Published:Updated:

இதான் அம்மாவுக்கு நீங்க கொடுக்கும் மரியாதையா? - சாடும் பெண் #MyVikatan

Representational image
Representational image ( Pixabay )

இந்த இக்கட்டான சூழலில் வீட்டில் இருக்கும் அன்புக்குரியவர்களை மனம் தளராமல் வைத்துக் கொள்வது நம் கடமை.. இந்தச் சூழலில், சமூகவலைத்தலங்களில் நான் கண்ட ஒரு புகைப்படம் என் மனதை பெருமளவில் பாதித்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமீபகாலமாக நாம் அனைவரும் கொரோனா என்னும் பேரிடரில் சிக்கி வீட்டுச் சிறையில் இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான சூழலில், வீட்டில் இருக்கும் அன்புக்குரியவர்களை மனம் தளராமல் வைத்துக் கொள்வது நம் கடமை.. இந்தச் சூழலில், சமூகவலைத்தலங்களில் நான் கண்ட ஒரு புகைப்படம் என் மனதை பெருமளவில் பாதித்தது.

Mother = Unconditional Love என்னும் வாசகம் கொண்ட அந்த படத்தில் தாயை போற்றும் விதமாக எந்த ஒரு செயலும் அறங்கேறவில்லை மாறாக மாற்றம் காணாத சமூகமாக நாம் இன்றும் விளங்குகிறோமே என்ற குற்றஉணர்வே என்னுள் மேலோங்கி இருந்தது.

இப்படத்தில் வீட்டை நிர்வகிக்கும் ஒரு தாய் ஆக்ஸிஜன் செரிவூட்டியுடன் சமையல் வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். இது நிச்சயம் தாய்மையை போற்றும் செயலாக எனக்குத் தென்படவில்லை மாறாக புகைப்படம் எடுத்தவரை, அதீதமாக வஞ்சிக்கவே தோன்றியது.

அவர்களின் வீட்டின் நிலை என்னவோ?? அதை, நான் அறியேன். ஆனால் தாய்மையை போற்றும் செயலாய் இது அமையவில்லை என்பது மட்டும் நிஜம்.

Representational Image
Representational Image
Social media picture

மேலும் இந்த கொரோனா சூழலில் சில அதிபுத்திசாலிகள் அவர்களின் அதீத அறிவால் பிரபலமடைந்து விடலாம் என எண்ணியிருந்தால் மன்னிக்கவும். இது உங்களின் அக்கறையின்மையை மேலோங்கிக் காட்டுகிறது.

மாற்றம் கொள்ளுங்கள், மனிதகுல மாணிக்கங்களே ; இந்த மோசமான சூழலிலும் கூட உங்களின் நலன் காக்க உழைக்கும் தாய்மார்க்கு உதவிக்கரம் நீட்டாமலிருந்தால் உங்களைப் பெற்றவளுக்கு என்ன தான் மதிப்பு?

நாம் பல நூற்றாண்டு தாண்டிவிட்டோம். இன்னும்கூட அடுப்பங்கறை பெண்களின் பகுதி, அது அவர்களின் பொறுப்பு, கடமை என அறைக்கூவல் விட்டால் நிச்சயம் சொல்கிறேன், படைத்த அந்த கடவுளால் கூட உங்களைக் காப்பாற்ற முடியாது.

தாய்மையை நிரூபிக்க, அவர்களின் சிறப்பைப் பற்றி பேசிட பல சந்தர்பங்கள் உண்டு. அவர்கள் மாயக் கைப்பாவைகள், அன்பெனும் மந்திரத்தால் மட்டுடமே அவர்களை ஆட்கொள்ள முடியும். ஆச்சரிய உலகின் அதிசயப் பிறப்பு தான் அன்னை என்னும் ஸ்தானம். ஆனால் மகாத்மா காலத்தில் இருந்து இன்றிருக்கும் மோடி காலம் வரை தாயானவள் அடுப்பங்கறையோடு போராடியே வாழ்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சன உண்மை.

இவ்வாறோறு கருத்தை முன்வைத்தால் நீங்கள் என்ன பெண்ணியவாதியா ?? எனக் கேட்பார்கள். நிச்சயம் நான் இல்லை நண்பா. இந்த இந்தியத் திருநாட்டின் 100 கோடி தாய்மார்களின் மனசாட்சியாக தான் நான் பேசுகிறேன்.

காலம் மாறிவிட்டது தங்கையே.. நீங்கள் இன்னமும் அப்டேட் ஆகவில்லை என வினவினால்; இல்லை நண்பா.. காலம் மாற்றம் கண்டுவிட்டது, நவீன தாய்மார்களுள் பலர் ஸ்விக்கி, ஜோமேட்டோவில் தான் உணவு பரிமாறுகிறார்கள். நான் நிச்சயம் அவர்களின் குரல் அல்ல. மாறாக இன்றளவும் கடமையாற்ற கணம் தவறாது உங்களின் தேவைகள் அனைத்தையும் நிதம் சிந்தையில் கொள்ளும் ஊர்க்கார சராசரி தாய்மாரின் குரல் தான் நான்.

அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்ன ? ஒன்றும் பெரிதாய் இல்லை. என்னமா ஹல்ப் பண்ணட்டுமா ? என்று மகனின் ஒரு கேள்வியும். ஹல்ப்லாம் பண்ண மாட்டேன் சும்மா கூட நிக்கிறேன் என்ற மகளின் வாய்ச்சவுடாளும். தண்ணி ஏதும் தூக்கி வைக்கட்டுமா மா என்ற கணவனின் ஒற்றை வரியும் தான்.

தாயை உயர்த்திப் பிடித்திட மணிமண்டபம் கட்டிடத் தேவை இல்லை மாறாக நிதம் அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு "நான் இருக்கிறேன்" என்ற நம்பிக்கையை மட்டும் விதைத்திடுங்கள். தாய்மைக்கு மிகப்பெரிய போதை உண்டு ; அன்பு, குடும்பம்,சொந்தம் - இவை மூன்றும் தான் அவர்களின் ஆகச் சிறந்த போதை ! அவர்களின் பலமும் நாம் தான், பலவீனமும் நாம் தான்.

இந்த இக்கட்டான சூழலில் அவர்களுடன் துணையாய் நிற்ப்போம்.

சிந்தியுங்கள்.. செயலாற்றுங்கள்!

-கவிநிலா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு