Published:Updated:

ஸ்பெஷல் ஆப்ஸ், தி ஃபேமிலி மேன்... செம த்ரில் வெப் சீரிஸ்! - வாசகர் ஷேரிங்க்ஸ் #MyVikatan

Representational Image
Representational Image

வெப் சீரீஸில் அந்தக் கட்டாயங்கள் இல்லை. ஆக்‌ஷனுக்கு தனி வெப் சீரீஸ். காமெடிக்குத் தனி. இப்படி பலப்பல...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தற்போது இளைஞர்கள் மத்தியில் திரைப்படங்களைவிட வெப் சீரீஸ் ரொம்பவும் பாப்புலர். அதற்கு முக்கியமான பல காரணங்கள் இருகின்றன.

முதலில் இரண்டு மணி நேரத்தில் ஒரு கதையை சொல்லிவிட வேண்டிய கட்டாயம் திரைப்படத்திற்கு இருக்கிறது. அதுவும் சென்ஸார் கெடுபிடிகள் வேறு. குறைந்தபட்சமாக நான்கு பாடல்கள் சேர்க்க வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் பிடித்தமாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாவித ஜர்னர்களின் மிக்ஸாகத் திரைப்படங்கள் இருக்கின்றன. காமெடி டிராக், சென்டிமென்ட் டிராக் இந்த மாதிரி.

வெப் சீரீஸில் அந்தக் கட்டாயங்கள் இல்லை. ஆக்‌ஷனுக்குத் தனி வெப் சீரீஸ். காமெடிக்குத் தனி. இப்படி பலப்பல.

Representational Image
Representational Image

சரி… தற்போது மிகப் பிரபலமாக இருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் வெப் சீரீஸ் என்னென்ன என்று பார்க்கலாமா?

முதலில் ஒரு முக்கியமான விஷயம். ஆக்‌ஷன் த்ரில்லர் வெப் சீரீஸ் பெரும்பாலும் குழந்தைகள் பார்ப்பதற்கு அல்ல. எனவே நடு ஹாலில் டி.வி.யில் குழந்தைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் வெப் சீரீஸ் பார்க்காதீர்கள். தூக்கலான வன்முறை காட்சிகளும் அடல்ட் ஒன்லி காட்சிகளும் வந்து போகும்.

அடுத்த விஷயம் ஒவ்வொரு ஓ.டி.டி-க்கும் தனித்தனி சந்தா கட்டணங்கள் இருக்கின்றன. ஒரு கூடுதல் வசதி, ஒருவர் கட்டணம் செலுத்திவிட்டு இரண்டிலிருந்து நான்கு ஐந்து பேர் ஷேர் செய்து கொள்ளுதல்.

ஸ்பெஷல் ஓ.பி.எஸ் - ஹாட் ஸ்டார் வி.ஐ.பி

நாடாளுமன்றத் தாக்குதலைப் பின்புலமாகக்‌ கொண்டு தயாரிக்கபட்டுள்ள ரொம்பப் பிரமாதமான ஆக்‌ஷன் த்ரில்லர். மொத்தம் 8 எபிசோடுகள். தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவை தாண்டி துபாய், துருக்கி, இரான், ஜோர்டன், அஸர்பெய்ஜான் என்று காசை கொட்டி தரமாக எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தேர்ந்த நடிகர்களை போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடு முடிவிலும் ஒரு பரபரப்பு நிச்சயம் இருக்கும். அடுத்த எபிசோடுக்கு நிச்சயமாக நம் கைகள் போகும்.

Representational Image
Representational Image

1. தி ஃபேமிலி மேன் – அமேசான் பிரைம்

இது ISIS தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்தத் திட்டமிடும் குண்டுவெடிப்பு சம்பந்தமான குற்றப் பின்னனியில் நடக்கிறது. பாகிஸ்தான் பின்புல காட்சிகள் மிகவும் தத்ரூபமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. 10 எபிசோடுகள். இந்தியில் மிகப் பிரபலமான மனோஜ் பாஜ்பாய் லீட் ரோல் செய்திருக்கிறார். நம்ம முத்தழகு ப்ரியாமணிதான், அவர் மனைவியாக நடித்திருக்கிறார். நாம் அதிகம் அறிந்திராத இந்திய புலனாய்வுத் துறையின் வீர சாகசங்களை விலாவாரியாக சொல்லியிருக்கிறார்கள். இதுவும் தமிழில் பேசும்.

2. டெல்லி கிரைம் - நெட்பிளிக்ஸ்

கொஞ்சம் பழசுதான். ஆனாலும் பார்க்காதவர்களுக்கு இப்பவும் புதுசுதான். டெல்லி நிர்பயா இறப்பை பின்புலமாகக் கொண்ட கதை. டெல்லி போலீஸ், எவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் செயல்படுகிறது என்பதை உண்மைக்கு மிக அருகில் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாலியல் குற்றவாளியையும் கைது செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகளை சீட்டுக்கு நுனியில் வரவழைக்கும் அளவுக்கு காட்டியிருக்கிறார்கள். 7 எபிசோடுகள். ஒரே பிரச்னை, தமிழில் இல்லை. ஆங்கில சப்டைட்டில்கள் உண்டு. இந்தி தெரிந்தவர்கள் நன்கு ரசிக்கலாம்.

3. பார்ட் ஆஃப் பிளட் - நெட்பிளிக்ஸ்

ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மேன்ட் எடுத்திருக்கும் ரத்தக் களரி வெப் சீரீஸ் இது. 7 எபிசோடுகள். தமிழில் பேசும். பலூசிஸ்தான் சுதந்திர வேட்கையைப் பின்புலமாகக் கொண்ட கதை இது. நிச்சயம் அடுத்த சீசன் உண்டு என்பது மாதிரி முடித்திருக்கிறார்கள். தலிபான் வீர்ர்கள் உருதுவில் பேசத் தொடங்கினாலும், திடீரென தமிழுக்குத் தாவுகிறார்கள். கதை பாகிஸ்தான் களத்திலும், இந்திய உளவுத்துறை அலுவலகத்திலும் மாறிமாறி பயணிக்கிறது. நடிகர்களின் பங்களிப்பு நிச்சயம் ஏமாற்றம் தராது. ஆக்‌ஷன் த்ரில்லர் பிரியர்களுக்கு செம தீனி என்று சொல்லலாம். ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களை ஒவ்வொரு எபிசோடுக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

5. ஹாஸ்டேஜஸ் - ஹாட்ஸ்டார் வி.ஐ.பி

பாகிஸ்தான், தீவிரவாதம், குண்டுவெடிப்பு என்பதிலிருந்து விலகி, ஆள் கடத்தல், அவர்களைத் துரத்திப் பிடித்தல் என்று பயணிக்கிறது இந்த வெப் சீரீஸ். இஸ்ரேல் நாட்டு டிவி சீரியலை, நமக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள். மொத்தம் 10 எபிசோடுகள். தமிழ் பேசும். லீட் ரோல் செய்திருக்கும் ரொனித் ராயும் டிஸ்கா சோப்ராவும் மொத்த சீரியலையும் தாங்கிப்பிடிக்கிறார்கள். கொஞ்சம் சென்டிமென்டாக க்ளைமாக்ஸ் வைத்திருப்பது ஒரு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். இருந்தாலும், அடுத்து என்ன என்ன என்பதில் ஒரு கிரிப் இருந்துகொண்டே இருக்கிறது.

இன்னும் பார்க்க வேண்டிய சில வெப் சீரியல்கள் இருக்கின்றன. அடுத்த கட்டுரையில் பகிர்கிறேன்.

- மெலட்டூர் இரா.நடராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு