Published:Updated:

போட்டோ எடுத்துக்குறது இவ்ளோ நல்லதா..? #RandomThoughts #MyVikatan

Representational Image
Representational Image ( Suzy Hazelwood from Pexels )

வீட்டிற்குள் வந்ததும் கவருக்குள்ளிருந்த மொபைலை பக்கத்தில் இருந்த டேபிள்மேட்டில் வைத்து விட்டு தலையை துவட்டி துண்டை உதறவும் அது அருகிலிருந்த டேபிள்மேட்டில் பட்டு என் மொபைல் பறக்க செய்வதறியாது நின்றேன்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய் கோலத்திற்கான புள்ளிகளை வைத்துக்கொண்டிருந்த மழை திடீரென முழு வேகத்தில் எல்லா புள்ளிகளையும் அழித்து மொத்தமாய் நனைத்து விட்டது.. புள்ளிகளை தவறாக வைத்து விட்டதோ என்னவோ....

வெளியே செல்ல வேண்டியிருந்தது....

நனைந்து கொண்டே செல்ல ஆசைதான், ஆனால் மொபைலை என்ன செய்வது... சிப்லாக் கவரில் பக்காவாக பாக் செய்து வெளியே சென்று மொத்தமாக நனைந்து வந்தேன். வீட்டிற்குள் வந்ததும் கவருக்குள்ளிருந்த மொபைலை பக்கத்தில் இருந்த டேபிள்மேட்டில் வைத்து விட்டு தலையை துவட்டி துண்டை உதறவும் அது அருகிலிருந்த டேபிள்மேட்டில் பட்டு என் மொபைல் பறக்க செய்வதறியாது நின்றேன்...

Representational Image
Representational Image

கீழே விழுந்தது சிதறு தேங்காய் போட்டது போல சிலபல சுக்கல்களானது. இரசித்து நனைவித்த மழை இப்போது என் கோபத்தை உள்வாங்கியதாய் இன்னும் வேகமாக பெய்தது....

மெதுவாய் எல்லாவற்றையும் இணைத்து பார்த்தேன்... ஒன்றுக்குமுதவாது என்பதை மூளை சொன்னாலும் நான்கு வருடமாக என்னுடன் பயணித்த எனது மொபைலை இழந்து விட்டதை மனது ஏற்றுக்கொள்ள வில்லை.

இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தேன். முதலாவதாக வாங்கிய மொபைலிலிருந்து இதுவரை இருந்தவை எல்லாம் வரிசையாய் கண்முன் தோன்றி மறைந்தது. மூன்றாம் மாடியிலிருந்து விழுந்தும் சிறு கீறல் கூட விழாமல் மீண்டும் இயங்கிய மொபைலை நியாபகப்படுத்திக் கொண்டேன்.

``ஓஹோ.. இதான் பவுடர் கலையாத நடையா.. !‘’- வாக்கிங் டாக்கிங் – பகுதி 3

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் புதிய மொபைலை வாங்குவதற்கு கடைக்கு சென்றேன். இத்தனை எம்பி கேமரா முன்னும் அத்தனை எம்பி கேமரா பின்னும் இருக்கிறது... செல்ஃபி எடுக்க மிகச் சிறந்த போன் இது என மொபைல் பேசுவதற்கு என்பது மக்களுக்கு மறந்தேவிட்டது போல... என் பட்ஜெட்டில் கிடைத்த ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

பழைய பதிவுகள் எல்லாவற்றையும் மீண்டும் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கும் போது கேமராவில் கை பட திடீரென தோன்றிய என் முகம் பதறவைத்தது... பதற்றத்தில் ஸ்க்ரீனில் பட்ட கையால் செல்ஃபியும் பதிவானது....

பதற்றத்தோடு பதிவான என் படத்தை பார்த்து சிரிப்புடன் இரசித்து கொண்டேன்... சாப்பிட்டு விட்டு டீவி பார்க்க உட்கார்ந்தேன். மொபைலில் ஆப் ஒவ்வொன்றாக டௌன்லோட் செய்து கொண்டிருந்தேன்... அமேசான் பிரைம் டௌன்லோட் செய்து முடித்தேன். சின்க் செய்ய அமேசான் பிரைமை டீவியில் ஆன் செய்துவிட்டு செட்டிங்சை ஒருவழியாக முடித்தேன். மொபைலை சற்றே கீழே வைத்து விட்டு அமேசான் பிரைமை பிரௌஸ் செய்தபோது போட்டோ பிரேம் என்ற மராத்தி படத்தை கடக்கும் போது கேமராவில் பதிவான என் செல்ஃபி நியாபகம் வர அந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன்...

