Published:Updated:

80-களில் காதல் செய்தவர்கள் செம லக்கி! - ராஜா ரசிகரின் நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Gabriel Gurrola / Unsplash )

இரவில், சில நேரங்களில் அர்த்தமற்ற அமைதி ஒன்று என்னைச் சூழ்ந்து கொள்ளும். தனிமை, கம்பளம் விரித்து என்னை வரவேற்கும்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

'நான் தேடும் செவ்வந்திப் பூவிது...

ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது...'

ஞாயிறு மதியமானால் என்ன செய்வதென்று தெரியாமல்,

வீட்டின் முகப்பில் போடப்பட்டிருக்கும் கட்டிலில்,

வெறுமெனப் படுத்திருக்கும்போது, எங்கிருந்தோ மெல்லிய குரலில் இளையராஜாவின் இசை,

காற்றோடு கலந்துவந்து,

காதோரத்தில் கரைந்துசெல்லும்.

இளையராஜா
இளையராஜா

யார் வீட்டிலிருந்து வருகிறது என்ற முயற்சியை ஒருநாளும் நான் எடுத்ததில்லை.

இரவில், சில நேரங்களில் அர்த்தமற்ற அமைதி ஒன்று என்னை சூழ்ந்துகொள்ளும்.

தனிமை கம்பளம் விரித்து என்னை வரவேற்கும்.

தூக்கம் தூரச் சென்றுவிடும்.

இனம் புரியாத கவலைகளும் கேள்விகளும் என்னைச் சுற்றி குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருக்கும்.

சிஸ்டமை ஆன் செய்து,

நேராக ராஜா ஹிட்ஸ் ஃபோல்டரைத் தட்டிவிட்டு,

ஒரு நிமிடம் கண்களை மூடினால், அதுவரை கண்கள்முன் இருந்த மனக் கீறல்கள் தடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

'நிலவு தூங்கும் நேரம்...

நினைவு தூங்கிடாது...'

எனக் கேட்கும்போது,

ஏதோ மெரினா பீச்சில்

வெள்ளை நிற புடவையில்...

என் அருகில் ஒருவள் உட்கார்ந்துகொண்டு,

மவுத் ஆர்கனை வாயில் வைத்து எனக்காக வாசித்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வரும்.

Representational Image
Representational Image

'யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு, நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு...'

என கேட்கும்போது, மலைக்கோயில் ஒன்றில் கிழிந்த சட்டையுடன் முகம் முழுக்க தாடி வைத்துக்கொண்டு,

வைதேகிக்காகக் காத்திருப்பதைப் போன்ற உணர்வு மேலோங்கும்.

1980 -களில் காதல் செய்தவர்கள்தான் எவ்வளவு புண்ணியவான்கள்?

காதலைச் சொல்ல,

'வா வெண்ணிலா...'

காதலில் கரைய,

'காதலின் தீபம் ஒன்று...'

காதலில் வெற்றிபெற்றால்,

'ஒரு ஜீவன் அழைத்தது...'

காதலில் தோல்வியுற்றால்,

'உன்ன நெனைச்சேன்...'

'பாதை ஒன்று ஆனபோது திசைகள் வேறம்மா...

உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா...' எனும் இந்த காதல் தோல்வி வரிகளை,

மூச்சை உள் வாங்கிக்கொண்டு ,

கண்களில் நீர் பெருக,

தலையணையுள் முகம் புதைத்து

தனிமையில் பாடுவதற்காகவே,

பல முறை காதலித்து, அதில் தோல்வி அடையத் தயார் நிலையில் உள்ளேன்.

Representational Image
Representational Image

ரயில் நிலையத்தில் ஒன்று சேரும் 'மெளன ராகம்' சந்திரகுமாரும் திவ்யாவும்,

இன்றும் அதே டெல்லியில் ஒன்றாக வசிப்பது போலவும்...

ரயில் நிலையத்தில் பிரிந்து சென்ற மூன்றாம் பிறை சீனுவும் விஜியும் இன்றும் ஏதோ ஓர் மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலவும்...

ஒரு பிம்பம் எனக்குள் அடிக்கடி வந்துபோகும்போது,

'மன்றம் வந்த தென்றலுக்கு...,

'கண்ணே கலைமானே..., என மாறி மாறி என் இதயவோட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும்.

கடல் ஓசையும்

தேவாலய மணியும்,

கொடியிலே மல்லிகைப் பூவை நினைவுபடுத்தும்.

Representational Image
Representational Image

மயங்கும் இரவும்

மதிகெட்ட குளிரும்,

பனி விழும் இரவை ஞாபகப்படுத்தும்.

இன்னும் எவ்வளவுதான் அடுக்கிக்கொண்டு போவது?

அடடா.

இன்னும் ஒரு ஜென்மத்தில் மனிதனாகப் பிறக்க சரியான காரணத்தைக் கடவுள் கேட்டால்?

'இசைஞானியின் இசையை மறுபடியும் ரசிக்க வேண்டும்'

என்பதைத் தவிர வேறென்ன காரணத்தைச் சொல்ல முடியும்?

-மருத்துவர் சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு