Published:Updated:

`கறுப்பு வெள்ளையின் கலர்ஃபுல் நினைவுகள்..!' - 90ஸ் கிட்ஸும் நாடகங்களும் #Nostalgia #MyVikatan

இன்றைய டேக் டைவர்சனை 30 ஆண்டுக்கு முன்பே சொல்லியிருப்பார். அதன் பின்னர் மெட்டிஒலி முடிந்தால்தான் வீடுகளில் சட்டி ஒலி கேட்கும்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மொபைல், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இவை இல்லாத 90-ஸ் கிட்ஸுக்கு விளையாட்டு, டிவியும்தான் பொழுதுபோக்காக இருந்தது. அதுவும் 90-களில் டி.வி இருக்கிற வீடுகள் எது என்று கேட்டால், சில வீடுகளை ஊரே கை காட்டும். சாலிடர், பிபிஎல், ஒனிடா, டைனோரா என எல்லாமே ப்ளாக்&ஒயிட் காலங்கள். இதில் அடையாறு ஆலமரத்தை அஞ்சாறு பேர் சேர்ந்துகட்டிப் பிடிக்கிறது போலத்தான் சட்டர் வைத்த டைனோரா டிவியும் சுற்றளவும். கிட்டத்தட்ட அரை வீட்டளவு இருக்கும்.

நூறாவது நாள் பட மோகன் மாதிரி சிலர் சுவற்றிலேயே டிவியை புதைத்து வைத்திருப்பார்கள். `ஓங்கி உயர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் கீழே இருக்கும் ப்ளு கலர்தான் பூஸ்ட்' என்று சொல்வார்கள். ஹார்லிக்ஸ் மிட்டாய் சாப்பிடுபவர்க்கு, `இதுல எப்பிடி பூஸ்ட் இருக்கும்' என்ற ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.

டி.வி இருக்கும் வீட்டுக்காரர்களுக்கு வெங்காயம், வெள்ளைப் பூண்டு உரித்துத் தரணும். அங்கு இருக்கும் மழலைகள் நம்மை மானாவாரியாக திட்டினாலும், ``மயங்கினேன் உனை விரும்பினேன்’’ என்று சொல்லுமளவுக்குக் கொஞ்ச வேண்டும். அதற்குக் காரணம் நாடகம்.

Representational Image
Representational Image
Sven Scheuermeier / Unsplash

#ஒரு நாடகம் ஒரு உலகம்

முன்பெல்லாம் படங்களைவிட நாடகம்தான் அதிமுக்கியம். அதிலும், அந்த ஸ்டாண்டிங் கேமரா இருக்கும் தூர்தர்ஷன் நாடகம். ஒரே ரூம்தான் லொகேஷன். அங்கு குஷன் ஷோஃபா இருந்தால் பணக்கார வீடு. நரம்பு ஷோஃபா இருந்தால் ஏழை வீடு. ஒரு மெல்லிய ஸ்க்ரீன் துணி. அதுக்கு அந்தப்பக்கம் சமையலறை இந்தப்பக்கம் ஹால் அவ்ளோதான். ஆனால், அதையும் நம் மனங்கள் ரசிக்கத்தான் செய்தது.

லைட்டிங் இல்லாமல் கண்ணெல்லாம் மினுமினு என்று மின்னும். செயற்கையாக சிரிப்பது, அழுவது, கடைசியாக ஒரு நீதி இருந்தே தீரும்.

சிறுசுகள் காத்திருப்பது சனிக்கிழமைக்கு.. காரணம் சக்திமான். பூப்போன்ற இவன் சக்திமான்.. பாடல் கேட்டு அந்த சக்திமான் பிஸ்கட், பபிள்கம்முக்கு வரும் ஸ்டிக்கர் ஒட்டிப்பார்ப்பது இன்னும் சிறப்பு.

ஒரு சில நாள்களில் டப்பிங் செய்யாமல் இந்தியிலேயே வரும். டயலாக்கை விட்டுவிட்டு ``எப்ப ஒரு கையைத் தூக்கி கரகரனு சுத்துவார்’’ என்று எதிர்பார்த்திருப்போம். நீ கங்காதரா.. சக்திமானா? என்று கனவில் கேட்டு நலம் விசாரிப்போம்.

இந்திரஜித், பாப்பாய், நிஷாகந்தி, சித்ரகார், சித்ரமாலா, சந்திரகாந்தா, ரயில் சிநேகம், விழுதுகள், ஜங்கில் புக், சித்திரப்பாவை, நீலாமாலா, எஸ்.வி சேகர், அடடே மனோகர் என நாடகங்களுக்குத் தவம் கிடப்போம்.

கிரேஸி மோகனின் ஒரு நாடகம் இன்னும் நினைவிருக்கிறது. தன் தங்கைக்கு சுயம்வரம் நடத்துவார். தன் வீட்டிலிருந்து அடையாறு வரை டிராபிக்கில் யார் முதலில் சென்று வருகிறார்களோ அவர்களுக்கே தன் தங்கை என அறிவிப்பார். பைக், கார், சைக்கிள், ஆட்டோ என்று நிறைய பேர் வந்திருப்பார்கள். ஒருத்தர் நடந்து வந்திருப்பார். அவரை அனைவரும் கிண்டல் செய்வார்கள். பல சிக்னல், டேக் டைவர்சன், லெவல் கிராசிங்கில் எல்லோரும் நின்றுவிட, நடந்துவந்தவர் மட்டும் ஜெயித்து பெண்ணையும் கரம்பிடித்து கூட்டிச் செல்வார். இன்றைய டேக் டைவர்சனை 30 ஆண்டுக்கு முன்பே சொல்லியிருப்பார். கறுப்பு வெள்ளையில் பார்த்த கலர்ஃபுல்லான நினைவுகள்..!

kolangal serial
kolangal serial
Vikatan team

#அடுத்த கட்டமாக

1995-களில் சன் டி.வி வந்தது. அதில்தான் சக்தி - பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனை தந்தது. நிம்மதி உங்கள் சாய்ஸ் அகிலாவை நம் வீட்டு பெண்ணாக நினைத்தது, ஆச்சி இண்டர்நேஷனல் -மீனா அப்ப நாடகத்தில் நடித்திருந்தார். விஸ்வநாத்-விக்ரம் நடித்திருப்பார், ஆனந்தபவன்- எம்.எஸ் பாஸ்கர், காஸ்ட்லி மாப்பிள்ளை, கையளவு மனசில்-வாலி, காதல் பகடையில் டிவி வரதராஜன், ரேணுகாவின் அசத்தல் நடிப்பு என சிக்ஸர் அடித்தன. அப்போது வேணு அரவிந்துக்கு பெரிய க்ரேஸ் பெண்கள் மத்தியில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வித்தியாசமாக முதல்முறை Laughing tape உபயோகித்திருப்பார்கள் ரமணி vs ரமணியில். இப்போதும் கணவன் மனைவி கிண்டலுக்கு இது ஒன்றுதான் கைகொடுக்கிறது. புதன்கிழமை இரவு 8-30 மணிக்கு பாலுமகேந்திராவின் கதை நேரம். பல்வேறு சிறுகதைகளை காட்சி வடிவில் பார்த்தது. பின்னாளில் புத்தகம் படிக்கும்போது நிழலாடும்.

கங்கா யமுனா சரஸ்வதி ரொம்ப நாளாய் ஓடியது. மேலும் பஞ்சமி, கனாகாணும் காலங்கள், வேலன், அண்ணாமலை, கோலங்கள் என ஹிட் அடித்தன.

Shaktiman
Shaktiman

#புகழ் பெற்ற நாடகங்கள்

ஞாயிறு காலை 10 மணிக்கு வீதியெங்கும், `இதுதான் மஹாபாரத கதை' என இப்பாடல் ஒலிக்காத ஞாயிறே இல்லை. பி.ஆர் சோப்ராவின் இத்தொடர் அப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலம். காலச்சக்கரம் கதை சொல்வதைப் பார்த்து பிரம்மித்தது. அப்போது துச்சாதனன் துகில் உரியும் வாரம் என விளம்பரப்படுத்தியிருந்தார்கள் அந்த வாரம் சென்சிட்டிவாய் இருந்ததால் பல இடங்களில் பவர் கட்டானது மறக்க முடியாத அனுபவம்.

1995-96களில் புகழ்பெற்ற தொடராய் ஓடியது. இன்றும் பீஷ்மர் முகேஷ் கண்ணா, பாஞ்சாலி-ரூபா கங்குலி, பீமன் (கமலுடன் இதே பெயரில் மை.ம.கா.ராஜனில் நடித்திருப்பார்) துரியோதனன் என மறக்க முடியாதவையாக மனதில் பதிந்தன.

எழுத்துப் போடும்போதே பெட்டி திறந்து சித்தர் பாடல் ஒலிக்கும். நாய் குரைத்தவுடன் வரும் மர்மதேசம் இரவு புதன் கிழமையை இனிமையாக்கியது. நாய் கடிப்பதும், அந்த ட்ரக் ட்ரைவர் யாரென குழம்புவதும் சாருஹாசனை புகழ்பெற வைத்ததும் இதுவே.

இதன் தொடர்ச்சியாக வந்த விடாது கருப்பு நாடகம்.. அன்று இன்று என ஒரே எபிஸோடில் இரு கதைகளைச் சொன்னது புதுமையாய் இருந்தது. யார் அந்தக் கருப்பு என்று க்ளைமேக்ஸில் சேத்தன் வருவது என்றும் மறக்காது.

ராதிகாவின் சித்தி. தினசரி அந்த நாடகம் முடிந்தால்தான் சாப்பாடே. சூலம் சுவலட்சுமியை வார இறுதிநாளில் கொண்டாடினார்கள்.

மெட்டிஒலி முடிந்தால்தான் வீடுகளில் சட்டி ஒலி கேட்கும். அந்த நாடகத்தின் வெற்றிக்கு காரணம் இயல்பான வசனம், பெண்களின் நகைச்சுவை கிண்டல், ஹீரோ சைக்கிள்தான் ஓட்டுவார், இயல்பாய் ஒரு வீட்டில் காரை போன சுவர், ஒரே ஒரு டேபிள் ஃபேன் உள்ள வீடு என யதார்த்தத்தைக் காட்டியிருப்பார். இத்தனைக்கும் மீறி டெல்லி குமாரின் நடிப்பு. கடைசிவரை சரோ அப்பாவாகவே வாழ்ந்திருப்பார்.

Representational Image
Representational Image
Pixabay

#தொலைக்காட்சி

தொலைக்காட்சி அன்று மக்களை ஒன்றிணைக்கும் கருவியாய் இருந்தது. வாரம் ஒருமுறை பார்த்தாலும் கதை மறக்காமல் இருக்கும் நினைவுத்திறன். கையில் ரிமோட் இல்லாததால் பொறுமை இருந்தது. ரேடியோ அறிமுகமானபோது மக்களை ஊர் ஊராகப் பிரித்தது, டிவி வந்தபோது குடும்பம் குடும்பமாய் பிரித்தது, செல்போன் வந்தவுடன் தனித்தனி மனிதர்களாக பிரித்துவிட்டது. காலமாற்றத்தில் மாறாதது எதுவுமில்லை. மறக்க முடியாதவைகளின் தொகுப்பு நினைவு, நினைக்க மறந்தவைகளின் தொகுப்பு மறதி. தொலைக்காட்சி நாடகங்கள் என்றும் மறக்க முடியாத நினைவுகள்.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு