பதித்து

கணக்காய் காய் நகர்த்தும்

கணிதப் பெண்புலிக்கு

அலுவலகக் கணக்கெல்லாம்

அத்துப்படி...

தெளிவாகத் திட்டமிட்டு

தடையானவற்றை

தயங்காமல் வெட்டி வீசி

தன் காய்களைத் துரிதமாய்ப்

பழமாக்கிக் கொண்டிருப்பவளொரு

மனிதவள அதிகாரி...

சூடுபறக்கும் ஆட்டத்தினிடையே

சிற்றுண்டியாக

உளுந்தங்களியில்

நல்லெண்ணெய்

வெல்லம் கலந்து

கிண்ணங்களில் நிரப்பிக்

கொண்டு வந்து

தின்னக் கொடுத்த

தோழியின் தாய்

Representational Image
Representational Image

நிலைப்படியிலமர்ந்து

வேடிக்கையாக வினவுகிறாள்...

"யாரைத் துகிலுரிக்க

இந்த ஓயாத ஆட்டம்?" என...

அவரவர்களின்

நினைவடுக்குகளில் பதிந்துள்ள

நவயுகத் துச்சாதனர்களின்

பட்டியலில்

எவனை முதலில்

தேர்ந்தெடுக்கலாமென

குழம்புகின்றனர்

தோழியர்கள்...

- நாராயணபுரம் கணேசவீரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு