Published:Updated:

`சமையல் பாட்டியுடன் வாழப் பழகிக்கொண்டோம்.. ஆனா?’ -சென்னை ஹாஸ்டல் லைஃப் நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஒரு கட்டத்தில் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணம், ஆன்சைட் என்று கிளம்பிவிட்டார்கள். நான் ஹாஸ்டல் லைஃப்புக்கே திரும்ப வேண்டிய சூழல்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என் சென்னை வாழ்க்கையும் உங்கள் நிறைய பேரை போல காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்கூடதான் ஆரம்பித்தது.

ஹாஸ்டல் லைஃப் கொஞ்ச காலம். அப்புறம் ரூம் எடுத்து சமைக்கத் தெரியாமல் சமைத்துச் சாப்பிட்டு ஒரே ஃபேமிலியாக நிறைய காலம் என்று நாள்கள் கடந்தன.

Representational Image
Representational Image
Pixabay

ஒரு கட்டத்தில் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணம், ஆன்சைட் என்று கிளம்பிவிட்டார்கள். நான் ஹாஸ்டல் லைஃப்புக்கே திரும்ப வேண்டிய சூழல்.

ஒரு PG-யில் சேர்ந்தேன். என்னைத் தவிர அங்கு அனைவரும் ஸ்டூடன்ட்ஸ். தெலுங்கு, இந்தி ஆட்கள்தான் அதிகம். மொத்தமாக 5 அப்பார்ட்மென்ட் சேர்ந்தது PG. எல்லாருக்கும் சேர்த்து நான் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்டில்தான் சமைப்பார்கள். சமையல் ஓகே ரகம். சாப்பிடும்படிதான் இருக்கும். ஆனால் ஆபீஸில் என்னுடன் அமர்ந்து சாப்பிடும் யாருமே என் லன்ச்சை சீண்ட மாட்டார்கள். (அது ஒருவகையான தீண்டாமை)

குக் பாட்டியும் எங்களுடன்தான் தங்கி இருந்தார். அந்தந்த நேரத்துக்குச் சமைப்பார். சீரியல் பார்ப்பார். நான் ஆபீஸ் முடிந்து போகும் நேரத்தில் தூங்கியிருப்பார்.

அதிகமாக யாருடனும் பேச மாட்டார். கம்ப்ளைன்டஸ் எதுவும் இல்லாமல் சுமுகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சம்பளம் சேர்த்துக் கேட்டார் என்று திடீரென ஒருநாள் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேறு ஒருவரை நியமித்துவிட்டார்கள்.

புதிதாக வந்த பாட்டி அப்படியே ஆப்போஸிட். ஆள் பார்க்கவே மிரட்டலாக இருந்தார். கணீர்க் குரல். சாதாரணமாகப் பேசினாலே சண்டை போடுவது மாதிரிதான் இருக்கும். சண்டையும் நிறைய போடுவார். அவர்களுக்கு அங்கு யாருடனும் செட் ஆகவில்லை. என் டைமிங் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

Representational Image
Representational Image
Pixabay

PG-யில் எல்லோரும் 7 - 8 மணிக்கே சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். நான் 9 மணிக்குத்தான் ரூமுக்கே போவேன். பாட்டி அப்போதுதான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஹாலில் டிவி பார்ப்பார். பெண்களிடம் சண்டை போட்டு டிவி, லைட் எல்லாம் ஆஃப் செய்துவிட்டு தூங்க ஆரம்பிப்பார்.

நான் சரியாக அந்த டைமுக்குதான் என்ட்ரீ.

``ஹால்ல நடக்காத.. கிச்சன் லைட் போடாத..’’ என்று அடுத்த சண்டை ஆரம்பிக்கும். பாட்டி வந்த கொஞ்சநாளிலேயே கம்ப்ளைண்ட்ஸ் பறந்தன. ஆனால் ஓனர் கண்டுகொள்ளவில்லை. நாங்களும் பலவழிகளில் யோசித்துக் கடைசியில் "பாட்டியுடன் வாழப் பழகிக் கொள்ளலாம்" என்று முடிவு எடுத்தோம்.

மொழி தெரியவில்லை என்றாலும் பிறமொழி பேசும் பெண்களிடமும் எதாவது பேசிக்கொண்டே இருப்பார். நாங்கள் ஒரு 3 பேர் பாட்டிக்கு ஃபுல்டைம் டிரான்ஸ்லேட்டராக மாறிவிட்டோம். நாங்கள் பாட்டியைப் பற்றி புலம்பிக்கொண்டிருந்த காலம் போய், பாட்டி எங்களிடம் புலம்பும் காலம் வந்துவிட்டது. அதிலும் நான் ரொம்ப பொறுமையாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்

Representational Image
Representational Image
Pixabay

``9 மணிக்கு கிச்சன் லைட் போடாத’’ என்று சண்டை போட்டவர் பின்னர் நான் எவ்வளவு லேட்டாக வந்தாலும் விழித்திருந்து நான் சாப்பிடும் வரைக்கும் கூடவே இருந்து பேசும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்.

நிறைய பேசுவார்கள். அந்தக் கணீர் குரலில் அவர்கள் சிரிப்பதும் பேசுவதும் அழகாக இருக்கும்.

எங்கள் PG-யில் எல்லா நாளும் கார்த்திகை ரேஞ்சுக்கு மாறிவிட்டது. நான் ஆபீஸ் கிளம்புவதற்கு முன்பு எப்போதும் சாமி கும்பிட்டுவிட்டு போவது வழக்கம். பாட்டி இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் கோயில் போகும்போது பாட்டியைக் கூப்பிட்டேன். அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். அன்று இரவு எதற்காகக் கோயில் வரவில்லை என்று அவரிடமே கேட்டேன். அன்றுதான் அவரைப் பற்றி அனைத்தையுமே சொன்னார்.

அவருக்குக் கல்யாணம் ஆகி குழந்தை இல்லை‌. அவரின் வீட்டுக்காரர் இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்டாராம். பாட்டி 40 வருஷமாக தனியாகத்தான் இருக்கிறார். "எனக்கு சாமின்னா அவ்ளோ பிடிக்கும். குழந்தைக்காகவும் என் குடும்ப வாழ்க்கைக்காகவும் நான் போகாத கோயில் இல்ல, வேண்டாத தெய்வம் இல்ல. எந்த தெய்வமும் எனக்கு செவி சாய்க்கல. அதான் நான் சாமி கும்பிடறது நிறுத்திட்டேன். என் வாழ்க்கையில வேலை செய்யுறதும் தூங்குறதும் மட்டும்தான் ஒரே ஆறுதல்" என்று சொன்னார்.

ஆரம்பத்தில் எங்களிடம் கடுகடுவென அவர் இருக்கக் காரணம் அவரின் வாழ்க்கை மீதான விரக்தி என்பதும் பின்பு பேச ஆரம்பித்ததும் எங்களுடன் ஒட்டிக் கொண்டது பாசத்திற்காக ஏங்குவதால் என்பதும் அன்றுதான் புரிந்தது.

Representational Image
Representational Image
Pixabay

அன்று இரவு அவரை நினைத்துக் கண்ணீர் சிந்தினேன். யோசித்துப் பார்த்தால் அவர் 40 வருஷமும் நிறைய காலேஜ் ஹாஸ்டல்களில் குக்காகவும் கண்டிப்பான அம்மாவாகவும் இருந்திருக்கிறார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் அவர்.

ஹாஸ்டலில் இருந்து வந்த பிறகும் பலசமயம் அவரைப் பற்றிய ஞாபகங்கள் வந்து செல்லும். சமீபத்தில் அன்னையர் தினம் வந்தபோதுகூட எனக்கு அவரின் நினைப்புதான் வந்தது.

பாட்டியுடன் வாழப் பழகிக்கொண்டால் டார்ச்சர் இருக்காது என்று நினைத்த எனக்கு இப்போது அவர் இல்லாமல் வாழப் பழகிக்கொள்வது கடினமாக உள்ளது.!

உங்கள் குரலும் சிரிப்பும் எதிர்பார்ப்பு இல்லாத அன்பும் நான் PG-யை விட்டு வரும்போது கலங்கிய உங்கள் கண்களும் என்னைக்கும் என் நினைவில் இருக்கும் பாட்டி!

-மலர்விழி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு