Published:Updated:

`பெண்களைக் கொண்டாட வேண்டிய தருணம் இது!' #MyVikatan

Representational Image
Representational Image

நம் வயது, அனுபவம் ஏற ஏற, நம் கண்ணோட்டங்களும் பல விஷயத்தில் மாறுகின்றன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பெண்கள் தினம் முடிந்து சில தினங்கள் கடந்த நிலையிலும், பெண்கள் தினம் பற்றிய வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்குக் குவிந்த வாழ்த்துகளை பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மனத்தின் ஓரத்தில் சின்ன சந்தோஷம் ஏற்படுகிறது. நம் வயது, அனுபவம் ஏற ஏற, நம் கண்ணோட்டங்களும் பல விஷயத்தில் மாறுகின்றன. பெண்கள் தினத்தைக் கொண்டாடவேண்டியது பற்றிய என் கருத்தும் படிப்படியாக சில வருடங்களில் மாறியிருக்கிறது.

Representational Image
Representational Image

சில வருடங்கள் முன்பு, அதாவது SMS காலத்தில், ``எல்லா நாளும் ஒரே நாள்தான்" என்கிற மனநிலையில்தான் இருந்தேன். இதற்கெல்லாம் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று கூட தோன்றாது. எனக்கு வந்த(?!) வாழ்த்துகளுக்கு மட்டும், நன்றி கூறி ரிப்ளை அனுப்பிவிடுவேன்.

பிறகு வந்தது, Whatsapp காலம். பரபரப்பான காலை நேரங்கள் / வேலைகள் முடித்து, கால் வலிக்கு இதமாக, சப்பணம் இட்டு நாற்காலியில் அமர்ந்து, மொபைலில் டேட்டா ஆன் செய்து, ப்ரொபைல் பிக், ஸ்டேட்டஸ் பிக், ஸ்டேட்டஸ் மெசேஜ் இவற்றை போஸ்ட் செய்து, பெண்கள் மட்டுமே இருக்கும் நான்கைந்து குரூப்களில், மனதுக்கு இனிய பெண்களைப் போற்றும் பலப்பல ஃபார்வர்ட்களைப் படித்து, மகிழ்ந்து, பரிமாறிக் கொண்டாடி முடிப்போம். இதுவே ஒரு திருப்தியைக் கொடுத்துவிடும். சகோதரர், கணவர் என்று ஒவ்வோர் ஆணும் நம்மை வாழ்த்தவில்லை என்றால், யதார்த்த வாழ்க்கைதான் வாழ்கிறோம் (அதாவது போலியான சோஷியல் மீடியா வாழ்க்கை வாழவில்லை) என்று மகிழ்ந்திருப்போம்.

ஆனால் இப்போதெல்லாம் `சர்வதேசப் பெண்கள் தினம்' கண்டிப்பாக எல்லாரும் கொண்டாட வேண்டும் என்றே தோன்றுகிறது. பெண்களுக்கு கல்வி, வேலை இதெல்லாம் ஒரு பக்கம் நல்ல முன்னேற்றைத்தைக் கண்டிருந்தாலும், இது இன்னும் முழுமையாக எல்லாருக்கும் கிடைக்கவில்லை என்பது நாம் அறிந்ததே. பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் இது போன்ற சில குற்றங்கள் இப்போது இல்லை என்றாலும், பெண் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பலப்பல குற்றங்கள் - பாலியல் குற்றங்கள், domestic violence, acid வீச்சு, honor killing போன்றவை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது மிகவும் கசப்பானது.

Representational Image
Representational Image

இந்தியாவின் ஜனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்கிறார்கள். அதாவது உலகிலேயே இளம் வயது மக்கள் கொண்ட நாடு இந்தியாதான். சிறந்த அடுத்தடுத்த தலைமுறைகளை உண்டாக்குவதற்கான, மிகச் சரியான காலகட்டத்தில் இப்போது நாம் இருக்கிறோம். அதனால் இப்போதைய காலகட்டத்தில், பெண்கள் தினத்தைக் கொண்டாடுவது, பெண்களின்பால் ஒரு விழிப்புணர்வை மக்களுக்குள் ஏற்படுத்தும்.

பெண்கள் அனைவரும் multi taskers. மனதாலும், உடலாலும் மிக தைரியசாலிகள். ஒரு / பல குடும்பங்களைத் தாங்கி நிற்பவர்கள். தனி மனுஷியாக இருந்தாலும், அனைத்தையும் சமாளிப்பவர்கள். அவர்களுக்கு கல்வி, மதிப்பு மற்றும் பாதுகாப்பு எல்லாம் கிடைத்துவிட்டால், அமைதியான சமுதாயத்தை நாம் பார்க்கலாம்.

நம்மைச் சுற்றியுள்ள பெண்களை மதிப்போம், நம்மாலான ஆதரவைக் கொடுப்போம், பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்.

அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகள். Let’s be proud of ourselves.

-வி. சுதா சத்யநாராயணா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு