Published:Updated:

திடீரென இறந்த தந்தை; உடைந்து நின்ற தாயை மீட்க மகன்கள் வரைந்த ஓவியங்கள்; நெகிழ்ச்சி சம்பவம்

விஜயகுமாரின் மகன்கள்

விஜயகுமாருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த மகன் வி. விஜய விவேஷ்குமார் (13). இளைய மகன் வி. விஜய விஜேஷ்குமார்(12). இவ்விருவரும் புதுச்சேரியில் உள்ள செவந்த் டே மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

திடீரென இறந்த தந்தை; உடைந்து நின்ற தாயை மீட்க மகன்கள் வரைந்த ஓவியங்கள்; நெகிழ்ச்சி சம்பவம்

விஜயகுமாருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த மகன் வி. விஜய விவேஷ்குமார் (13). இளைய மகன் வி. விஜய விஜேஷ்குமார்(12). இவ்விருவரும் புதுச்சேரியில் உள்ள செவந்த் டே மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

Published:Updated:
விஜயகுமாரின் மகன்கள்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.

என்ற திருக்குறளை பலரும் படித்திருப்போம். நேற்றிருந்த ஒருவர் இன்று இல்லாமல் இறந்து போனார் என சொல்லப்படும் நிலையாமை என்னும் பெருமை உடையது இவ்வுலகு என்கிறார் வள்ளுவர். ஆனால், எதார்த்த வாழ்வில் ஒரு மரணத்தை கடப்பதென்பது வெறும் தத்துவார்த்தம் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை. பலருக்கும் மரணம் எளிதில் கடந்திடாத ரணங்களை வாழ்க்கை முழுவதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரி லால்பேட்டையில், கடந்த மார்ச் மாதம் நடந்த வீ.விஜயகுமாரின் மரணம் அத்தகைய ரணத்தை இரு சிறுவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. IRBn(Indian Reseve Battalion) தலைமை காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் வீ.விஜயகுமார். தாகூர் அரசு கலைக்கல்லூரியில் படிப்பை முடித்தவுடன் காவல் துறையில் வேலை கிடைத்தது. காதலி ப்ரீத்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த மகன் வி. விஜய விவேஷ்குமார் (13). இளைய மகன் வி. விஜய விஜேஷ்குமார்(12). இவ்விருவரும் புதுச்சேரியில் உள்ள செவந்த் டே மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

ப்ரீத்தி தன் மகன்களுடன்
ப்ரீத்தி தன் மகன்களுடன்

மகன்கள் இருவருக்கும் விஜயகுமார் சிறுவயது முதலே ஓவியம், நடனம், சிலம்பம், பறை, செஸ், ஓட்டபயிற்சி, டேக்வோன்டா, கிட்டார், தட்டச்சுப்பொறி என அனைத்து வகுப்புகளிலும் சேர்த்துவிட்டு வளர்த்து வந்தார். குழந்தைகள் இருவரும் படுசுட்டிகள். மற்றவர்களிடம் எளிதில் பழககூடியவர்கள். மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமாக வாழ்ந்து வந்தனர் குடும்பத்தினர். கடந்த மார்ச் 1, 2022 அன்று உடல்நலக்குறைவால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகுமாரின் குழந்தைகளும் மனைவியும் துடிதுடித்துப் போயினர். காதல் கணவன் உயிரிழந்த மீளாத்துயரில் உறைந்துபோனார் ப்ரீத்தி. மனம் உடைந்து கிடக்கும் தாயைக் கண்ட இரு குழந்தைகளும் தாயின் சோகத்தைப் போக்க முடிவு செய்கின்றனர். செய்வதறியாது தவித்த பிள்ளைகள் தன் தந்தையின் புகைப்படங்களைத் திரட்டி அதனை ஓவியமாக வரைந்து தன் தாயிடம் காட்டுகின்றனர். தன் மகன்களின் வயதுக்கு மீறிய பக்குவத்தை கண்ட பிரீத்தி விஜயகுமார் சோகத்தைத் தள்ளிவைத்து மன உறுதி கொண்டார்.

இயற்கை எய்திய விஜயகுமாரின் வயது 38. இரு குழந்தைகளும் சேர்ந்து தன் தந்தையின் 38 ஓவியங்களை வரைந்து கண்காட்சி அமைத்தனர். இந்த கண்காட்சியை அக்குழந்தைகள் தங்கள் ஆசானின் உதவியுடன் செய்திருந்தனர். காவல்துறையைச் சேர்ந்த முனைவர். சந்திரன்தான் முதன்முதலில் இவர்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார். மேலும், பிரீத்தி விஜயகுமார் அவர்கள் கலைச்சங்கத்திலிருந்து நிதியுதவி பெற்றாராம். ஆனால், இவர்களது உற்றார் உறவினர்களிடமிருந்து எந்த ஆறுதலும் உதவியும் கிடைக்கப்பெறவில்லை என வருத்தத்தையும் பிரீத்தி விஜயகுமார் கூறினார்.

இந்தக் கண்காட்சி குறித்து அந்தக் குழந்தைகளிடம் பேசினேன். `` நல்ல வேலைக்குப்போயி அம்மாவுக்கு பெருமை தேடித் தரணும். சமூகத்துக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யணும். அப்பாவை இன்னும் மறக்க முடியல. அப்பா இல்லாம பொருளாதார ரீதியா படுற கஷ்டத்தையெல்லாம் படிச்சு சரி பண்ணுவோம்" என கண் கலங்க அவர் கூறிய வார்த்தைகளில், அந்த தாயின் கண்களில் நம்பிக்கை ஒளிர்ந்தது.