புதிதாய் திருமணமான தம்பதிகள் போட்டோ சூட்... மணமகளை தூக்குவதாகவும் கைகளால் ஹார்ட்டின் காட்டுவதாகவும் ஆரம்பித்தது படம்... இது எங்களது திருமண போட்டோ சூட்டில் நாங்கள் பட்ட ஆனந்த அவஸ்தகளை நினைவூட்டியது... உதட்டோரம் பூத்த முறுவலுடன் பார்க்க ஆரம்பித்தேன். மணப்பெண்ணின் அப்பா வந்தபிறகும் பிஸியாக இருக்கும் அம்மாவை பிடித்து இழுத்து போட்டோ எடுக்கும் போதும் மகளின் முடியையும் உடையையும் சரி செய்வதாகவும் முடிந்துவிடுகிறது.

Representational Image
Representational Image

அடுத்த காட்சி, கணவனின் நண்பரின் மனைவி இறந்துவிட்டதாக தகவல் வர இருவரும் செல்கின்றனர், புதிய இடம் யாரையும் தெரியாததால் ஓரமாய் உட்காரும் அந்த அம்மா அருகில் இருக்கும் அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டே இருக்க அருகிலிருந்த பெண் இறந்தவரின் படத்தை தேடுவதாக சொல்லிவிட்டு , நாம் இறந்தபின் நமது அடையாளமே புகைப்படம்தான், இந்த பேப்பரில் வரும் பாக்கியம் நம்மைப் போன்றோற்கு இறந்தபின் தான் கிடைக்கும்... இவளுக்கு அதுவும் கிடைக்காது போல.... எனவும் அந்த அம்மா மனதினுள் மீண்டும் மீண்டும் அந்த உரையாடல் வந்து போகிறது...

தினமும் பேப்பரில் அவரின் படத்துடன் இரங்கல் செய்தி வந்ததா என இரண்டு மூன்று நாட்களாக பார்த்தும் வராததால் மீண்டும் அவரது வீட்டிற்கு செல்கிறார்.... அங்கு இறந்தவரின் 17 வயது கருப்பு வெள்ளை படம் வைக்கப்பட்டு மாலை போட்டு இருப்பதை பார்த்ததும் தன்னை பற்றிய பயம் வந்துவிடுகிறது...

ஆல்பங்களை எல்லாம் புரட்டியும் தனது படம் ஒன்று கூடயில்லை என்று புலம்பும் போதும் உறவினர் வீட்டு நிகழ்வுகளில் கூட தன் தயக்கம் காரணமாக போஸ் கொடுக்காததை எண்ணி வருந்துவதாகட்டும்... தன் மகளின் திருமண ஆல்பத்திற்காய் ஆவலாய் காத்திருந்து அதிலும் இல்லாமல் புகைப்படம் மீதான வருத்தம் பயம் என எல்லாம் மிகுந்ததாக இருப்பார்.

பல பிரம்மபிரயர்த்தனங்களுக்கு பிறகு தைரியத்தை வரவழைத்து கொண்டு படம் எடுத்து கொள்வதாக படம் மிக இயல்பாக தொய்வின்றி நகர்கிறது.

முண்டாசுப்பட்டி மக்கள் மனநிலையிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதை ஏதோ தற்புகழ்ச்சியாக பார்க்கும் எண்ணத்திலிருந்த எனக்கு, வாழும்போதும் இறப்புக்கு பிறகும்கூட இந்த புகைப்படம் கடந்துவந்த நினைவலைகள்... நண்பர்களை உறவுகளை மகிழ்ச்சியை துக்கத்தை என அந்த நிகழ்வுக்கும் நம்மை மீண்டும் நனைத்தெடுக்கும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என உணரச் செய்தது இந்த படம்...

சே ச்சீஸ் ............. ரெடி......கிளிக்....

-சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு