Published:Updated:

மூன்றே மாதத்தில் அழிந்த 50 கோடி தேனீக்கள், அபாயத்தின் அறிகுறி! - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்

Representational Image ( Pexels )

தேனீக்கள் ஏன் அழிகின்றன? பிரேசிலில் மட்டும் ஐம்பது கோடி தேனீக்கள் அழிந்திருக்கின்றன. மூன்றே மாதங்களில் நடந்த துயரம் இது...

மூன்றே மாதத்தில் அழிந்த 50 கோடி தேனீக்கள், அபாயத்தின் அறிகுறி! - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்

தேனீக்கள் ஏன் அழிகின்றன? பிரேசிலில் மட்டும் ஐம்பது கோடி தேனீக்கள் அழிந்திருக்கின்றன. மூன்றே மாதங்களில் நடந்த துயரம் இது...

Published:Updated:
Representational Image ( Pexels )

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

How do we change the world? One random act of kindness at a time.

இதை சொன்னவர் ஹாலிவுட்டின் புகழ்மிக்க நடிகர் மார்கன் ஃப்ரீமன். சொன்னதை செய்தும் காட்டியிருக்கிறார். தனக்கு சொந்தமான 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையை தேனீக்கள் வாழும் இடமாக மாற்றியிருக்கிறார்.

அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் இருந்து தேன்கூடுகளை தேனீக்களுடன் வாங்கி தனது பண்ணையில் வைத்து அவ்வுயிரினங்களுக்கு சர்க்கரை கரைசலை கொடுத்திருக்கிறார். சர்க்கரை கரைசல் தான் தேனீக்களுக்கு உணவு.

மார்கன் ஃப்ரீமன்
மார்கன் ஃப்ரீமன்

பதினாறு வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா என்று கமல் சொல்வார். ஆடு கோழியை வளர்த்து சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். அது போல நாய் வளர்ப்பவர்கள் பூனை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களின் செல்லப்பிராணி. ஆனால், மார்கன் ஃப்ரீமன் தேனீக்களை ஏன் வளர்க்கிறார்? காரணத்தையும் ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சூழலியல் ஆர்வலர்கள், மிக வேகமாக குறைந்து வரும் தேனீக்கள் பற்றி மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். தேனீக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்குள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார் மார்கன் ஃப்ரீமன். எவ்வளவோ உயிரினங்கள் அழிந்து வருகிறது, அவற்றைவிட தேனீக்களுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்?

ஏனென்றால் தேனீக்கள் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன. மகரந்த சேர்க்கை இல்லையென்றால் விளைச்சல் இல்லை, விவசாயம் செழிக்காது.

Representational Image
Representational Image

தேனீக்கள் ஏன் அழிகின்றன? பிரேசிலில் மட்டும் ஐம்பது கோடி தேனீக்கள் அழிந்திருக்கின்றன. மூன்றே மாதங்களில் நடந்த துயரம் இது. இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள். அந்த பூச்சிக்கொல்லிகளை உண்ட தேனீக்கள் கோடிக்கணக்கில் அழிந்துள்ளன. பிரேசில் ஒரு விவசாய நாடு. அதன் பொருளாதாரத்தில் 18% விவசாயத்தை சார்ந்தது. அங்கே பெரிய அளவில் தேனீக்கள் மரணமடைந்திருப்பது அந்நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என கணிக்கப்படுகிறது.

உலகில் 20000 வகை தேனீக்கள் உள்ளன. அவை கூட்டமாக தேன்கூடுகளில் வாழ்பவை. ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டும் பயன்படுபவை. குளிர் காலத்தின் தொடக்கத்தில் பெண் தேனீக்கள் ஆண் தேனீக்களை கொன்று விடும். ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு (Stringers) கிடையாது. எனவே உங்களை ஒரு தேனீ கொட்டினால் அது பெண் தேனீயாகத் தான் இருக்கும். அதே போல ஆண் தேனீக்கள் தேனை சேகரிப்பதுமில்லை, அதனால் மகரந்த சேர்க்கையிலும் ஈடுபடுவதில்லை.

இனப்பெருக்கம் தவிர்த்த வேறு எந்த பயனுமற்ற, ஆண் தேனீக்கள் தேவையில்லாமல் தேன் கூட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு உணவையும் உண்டு கொண்டிருத்தல் தங்களுக்கு உகந்ததல்ல என்று பெண் தேனீக்கள் நினைப்பது தான் ஆண் தேனீக்களை அழிப்பதற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Representational Image
Representational Image

ஆண் தேனீக்களை கொன்றொழித்து விட்டு பல பெண் தேனீக்களை வேலைக்கார பெண் தேனீக்கள் வளர்க்கும். அவற்றிற்கு தேவையான போசாக்கான உணவையும் கொடுக்கும். அந்த தேனீக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு அந்தப் போரில் வெல்கிற ஒரு பெண் தேனீ ராணி தேனீயாக உருவெடுக்கும். பல பெண் தேனீக்கள் வேலைக்கார தேனீக்களாக வாழும். அவை தேனை சேகரிக்கும். அப்படி தேன் சேகரிக்கும் பொழுது மகரந்த சேர்க்கைக்கு துணை புரியும். அதன் மூலம் விவசாயம் செழிக்கும்.

அதனால் தான் ஐன்ஸ்ட்டின் சொன்னார், "தேனீக்கள் அழிந்துவிட்டால் அடுத்த நான்காண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்".

இதை உணர்ந்த மார்கன் ஃப்ரீமன் தேனீக்களை வளர்க்கிறார். அதே போல மற்றவர்களும் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன். குறைந்த பட்சம் தேனீக்களை கொல்லும் உரங்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இல்லையென்றால் பெரிய சீரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இந்தியா போன்ற விவசாயத்தை நம்பியிருக்கும் நாடுகளில் தேனீக்களின் மரணம், வரப்போகும் அபாயத்திற்கு அறிகுறி.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/