Published:Updated:

New Delhi: நாயுடன் நடைப்பயிற்சி செல்லும் ஐ.ஏ.எஸ் அதிகாரி; வீரர்களை முன்கூட்டியே வெளியேற்றும் அவலம்!

New Delhi - IAS officer ( Abhinav Saha / Indian Express )

என் நாயுடன் அந்த மைதானத்திற்கு நான் அவ்வப்போது செல்வது உண்மைதான். ஆனால் மைதானம் மூடப்படும் நேரத்திலேயே அங்கு செல்வேன்.

New Delhi: நாயுடன் நடைப்பயிற்சி செல்லும் ஐ.ஏ.எஸ் அதிகாரி; வீரர்களை முன்கூட்டியே வெளியேற்றும் அவலம்!

என் நாயுடன் அந்த மைதானத்திற்கு நான் அவ்வப்போது செல்வது உண்மைதான். ஆனால் மைதானம் மூடப்படும் நேரத்திலேயே அங்கு செல்வேன்.

Published:Updated:
New Delhi - IAS officer ( Abhinav Saha / Indian Express )

டெல்லியின் தியாகராஜ் மைதானம் 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட ஒன்று. இங்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் தங்களின் பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் டெல்லியின் வருவாய் ஆணையரான சஞ்சய் கிர்வார் மாலை பொழுதுகளில் தன் நாயுடன் இம்மைதானத்திற்கு நடைப் பயிற்சிக்கு வரும் காரணத்தால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னராகவே பயிற்சிகள் முடித்துக்கொள்ளப்பட்டு அவ்வளாகத்தில் இருந்து தாங்கள் வெளியேற்றப்படுவதாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடையே புகார்கள் எழுந்தன.

தியாகராஜ் மைதானம்
தியாகராஜ் மைதானம்
Abhinav Saha / Indian Express

“ இரவு 8.00-8.30 வரை பயிற்சி மேற்கொள்வதே எங்களின் எப்போதையுமான வழக்கம். ஆனால் அதே நேரத்தில் அரசு அதிகாரி ஒருவர் நடைப்பயிற்சி செய்ய வருவதால் தற்போது 7 மணிக்கே நாங்கள் வெளியேற்றப்படுகிறோம். இதனால் எங்கள் பயிற்சிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன ” என்று கூறுகிறார் ஒரு பயிற்சியாளர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் கிர்வார் அளித்துள்ள பேட்டியில் இப்புகாரை முழுமையாக மறுத்துள்ளார். “ என் நாயுடன் அந்த மைதானத்திற்கு நான் அவ்வப்போது செல்வது உண்மைதான். ஆனால் மைதானம் மூடப்படும் நேரத்திலேயே அங்கு செல்வேன். என் நாயை ஓட்டப்பந்தய டிராக்கில் அனுமதித்ததாக வெளியாகும் செய்தி உண்மையில்லை. மேலும் வீரர்களை நான் ஒருபோதும் வெளியேறச் சொன்னதில்லை” என்றார் அவர்.

New Delhi: நாயுடன் நடைப்பயிற்சி செல்லும் ஐ.ஏ.எஸ் அதிகாரி; வீரர்களை முன்கூட்டியே வெளியேற்றும் அவலம்!

ஆனால், தினமும் மாலை விசில்கள் அடிக்கப்பட்டு 7 மணிக்கெல்லாம் மைதானம் முழுவதையும் காலி செய்யும் வேலைகளை மைதான ஊழியர்கள் பார்த்துவருவதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புகாரையும் மறுத்துள்ளார் மைதானத்தின் தலைமை நிர்வாகியான அஜித் சவுத்ரி. “ மாலை 4 முதல் 6 மணி வரையே வீரர்களுக்கு அனுமதிக்கப்படும் நேரம். வெப்பம் காரணமாக தற்போது 7 மணி வரை அனுமதிக்கிறோம்” என்று கூறும் அவரிடம் அதற்கான எந்த அரசாங்க ஆர்டரும் இல்லை.

இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் இனி இரவு 10 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.