சீரியல்களின் கம்-பேக்கும் கொண்டாட்ட மனநிலையும்..! - வாசகர் பார்வை #MyVikatan

என்றாலும் மக்களோடு வாழ்வில் கலந்துவிட்ட இந்த நெடுந்தொடர்களின் மாற்றாக மக்கள் அதனை கருதவில்லை....
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
தமிழகத்தில் ஜூலை 27 முதல் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் மெகா சீரியல்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும்போது மதுப் பிரியர்கள் கொண்டாட்டமாக மிகப்பெரிய அளவில் திரண்டு அதனை வரவேற்றது நம் அனைவருக்கும் நினைவிருக்கும். மெகா சீரியல்கள் ஒளிபரப்பு என்பது தமிழகத்திலுள்ள பெருவாரியான மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு நிகழ்வாகும்.

வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்திருப்பார். அவர் ஆட்டோவில் ஏறும் மூன்று பெண்கள் சீரியலில் நடைபெறும் காட்சிகளை தங்கள் சொந்த பிரச்னை போல பேசுவர். மேலும் வடிவேலுவை விரைவாக ஆட்டோ ஓட்ட சொல்லுவார்கள். பிறகு சீரியல் போடும் நேரத்திற்கு முன்பாகவே வீட்டிற்கு செல்ல அந்த பெண்கள் வடிவேலுவை விரட்டியது தெரியவரும். அந்த நகைச்சுவை பெரிதாக வரவேற்பைப் பெற்றது. அந்த நகைச்சுவை தமிழக மக்கள் எந்த அளவிற்கு மெகா தொடர்கள் உடன் ஒன்றி இருக்கிறார்கள் என்பதை நமக்கு எடுத்துச் சொன்னது.
நமது நாட்டில் மார்ச் மாத கடைசியில் ஊரடங்கு கொண்டுவரப்பட்ட பின்பு சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. அதனால் தொடர்களுக்கான புதிய காட்சிகளை படப்பதிவு செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தொலைக்காட்சி நிலையங்களும் பழைய தொடர்களையும், பலவித திரைப்படங்களையும் திரையிட்டு இந்த காலத்தில் இயங்கி வந்தன. என்றாலும் மக்களோடு வாழ்வில் கலந்துவிட்ட இந்த நெடுந்தொடர்களின் மாற்றாக மக்கள் அதனை கருதவில்லை.

தமிழக அரசு ஜூன் 5 ஊரடங்குகளில் தளர்வு கொடுத்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கும் அனுமதிக் கொடுத்தது. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே ஜூன் 22 முதல் சென்னையில் முழு ஊரடங்கை மீண்டும் கொண்டு வந்தது. அதனால் நிறுத்தப்பட்ட தொடர்கள் மீண்டும் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ஜூலை 5 முதல் சென்னையில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட உடன் குறைந்த அளவு நபர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு மீண்டும் அனுமதி கிடைத்தது. அதன்பிறகு அனைத்து சேனல்களும் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி இப்பொழுது ஜூலை 27ம் தேதி முதல் மீண்டும் நெடுந்தொடர்களை ஒளிபரப்ப இருக்கிறது.
நெடும் தொடர்களைப் பற்றி பலவிதமான முரணான கருத்துக்கள் உள்ளன. பெண்களை வில்லத்தனமான காட்டுகிறார்கள், மக்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள், எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் விதைக்கிறார்கள் என்று பலவித குற்றச்சாட்டுக்கள் இந்தத் தொடர்களில் மீது வைக்கப்படுகிறது. என்றாலும் பல வயதான முதியவர்கள் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்கள். அவர்களோடு வாழ்க்கையில் இந்தத் தொடர்களில் கதாபாத்திரங்களே வாழ்ந்து வருகிறது என்று கூறினால் அது மிகையில்லை.
இந்தத் தொடர்களில் வாயிலாக அவர்கள் தமது துயரங்களை மறுக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த தொடர்களோடு பலர் ஒன்றி உள்ளனர் . குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் மிகப் பெரிய மன உளைச்சலில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த நெடுந்தொடர் மீண்டும் வருவது ஒரு கொண்டாட்டமான மனநிலையை கொடுத்துள்ளது.

மேலும் சின்னத்திரை சார்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை பேணி வருகிறார்கள். தொடர் முடக்கம் காரணமாக அவர்கள் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் அவர்களுக்கு சில இடங்களிலிருந்து உதவி கிடைத்தாலும் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பலர் வருமானமின்றி துன்பம் கொண்டனர். அதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அவர்கள் பணிக்குத் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கொரோனா காலத்தில் நோய் பரவும் அபாயம் இருந்தாலும் சின்னத்திரை கலைஞர்கள் மக்களை மகிழ்விக்கும் தமது பணிக்கு திரும்பியது நிச்சயம் பாராட்டுக்குரிய அம்சமாகும். அவர்களின் பங்கும் இந்த சூழ்நிலையில் ஒரு மனநல மருத்துவருக்கு ஈடான ஒரு செயல் என்று கூட கூறமுடியும் .
-ஷியாம் சுந்தர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.