Published:Updated:

எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்! - மயக்கும் மருத்துவன் -1

இந்த தேவையில்லாத ஆணிகள் தான் மருத்துவ மற்றும் அழகு சாதன உலகில் மிகப்பெரிய வியாபாரமாக தழைத் தோங்கி நிற்கிறது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அறுவை சிகிச்சைக்கு, மயக்க மருந்து கொடுக்கும் முன், பல்ஸாக்சிமீட்டரை (pulse oximeter) விரலில் பொருத்தினேன். கொரோனா தயவால் பல்ஸாக்சிமீட்டர் என்ன என்பது பள்ளிக்கூடமே ஒதுங்காத பழைய தலைமுறைக்கும் தெரிந்து இருக்கிறது. (மதுக்கூர் சரோஜாவுக்கு 85 தான் இருக்காம். - அம்மா) 82 என காட்டிற்று. வேறு விரல்களில் பொருத்த சொன்ன போதும் அதே.. 'நகப்பூச்சு' - தவறான ரீடிங் காட்டுகிறது போல என நகப்பூச்சை அகற்ற சொன்னேன். சிரித்த அந்த பெண், அரபியில் சொன்னார். விசாரித்த போதுதான் தெரிந்தது அது நகப்பூச்சு இல்லை.. செயற்கை நகமாம். (Artificial Nail), விலை கேட்டு விக்கித்து போய் அப்படியே விட்டுவிட்டேன் (என் சம்பளத்தில் பாதி)

Representational Image
Representational Image
Pexels

மனித உடலில் பரிணாம வளர்ச்சியால் சில உபயோகமற்று போன உறுப்புகள் உண்டு மருத்துவ உலகில்... அதை வெஸ்டிஜியல் ஆர்கன்ஸ் (vestigial organs) என்கிறார்கள். (சரியான தமிழ்ப்பதம் வேண்டுமெனில் மதன்கார்க்கியை அணுகவும்) வடிவேல் பாஷையில் தேவையில்லா ஆணிகள். ரோமம், நகம், குடல்வால் (Appendix) ஆகியன.

வேட்டையாடவும், இரையை கிழிக்கவும் கூரான நகங்களும் கோரை பற்களும் விலங்களுக்கு தேவைப்பட்டன. வேல்கம்பு, ஈட்டி என ஆதிகால மனிதன் ஆயுதங்களுக்கு மாறிய போது.. நகங்களும் தேவையில்லாது போயிற்று. இப்போதுள்ள நகங்கள் அந்த கூரிய நகங்களின் எச்சங்கள் .

காதுமடல் கூட அப்படித்தான் ....

தூரத்தில் வரும் எதிரிகளின் ஒலி கேட்க காதுகளின் திசை திருப்ப.... காது மடல்

இப்போது திரும்ப தேவையில்லை எனவே அது அசையா மடல் ஆகிற்று.

பனி... குளிர் பாதுகாக்க ரோமங்கள்.

காட்டைவிட்டு மனிதன் வெளியே வந்த பொது சூட்டில் ரோமங்கள் உதிர.. குறைய தலையில் மட்டும் மூளையின் வெப்பந்தாங்கியாக (இன்சுலேஷன் - insulation) தங்கிவிட்டது.

பெருகுடலும், சிறுகுடலும் இணையும் இடத்தில் ஒரு அற்புத குடல் அமைப்பு,....

இது இப்போதும் ஆடு, மாடுகளுக்கும் உண்டு. செடி, கொடி, புல் உண்ணும் விலங்குகளின் குளோரோபில் மற்றும் ஸ்ட்டார்ச் போன்ற பச்சை உணவுகள் செரிக்க பயன்பட்டது.

குரங்குகளுக்கும் உண்டு..

Representational Image
Representational Image

மனிதன் நெருப்பை கண்டபின் உணவுகளை சமைத்து உண்ணத் தொடங்கினான். சமைத்த உணவுகளில் .. பாலிசாக்ரைட் மோனோசாக்ரட்களாக மாறி (polysaccharide - monosaccharide) மாறி... ஜிரண மண்டலங்களில் வேலையை குறைத்தன. விளைவு உபயோகமில்லாத அந்த பகுதி சுருங்கி குடல்வாளாக 2-3 செண்டிமீட்டர் அளவில் .... அப்பண்டிக்ஸ் (appendix).

இந்த தேவையில்லாத ஆணிகள் தான் மருத்துவ மற்றும் அழகு சாதன உலகில் மிகப்பெரிய வியாபாரமாக தழைத் தோங்கி நிற்கிறது. தேவையில்லா ரோம உதிர்வு, ஆண்களுக்கு டெஸ்டோஸ்ப்டீரான் (testosterone) என்ற ஹார்மோனல் சுரப்பதினால் ஏற்படும் 'வழுக்கை'.... இயல்பு.. அதை மறைக்க எம்.ஜி.ஆர் காலத்து தொப்பிகளில் ஆரம்பித்து, பாலு மகேந்திராவின் அடையாள தொப்பியாகி செயற்கை சிகை (hair wig) என முடிகளை ஓட்டுவது, மாற்றுவது, பிணைப்பது (hair weaving, bonding, transplant) திருப்பதிக்கு போய் திருப்பி நமக்கே வருகிறது... கோடிகளில் வியாபாரம். ஒரு சினிமாவில் கதாநாயகனுக்கு ஒட்ட மட்டும் சில கோடிகளாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நரம்பு மண்டலத்தின் வேகஸ் (vagus nerve) என்னும் நரம்பு மூலையில் தொடங்கி உதரவிதானம் வழி ஜீரணமண்டலம் வரை வியாபித்து உள்ளது. அதன் ஓரு கிளை ட்ராகஸ் (tragus) எனும் காது மடல் நுனி வரை நீளும். அவ்விடம் துளையிடுவதன் மூலம் வேகஸ் நரம்பை கட்டுப்படுத்தலாம் என மருத்துவ அறிவியல் சொல்கிறது.

நவீன காஸ்மோட்டாலஜி (cosmetology) உலகம் அந்த இடத்தை தவிர எல்லா இடத்திலும் குத்த தொடங்கியுள்ளது..

நகப்பூச்சு, அதை நீக்க ஒரு பூச்சு....

செயற்கை நகம், அதில் சிறு வைரம் போன்ற கற்கள்...

இவையெல்லாம் பார்க்கும் போது.. எனக்கு நியாபகம் வருவது உலகில் 7ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைப்பாடுடன் வாழ்ந்து கொண்டிருப்பது தான்.

Representational Image
Representational Image

குடல்வால் மட்டும்.. சும்மா இருந்தால் ஒன்னும் இல்லை.. அதில் தொற்று ஏற்படும் போது தான் 'அவர்களுக்கு திண்டாட்டம் - மருத்துவர்களுக்கு (அறுவை சிகிச்சை) கொண்டாட்டடம்' (லேப்ரோஸ்கோப்பின்னா 1 ரூபா ஆவும்... ஒபன்ல பண்ணா 40-50 ல முடிச்சுடலாம் ...மருந்து செலவு தனி)

இனி...

மனிதனின் தேவையறிந்து பரிணாம வளர்ச்சி அடையுமெனின்....

கட்டை விரல் தவிர மற்ற விரல்கள் ஒட்டிப் போய் ஸ்பூன் அல்லது மொபைல் ஸ்டான்ட் ஆகலாம். ஏனெனில் இப்போ அவனுக்கு சாட் (chat) டைப் செய்ய தேவை இரண்டு கட்டை விரல்கள் மட்டுமே.

மாஸ்க் மாட்டி... மாட்டி .. காது மடல் உருமாற வாய்ப்பு உள்ளது.. (அவதார் குட்டி போல)

இவ்வளவு ஒளிகளை நமது கண்களின் விழித்திரை (retina) எதிர்க்கொண்டிருக்க வாய்ப்பில்லை. கண்களில் மிகப் பெரிய மாற்றம் வர வாய்ப்புண்டு

சட்டை, டீ-சர்ட், சுடிதார் டாப்களில் மாஸ்க் அட்டாச்ட் (mask attached) வரக் கூடும். (திருப்பூர்காரர்கள் இந்த ஐடியாவை செயல்படுத்தும் முன் எனக்கு ராயல்டி கொடுத்துவிடனும்).

இன்னும் (என்னை) என்ன செய்ய போகிறாய் இறைவா!!!


மயக்கும் மருத்துவன்,

மரு.அருண்குமார் முத்துசுப்ரமணியன்

(MD Anesthesiologist) UAE

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு