Published:Updated:

Tamil wordle சொல்லியடி: ஆறு வாய்ப்புகள்ல அஞ்சு எழுத்து சொல்லை கண்டுபிடிக்கணும்..!

Tamil wordle சொல்லியடி | solliyadi ( Tamil wordle சொல்லியடி | solliyadi )

ஹாய் மக்களே! விகடனின் Tamil wordle சொல்லியடி விளையாட 5 நிமிஷம் ஒதுக்கலாமா? போட்டிக்கு ரெடியா?

Tamil wordle சொல்லியடி: ஆறு வாய்ப்புகள்ல அஞ்சு எழுத்து சொல்லை கண்டுபிடிக்கணும்..!

ஹாய் மக்களே! விகடனின் Tamil wordle சொல்லியடி விளையாட 5 நிமிஷம் ஒதுக்கலாமா? போட்டிக்கு ரெடியா?

Published:Updated:
Tamil wordle சொல்லியடி | solliyadi ( Tamil wordle சொல்லியடி | solliyadi )

சொல்லியடி!

ஆறு வாய்ப்புகள்ல அஞ்சு எழுத்து சொல்லை கண்டுபிடிக்கணும்..!

ஆரஞ்சு பழம் மாதிரி சுளையா உறிச்சு சாப்பிடற ஈஸியான ருசியான word game தான் wordle..! இன்னிக்கு உலகமே விழுந்து விழுந்து கண்டுபிடிச்சுட்டு இருக்கிற இந்த பரபரப்பான விளையாட்டை தமிழ் வடிவில் கொண்டு வந்திருக்கிறது விகடன். அதுதான் “சொல்லியடி”! ஏற்கெனவே தமிழில் wordle விளையாட்டுகள் சில இருந்தாலும் இது ரொம்பவே unique! என்ன அப்படி இதுல தனித்தன்மைன்னு கேட்கிறவங்களுக்கு நாம சொல்ற ஒரே பதில் இதுதான் - ரொம்ப ஈஸியா இதுல அந்த அஞ்செழுத்து வார்த்தையை டக்குன்னு கண்டுபிடிச்சுடலாம்!

சொல்லியடி
சொல்லியடி

Wordle கேம்ல விஷேசமே அதுல ஆங்கில எழுத்துகள் 26 தான் இருக்குங்கறது தான்! நாம யூகிக்க யூகிக்க, தேவை இல்லாத எழுத்துகளை ஒதுக்கி, மிச்சமிருக்கும் எழுத்துகளை வெச்சு வார்த்தையை கண்டுபிடிச்சுடலாம்.
ஆனா, தமிழ்ல அப்படி முடியாதே.. மொத்தம் 247 தமிழ் எழுத்துகள்ல எதை எதைன்னு ஒதுக்கறது..? அதுக்கு எத்தனை வாய்ப்புகள் தந்தாலும் ரொம்பவே கஷ்டம் தானே, இல்லையா?
தமிழர்களுக்காக ரொம்ப ஈஸியாக்கி விகடன் உருவாக்கித் தந்திருக்கும் இந்த “சொல்லியடி” ஆட்டத்தை, solliyadi.vikatan.com -இல் போய் விளையாடலாம்!
இதுலயும் அஞ்சு எழுத்து வார்த்தைதான் கண்டுபிடிக்கணும். அந்த வார்த்தையில் இருக்கும் உயிர் எழுத்துகளை அதே வரிசையில் க்ளூவாக கொடுத்திருக்காங்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது, “பிடிவாதம்” என்கிற வார்த்தையை கண்டுபிடிக்கணும்னா, அதுக்கு க்ளூவா, அதில் இருக்கிற உயிர் எழுத்துகள் “இ இ ஆ அ . ”ன்னு (புள்ளி என்றால் அந்த இடத்தில் மெய்யெழுத்து வரும் என்று அர்த்தம்) கொடுத்திருப்பாங்க... நாம அதே வரிசையில் மட்டும் வார்த்தைகளை யோசிச்சா போதும்... இதிகாசம், விடிவானம்... இப்படி!
“சொல்லியடி” கீபோர்டில் மெய் எழுத்துகள் மட்டும் தரப்பட்டிருக்கும். மெய் எழுத்தை அழுத்தினாலே கட்டங்களில் அதற்குரிய க்ளு உயிர் எழுத்தோடு சேர்ந்து உயிர்மெய் எழுத்தாக விழும். முதல் எழுத்தாக உயிர் எழுத்தும் வரலாம் என்பதால் கீபோர்டில் உயிர் எழுத்துகளும் இருக்கும்.
ஆறு வாய்ப்புகள்ல நாம வார்த்தைய கண்டுபிடிச்சுடணும்... ஆனா, நாலாவது அஞ்சாவது சான்ஸ்லயே சொல்லியடிச்சுடலாம்... அவ்வளவு ஈஸியா இருக்கு ஆட்டம்!

சொல்லியடி
சொல்லியடி

தினம் ஒரு வார்த்தை... கண்டுபிடிக்கணும். சொல்லியடிச்சுட்டா அடுத்த ஆட்டத்துக்கு அடுத்த நாள் வரை காத்திருக்கணும்!
இதில் இன்னொரு ஸ்பெஷல் பட்டனும் இருக்கு. அதாவது, “என்னப்பா ரொம்ப ஈஸியா இருக்கே” என்று சொல்கிற அளவுக்கு நீங்க பலே கில்லாடியா இருந்தால் உங்களுக்கு ஒரு கூடுதல் சவால்!
Keyboardக்கு மேலே இருக்கும் “விகடன் அகராதி” buttonஐ ON செய்துவிட்டு அப்புறம் பாருங்க, உங்களுக்கு ஏற்ற மாதிரி ஆட்டம் tough fight-ட்டா இருக்கும்! ஏன்னா, அவரு ரொம்ப ஸ்ட்ரிக்ட்... ஸ்ட்ரிக்ட்... ஸ்ட்ரிக்ட்!!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism