Published:Updated:

பயணங்களை ரசிக்க மறுக்கும் மனங்கள்! - வாசகரின் ஆதங்கப் பதிவு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

சிறிய வயதில் ரயில் சிநேகம், பேருந்து சிநேகம் குறித்து கேள்விப்பட்ட கதைகளாய் அப்போது நினைவில் தோன்றியது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று ஓர் குறுகிய பயணம்.. திண்டிவனம் முதல் திருச்சி வரை என் நண்பர்களுடன் பயணப்பட்டேன். தன் செல்பேசியின் உதவியால் என் தோழன் அத்தொடர்வண்டியின் வருகையை அவ்வபோது எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தான், நிலைய அறிவிப்பாளருக்கும் முன்னதாக.

தொடர்வண்டியில் ஏறினோம், வண்டி நகரத்தொடங்கியது. ஆரம்பப் பரபரப்பு அடங்கி அச்சூழல் இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பியது. அப்போது ஓர் சின்ன நினைவலை. எனது ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்றுப்புறத்தார்கள் கூறிய பயண சிநேகம் எனக்கு நினைவிற்கு வந்தது. அங்கே என்னுடன் பயணித்த மூவரைத் தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது. நாங்கள் எங்களுக்குள் கேலியும் கிண்டலும் சிரிப்புமாய்த்தான் பயணித்தோம். ஆனாலும் இடையிடையே எங்கள் செல்பேசிகளும் குறுக்கிட்டன.

Representational Image
Representational Image

சிறிய வயதில் ரயில் சிநேகம், பேருந்து சிநேகம் குறித்து கேள்விப்பட்ட கதைகளாய் அப்போது நினைவில் தோன்றியது. தொடர்வண்டியில் 6 வயது தொடங்கி 60 வயது வரை அவரவர்கள் தங்களின் செல்பேசிகளோடு தனித்தனியாய்த் தனித்தனி தீவுகளாய்த் தங்களையே புதைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் யாரோடேனும் உரையாடலில் இல்லை. எல்லாம் இணைய விளையாட்டிலும் வெறுமனே சந்தைப்படுத்தலிலும் இருந்தார்கள்.

"ஒரே ஊருக்கு அடிக்கடி சென்றால் தங்குமிடத்தை மாற்றுங்கள். ஏனெனில் பல மனிதர் பழக்கம் பெரும் உதவி" என்ற அறிஞரின் கூற்று நினைவிற்கு வந்தது. எண்ணற்ற பயன்கள் செல்பேசியால் விளைகின்றன என்பது சத்தியமே. ஆனால் சிலவற்றை சின்னச்சின்ன மகிழ்ச்சிகளை இழக்க நேரிட்டதே என்பதே ஆதங்கம். மனிதன், சகமனிதன் மீது கொண்ட நம்பிக்கையைக் குறைத்து விட்டதோ என்ற எண்ணமும் கூடவே.

பயணங்களின் மகிழ்ச்சி இலக்கைச் சென்றடைவது மட்டுமல்ல, வழியில் நிகழும் அத்தனையும் ரசிக்கவும் ருசிக்கவும் பட வேண்டியவை. மகிழ்ச்சியின் எல்லையாய் மீண்டும் மீண்டும் நினைவலைகளாய் வந்து செல்ல வேண்டியவை. வேறு விதமாகக் கூற வேண்டும் என்றால், சமீபத்தில் ஒரு புகைப்படம் இதைத் தெளிவாகக் காட்டியது. அது ஒரு குதிரை பந்தயம் என்று நினைக்கிறேன். இளம் வயதினரும் நடுவயதினரும் கூட தங்கள் செல்பேசியில் அந்தக் குதிரைகளின் ஓட்டத்தை விதவிதமாய் செல்பிகளுமாய் வீடியோக்களுமாய்ப் பதிவு செய்துகொண்டிருந்தனர். ஆனால் ஒரு பாட்டி மட்டுமே அங்கு நடைபெற்றதை அங்கையே ரசித்துக்கொண்டிருந்தாள்.

இப்போது பட்டிமன்றமொன்றில் திரு.சுகிசிவம் கூறியதை நினைவுகூர்கிறேன் ...

``சவங்களோடு என்ன சவகாசம்! - இது இறந்த காலம்.. ஆகாயத்தில் கோட்டைகட்டி வாழமுடியுமா! - இது எதிர்காலம் ..மண்ணில் இருக்கும் இந்த நிமிடம் நிகழ்காலம், நிகழ்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள் "
சுகிசிவம்

பொன்னுக்காய் ஒரு கூட்டமும் மதிப்பெண்ணுக்காய் ஒரு கூட்டமும் தற்போது செல்பேசிக்காய் ஒரு கூட்டமும் நிகழ்காலத்தை இழந்து கொண்டு இருக்கின்றது. என்னையும் சேர்த்துதான். ஆற்று நீராய் காலம் கணிக்க முடியாமல் இருந்திடாமல், கடிகரமாய் ஒவ்வொரு நொடியாய் வாழ்வோம் இன்பமாய்

-ம.சதீஸ் குமார், வானொலி அறிவிப்பாளர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு